பாண்டியர்களின் ஆளுமை
இந்திய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமையப்பெற்ற தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவர் பாண்டியர்கள். மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்கள் தமிழுக்கு அரும் தொண்டு ஆற்றியுள்ளனர். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் முதற்சங்கம,; இடைச்சங்கம,; கடைச்சங்கம் என்று அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையவர்கள் பாண்டியர்கள். இத்தகு சிறப்பு வாய்ந்த பாண்டியர்களின் ஆளுமையை புறப்பாடல் கொண்டு ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.