நூலகம் – Collection of thousands of Tamil books and magazines from Srilanka

இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற தன்னார்வ முயற்சி. மொத்த ஆவணங்கள் : 158,402 | மொத்த பக்கங்கள் : 5,786,339 ஆவண வகைகள் : அச்சு ஆவணங்கள் [1,20,041] பல்லூடக ஆவணங்கள் [37,836] சுவடிகள் [678] உசாத்துணை வளங்கள் : குறிச்சொற்கள் [126] நிறுவனங்கள் [1,913] ஆளுமைகள் [3,385] வலைவாசல்கள் [25] தகவல் மூலங்கள் : நூல்கள் [19,774] இதழ்கள் [17,332] பத்திரிகைகள் [68,998]…

அரிய சித்த மருத்துவ நூல்கள்

மூலிகை மர்மம்  வாத சுர குடிநீர் சூரணம் யூகி மாமுனிவர் பெருநூல் வைத்திய காவியம் -1000 அகத்தியர் ஊர்வசி  பஞ்சரத்தினம் 800   அகத்தியர் கேசரி நூல்  அகத்தியர் அருளிய வைத்திய ரத்தின சுருக்கம்  அகத்தியர் 2000 பகுதி 1  அகத்தியர் 2000 பகுதி 2  அகத்தியர் 2000 பகுதி 3  அகத்தியர் செந்தூரம் 300  அகத்தியர் வைத்திய சிந்தாமணி  அகத்தியர் மருத்துவம்  அகத்தியர் யால நிகண்டு  அகத்தியர் பரிபாஷை-300 அகத்தியர் பரிபூரண அகராதி  அகத்தியர கௌமதி நூல் இசை மருத்துவம்  சூழ்…

பன்முகப் பார்வையில் பெருமாள் முருகன் சிறுகதைகள்

குறிப்பு: இக்கட்டுரை தமிழ் இலக்கியத்தில் பெருமாள் முருகன் என்பவரின் சிறுகதைகள் குறித்து பன்முகப் பார்வையில் ஆராய்ச்சியை அளிக்கிறோம். அறிமுகம் பெருமாள் முருகன் தமிழின் முன்னணி சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர். அவரது கதைநிலையை வர்ணித்து, தற்காலத்தின் சிக்கல்களை, சமூகக் கோட்பாடுகளை, மனித உணர்வுகளை விவரிக்கிறார். அவரது சிறுகதைகள் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கின்றன. சிறுகதைகள் – கருவிகள் முறு சரித்திரம், கதைமயமாக்கல், அள்ளுமழுவு, சிந்தனை ஓவியம் என சில கருவிகள் படைப்பில் உள்ளன. பெருமாள் முருகன் தனது…

எயினர்கள்

எயினர்கள் வாழ்வியல் சங்ககாலம்  இலக்கிய வரலாற்றில் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது.  காரணம் அப்போது தோன்றிய எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமாகிய பதினெண்மேல்கணக்கு நூல்களில் காணலாகும் அக்காலச்சமூகம் பற்றிய பதிவுகள் ஒவ்வொரு காலத்தும் தோன்றிய இலக்கியப்படைப்புகள் அந்தந்த கால மக்கள், அவர்களின் பழக்கவழக்கங்கள். பண்பாடுகள், நம்பிக்கைகள், வாழ்வியல் முறைகள் போன்றனவற்றை  காலம்தாண்டியும் உணர்த்தி நிற்கும் கருவூலமாய்த் திகழ்வதேயாகும். அந்த வகையில் சங்ககாலச் சமூகத்தின் ளெிப்பாடாய்க் காணப்படும் செம்மொழி இலக்கியங்களில் காணலாகும்  எயினர்களின் வாழ்வியலைப் பற்றியதாக இக்கட்டுரை அமைகின்றது. எயினர்கள் மணல் சார்ந்த…

சமகாலத் திறனாய்வுகள்

படைப்பிலக்கியம் என்பது வாழ்க்கையின் விளக்கமாகும். திறனாய்வு வாழ்க்கை விளக்கமாகிய அப்படைப்புகளின் விளக்கமாகும். என்ற கூற்று திறனாய்வின் இன்றியாமையை விளக்குகின்றது. ஓர் படைப்பாளனின் சிறந்த அனுபவமே படைப்பாகின்றது. அவ்வனுபவத்தின் மதிப்பினை அளவிடுவதே திறனாய்வின் நோக்கமாகும். சிறந்ததை, உயர்வனதைக் கண்டறிந்து தன்னலமற்ற முறையில் பரவலாக்குவது, அறச்சிந்தனை உணர்வினை விளக்குவது, இலக்கியத்தின் குறைநிறைகளைக் காண்பது, கலைஞனின் கூற்று – அதன் வெற்றி – அதன் தகுதி ஆகிவற்றை காண்பது, கலையினை நுண்ணறிவுக் கொண்டு உணர்த்தி  அதன் தரத்தினை மதிப்பிடுவது என்று திறனாய்விற்கான…

