“செடல்” நாவலில் மதமாற்றத்திற்கான பின்புல அரசியல்

தமிழக நிலபரப்பு ஐவ்வகையான நில அமைப்பைக் கொண்டுள்ளது. இங்குள்ள நிலஅமைப்புக்கேறிய ஐவ்வகையான தெய்வ வழிபாடுகளை மக்கள் வழிபட்டு வந்தனர். அதில் குறிப்பாக சிறுதெய்வ வழிபாட்டு முறையே மக்கள் கையாண்டு வந்தனர். இதனை ஆரியர் வருகைக்குப் பின் இந்நிலமைப்பில் சிறுதெய்வ வழிபாட்டு முறை மாறி, அனைத்தும் பெருதெய்வ வழிபாட்டு முறையாக மடைமாற்றம் செய்தனர். இதனால் மக்கள் குழப்பத்திற்குள்ளாகிய ஆரியர் வருகையினால் சிறுதெய்வ வழிபாடு பெரிதும் முடங்கின. இந்நிலையில் தமிழகத்தில் இந்துத்துவம் மிகவும் காலுன்றியது எனலாம். இந்துவத்தினால் இங்குள்ள மக்கள்…

தமிழ் இலக்கியங்களில் நீதி

மக்களின் வாழ்க்கையை முழுமை படுத்தவும் செம்மைப் படுத்தவும் எழுந்தவை தான் நீதி இலக்கியங்கள் எனப் பொருள் கொள்ளலாம். மனிதன் வாழ்க்கையில் எதனைப் பின்பற்ற வேண்டும் எதனைப் பின்பற்றக் கூடாது என்று சொல்லுவதுதான் நீதிநூல்கள். மக்களின் செயல்பாடுகளை நெறிப்படுத்துவதற்கு ஓர் அளவுகோலாக இலக்கியங்கள் விளங்குகின்றன. சங்க இலக்கியமான புறநானூறு; அற இலக்கியமான திருக்குறள், நாலடியார் போன்றவை நீதியை எடுத்தியம்பும் உயர்ந்த நோக்கில் இவ்வாய்வு அமைகின்றது. மனித சமுதாயத்தில் நீதி கோட்பாடுகள் பழந்தமிழர்கள் கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழும் மக்களாக விளங்கினர்.…

தலைமைக்கும் தனிமனிதனுக்கும் நெறியுரைக்கும் சூளாமணி

தமிழ் இலக்கிய வரலாற்றில் காப்பியகாலம் என்று தனித்துச் சுட்டும் அளவிற்கு ஐம்பெருங்காப்பியங்களும் , ஐஞ்சிறுகாப்பியங்களும் தோன்றி மக்களுக்கு சுவையுடன் கூடிய நன்னெறிகளை வழங்கியது என்பது மறுப்பதற்கில்லை. சமணக்காப்பியங்களும், பௌத்தக்காப்பியங்களும் தோன்றி தமிழ் இலக்கியத்திற்குச் செய்துள்ள தொண்டுகள் மிகப்பலவாகும். மக்களை நன்கு புரிந்துகொண்டு அவர்கள் ஏற்று நடக்கும் வகையில் நல்லசிந்தனைகளை, நன்னெறிகளை ‘தேனுடன் கலந்த நோய் தீர்க்கும் மருந்தினைப்போலத்’ தந்த நல்லதொரு காப்பியம் சூளாமணியாகும். சமணர்கள் சீவக சிந்தாமணிக்குப் பிறகு போற்றும் காப்பியம் இச்சூளாமணியாகும். இது வடமொழியிலுள்ள மகா…

பாரியும் பனையும்

முன்னுரை உலகின் மூத்த மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக விளங்க கூடியது தமிழ்மொழி ஆகும்.  தமிழ்மொழியின் பெருமைகளைத் தலைமுறைத் தலைமுறையாக இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிந்துகொள்ள முடிகின்றது.  அத்தகைய இலக்கியங்கள் பல இலக்கிய வகைமைகளைத் தோற்றுவிக்கின்றன.  தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு எண்ணற்ற இலக்கிய வடிவங்கள் தோன்றின.  இது காலத்தின் தேவையாக இருக்கின்றது.  அந்த வகையில் சங்க இலக்கியத்தை மூலமாகக் கொண்டு அண்மையில் ஆனந்த விகடனில் 111 வாரமாக ‘வீரயுகநாயகன் வேள்பாரி’ என்ற வரலாற்றுத் தொடர்…

திருக்குறளில் நீதிக் கருத்துக்கள்

முப்பால், உத்தரவேதம், தமிழ்மறை, உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, என்னும் சிறப்பினைப்பெற்ற அரியநூல் திருக்குறள். இந்தக் குறள் வெண்பாவைவிடச் சிறந்த நூல்கள் இருந்தாலும் அந்த நூல்கள் இனம், மதம், மொழி, குலம், நாடு என்கின்ற கட்டுப்பாட்டிற்குள் சிக்கித் தவிக்கின்றது. இந்த முப்பால் மட்டும்  எந்தப் பிரிவினைக்குள்ளும் சிக்காமல், எந்தக் காலத்திற்கும் பொருந்துவதான பொதுமைக் கருத்தினைச் சுமந்து நிற்கின்றது. குறளில் கூறப்பாடாத செய்திகளே இல்லை எனும் அளவிற்கு அனைத்துக் கருத்துக்களும் பொதிந்து கிடக்கின்றன. இவ்வாறான பல சிறப்புக்களை உள்ளடக்கிய…

