பாநயங்களில் உரிச்சொல் பயன்பாடு

                           பாடல்களுக்கு அழகு சேர்ப்பவை நயங்களே. மனப்பாடம் செய்வதற்கு எளிமையாக  இருக்கும் பொருட்டும் கவிக்கு அழகு சேர்க்கும் பொருட்டும் படிப்பவரின் மனதைக் கவரும் பொருட்டும் பாக்களில் நயங்கள் பயன்படுத்தப்பட்டன.  பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அறத்தினைப் போதிக்கும் வகையில் அமைந்த நூலான நான்மணிக்கடிகையில் பாநயங்கள் அமைந்து பாக்களை அழகுப்படுத்துகின்றன. நான்மணிக்கடிகையில் உவப்பு, நன்று, அதிர்வு என்னும் உரிச்சொற்கள் சொற்பொருள்பின்வருநிலையணி அடிப்படையில் அமைந்து சொல்லின்பத்தையும் பொருளின்பத்தையும் ஒரு சேர வழங்குகிறது. உரிச்சொற்கள் நயங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை நான்மணிக்கடிகை வழி ஆராய முடிகிறது.

அறம் கூறும் அறநெறிச்சாரம்

மானிடனுக்கு நல்வழியைக் காட்டும் நோக்கில் அறநூல்கள் பல இன்று நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றன. காலம் கடந்தாலும் அற நூல்களும் அவை புகட்டும் விழுமியங்களும் என்றும் அழியாதது. அறங்களை எடுத்துக் கூறுவதில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அவ்வகையில் முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் என்னும் அறநூல் சாற்றும் அறக்கருத்துகளை இவண் காண்போம்.

ஒளவையார்

ஒளவை என்ற பெயரில் பல பெண்பாற் புலவர்கள் இருந்ததை நமது தமிழ் இலக்கிய வரலாற்றில் காண முடிகிறது. புகழுக்குரியாரது பெயரைப் பின்வரும் தலைமுறையினர் தம் பிள்ளைகளுக்கும்ச் சூட்டுவது இன்றும் நாம் காணும மரபுதான். எனவே சங்க காலத்தில் பீடுபெற்று விளங்கிய ஒளவையாரின பெயரைப் பின்னால் பலர் பெற்றுத் திகழந்ததில் வியப்பில்லை. மேலும் ஒளவை என்றாலே அறிவு என்பதாக அறிவுக்கேயுரிய பெயராக ஒளவை என்பது வழங்கலாயிற்று என்பதும் குறிப்பிடத்தக்கது. சங்ககால ஒளவையாரைப் பற்றிக் காண்போம்.