குறிஞ்சி, முல்லை நிலப் பொது மக்களின் புற வாழ்க்கை
முதன்முதலில் மக்கள் தோன்றிய இடம் மலையுச்சி. ஆகவே இங்கு மக்கள் விலங்குகளாக வாழ்ந்து நாளடைவில் விலங்கு வாழ்வினின்றும் வேறுபட்ட நாகரிக வாழ்வை தொடங்கிய இடமும் குறிஞ்சி நிலப்பகுதி எனலாம். வேட்டையாடல்:- குறிஞ்சி நில மக்களின் முக்கியத் தொழில் வேட்டையாடுதல், தினைப் பயிரிடல், விலங்குகள் வளர்த்தல் போன்றவையாகும். பண்டைய மனிதன் முதன் முதலாக வேட்டையாடு தலையே மேற்கொண்டான் என்பதை ‘கலைக்களைஞ்சியம்’ குறிஞ்சி நிலப் பொதுமக்களின் உணவு வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சியே. மான், முயல், உடும்பு, நரி, முதலிய விலங்குகளை…