நாணற்காடன் சிறார் கதைகளில் இயற்கையும் அறிவியலும்

முன்னுரை தமிழில் சிறார் இலக்கியங்கள் என்பது மிகவும் அரிதாக இருக்கின்ற நிலையில், நாணற்காடன் குழந்தைகளுக்கான கதைகளை எழுதி வருகின்றார். அந்த வகையில், தன் முகநூல் பக்கத்தில் கடந்த ஏப்ரல் 11/04/2020 முதல் 30/04/2020 வரை வெளியிட்டுள்ள சிறார் கதைகளில் இயற்கை மற்றும் அறிவியல் பற்றி இக்கட்டுரையில் எடுத்துரைக்கப்படுகிறது. ஆசிரியர் அறிமுகம் நாணற்காடன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் என்ற ஊரைச் சார்ந்தவர். தனியார் பள்ளியில் கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக இந்தி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கூப்பிடு தொலைவில்,…

ஈரோடு தமிழன்பனின் சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகள்

முன்னுரை தமிழில் சென்ரியு கவிதையின் உள்ளடக்கம் குறித்து சரியான புரிதல் அற்ற நிலை காணப்படுகிறது. பல சென்ரியு கவிதைகள் ஹைக்கூ என்று அழைக்கப்படும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹைக்கூவும் சென்ரியுவும் வடிவ அளவில் ஒன்றாக தோன்றினாலும் கருத்தளவில் இரண்டும் வெவ்வேறானவை. மனித நடத்தைகளையும் சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் சிக்கல்களையும் அடிப்படையாக கொண்டு படைக்கப்படுவது சென்ரியு. ஹைக்கூவின் சென் தத்துவம், புரிதல் அற்ற தன்மை, வார்த்தைகள் தேர்ந்தெடுப்பு ஆகிய இறுக்கமான கட்டுப்பாடுகளை கொண்டது. சென்ரியு எவ்விதமான கட்டுபாடுகளும் இன்றி…

கிறித்துவ சமய மக்களின் விழாக்களில் நாட்டார் பண்பாட்டின் தாக்கம் (விழுப்புரம் மாவட்டம்)

முன்னுரை தமிழ்நாட்டில் இந்து, இஸ்லாமியம், கிறித்தவம், ஆகிய பல தரப்பட்ட சமயங்களைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றன. பல சமயத்தைச் சார்ந்த மக்கள் தங்களின் நிறுவனங்கள் கட்டமைத்துள்ள முறைகளையும், வழிபாடுகளையும், பின்பற்றுகின்றனர். மக்கள் தங்கள் சமய சட்டங்களை கடைபிடித்தாலும், வெகுசன மக்களாகிய அவா்களின் உள்ளங்களில் உயிராய் கலந்துகிடக்கின்ற நாட்டார் பண்பாட்டின் தாக்கம் அவா்களின் வாழ்வில் விழாக்களில் அதிகம் காணப்படுகின்றன என்று பல நாட்டார் வழக்காற்றியல் அறிஞா்கள் கூறுகின்றனர். நாட்டார் பண்பாடு தென்தமிழக, கிறித்துவ மக்களின் விழாக்களில் பரந்து விரிந்த…

ஒப்பாரியும் உணர்வு வெளிப்பாடும்!

முன்னுரை: ஏட்டு இலக்கியம் தோன்றுவதற்கு முன்பே வாய்மொழி இலக்கியம் தோன்றியது.  வாய்மொழி  இலக்கியங்களில் பாட்டு ஒரு இலக்கியம்தான்.  ஒப்பாரி என்பது இறந்தவர்களை நினைத்து அழும் பெண்கள் பாடுவதாகும்.  நாட்டுப்புற மக்களின் பிறப்பிடமான மரபு பண்பாடு, நாகரிகம், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் இவற்றோடு இரண்டறக் கலந்து விட்ட நாட்டுபுறப்பாடல்களில் ஒப்பாரிப் பாடலின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறப்படுகிறது.  ஒப்பாரியைப் பற்றி பாடும் பொழுது இறந்தவர்களின் சிறப்புகளைப் பற்றி பாடுவார்கள் தொன்மைக் காலத்தில் ஒப்பாரியை கையறுநிலைப்பாடல், புலம்பல், இரங்கற்பா, சாவுப்பாட்டு,…

நற்றிணையில் கடற்பெயர்கள்

முன்னுரை கடல் என்னும் நீர்நிலையானது, நீர் நிலைகளில் தனித்துவமான ஒன்றாகும். வருடம் முழுவதும் நீரினைக் கொண்டதாகக் கடல் திகழ்கின்றது. அதன் பிரம்மாண்ட அளவும், அது கொண்ட நிறமும், அதன் செயல்பாடும் கொண்டு கடலை பல்வேறு பெயர்களில் நற்றிணைப் புலவர்கள் பதிவு செய்துள்ளனா். ஆசிரியப்பா என்னும் இலக்கண வடிவத்தில் கவிபுனைந்த புலவர்கள், கடற் பெயர்களை அவரவர் புலமை அனுபவத்தில் செம்மையான சொற்செட்டுமானத்துடன் படைத்திருப்பதை நற்றிணைப் பாடல்களின் வழி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். கடலும் அதன் குடிவழிகளும் தமிழன் பயன்படுத்திய…