அள்ளுா் நன்முல்லையார் பாடல்கள் காட்டும் சங்ககால மகளிர்நிலை

சங்க இலக்கியச் சிறப்பு தமிழ்மொழியின் நீடித்த நிலைத்த தன்மைக்கு வளமும் பலமும் பொருந்திய வேராகத் திகழ்வது சங்க இலக்கியமாகும். பாட்டும் தொகையுமாகப் பாடப்பட்ட சங்க இலக்கியம் அக்கால மக்களின் வாழ்வியலுடன் இரண்டக் கலந்த ஒன்றாகும். சங்கப் புலவா்கள் சமூகப் பொறுப்பு உடையவா்களாகத் திகழ்ந்தனா். அவா்கள் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்தவற்றையும் அக்காலப் பழக்க வழக்கங்களையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பதிவுசெய்து, தமது நுண்மான் நுழைபுலத்தையும் சமூகக் கடமையையும் வெளிப்படுத்தியுள்ளனா். ”தமிழ்மொழி செம்மொழியாக உலக அரங்கில் ஏற்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்தவை சங்கக்…

நான்மணிக்கடிகை காட்டும் பெண்ணியம்

செம்மொழியான தமிழ்மொழிக்குரிய இலக்கியம் பல்வேறு வடிவங்களில் விளங்குகின்றன. அவற்றுள் நவீன இலக்கியங்கள் இன்றையக் கால சமூகத்தின் பாடுபொருளாக விளங்குகின்றன. இன்றைய சமுதாயப் பாடுபொருள்களில் ஒன்று பெண்ணியம் பற்றியக் கருத்தாக்கங்கள். பண்டைய இலக்கிய இலணக்கண நூல்களும் பெண்ணியம் பற்றிப் பேசினாலும், இன்றுதான் அவைகள் தனி இலக்கிய வடிவம் பெற்றுள்ளன. இன்றைய தனி இலக்கிய வகையாக விளங்குவது நான்மணிக்கடிகை. அந்நூலில் பயின்றுவரும் பெண்ணியம் பற்றி ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும். பெண்ணியம் விளக்கம் ஆங்கிலத்தில் ‘‘Feminisam’ என்று வழங்கும் கலைச் சொல்லையே…

பாரதிதாசன் பார்வையில் தொழிலாளர்கள் நிலை

இருபதாம் நூற்றாண்டினை ஒரு தொழிற்புரட்சிக் காலம் என்று சொல்லலாம். சமுதாயத்தில் பெரும்பாலோராக இருப்பவர்கள் உழைக்கும் மக்களே. இவ்வுலகம் இயங்குவதற்கும் மனித வாழ்வில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் மாற்றங்களுக்கும் உழைப்பின் பயனே அடிப்படையாக அமைகின்றன.. எனவே தொழிலாளர்களைச் சமுதாயச் சிற்பிகள் என்றும் சமுதாய மாற்றத்திற்குக் கிரியா ஊக்கிகள் என்றும் கூறுவர். இதனை உணர்ந்த தமிழ்க் கவிஞர்கள் உழைப்பின் பெருமையையும் உழைப்போரின் இழிநிலைமையையும் அவர்களைச் சுரண்டிப் பிழைக்கும் முதலாளிகளின் ஈவிரக்கமற்ற அலட்சியப் போக்கினையும், உழைப்பாளர்கள் வாழ்க்கையில் அடைய வேண்டிய நல்வாழ்வையும்…

பாரதியின் சமுதாயச் சிந்தனையும் , கல்விச் சீர்திருத்தமும்

முன்னுரை குழந்தைகள் ஒரு குடும்பத்திற்கு மகிழ்வ10ட்டும் செல்வங்கள்.  மொட்டாக அரும்பி, மலர்களாக மலர்ந்து மணம் வீசுங்கால் அந்தக் குடும்பம் குதூகலத்தில் குலுங்கும்.  சிறப்பும் மேன்மையும் அடையும்.  குழந்தைகள்தான் நாட்டின் எதிர்காலச் சிற்பிகள்.  குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் அணிகலன்கள்.  மகாகவி பாரதியும் அவரது பரந்த பார்வையில்  குழந்தைகள் நலனுடனும் சிறப்புடனும் எவ்வாறு வளர்க்கப்பட வேண்டும், அவர்களது அறிவுத்திறன் சிறப்புற பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் பொறுப்பு என்ன? என்பதை அவரது ஆத்மார்த்த சிந்தனையில் உதித்த அவரது எண்ணங்களைப் பதித்துள்ளார். …