Skip to content
களஞ்சியம் பன்னாட்டு தமிழ் ஆய்விதழ்
E-ISSN: 2456-5148
Facebook page opens in new windowTwitter page opens in new windowDribbble page opens in new window
KALANJIYAM
International Journal of Tamil Studies
KALANJIYAM
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்
Submit Research PapersSubmit Article
  • Homeமுதல் பக்கம்
  • KIJTSகளஞ்சியம்
    • Current Issue
    • Submit Articleto KIJTS
    • Archives
    • Aim and Scope
    • Editorial Board
    • Indexing
    • Publisher
  • Instructionsகுறிப்புகள்
    • Publication Ethics
    • Author Instruction
    • Plagiarism Policy
    • Reviewer
      • Reviewer Online Registration
  • Special Issuesசிறப்பு வெளியீடு
    • Submit Articlesto Special Issue
    • Browse Article
    • EBooks
  • News & Eventsசெய்திகள், அறிவிப்புகள்

Archives: 2020

You are here:
  1. Home
  2. Article

சேனாவரையர் உரையில் பெயர்கள்

By adminJune 19, 2023

சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு ஆகச்சிறந்த உரை நல்கியுள்ளார். சேனாவரையரின் பெயரே விவரணையாக விரிவடைகிறது. சேனாவரையின் உரைப்புலப்பாட்டுச் செறிவில் பெயர்கள் என்ற ஒற்றைக் கருதுகோளைக் கொண்டு கற்றையான செய்திகளை அணுகும் ஆய்வுக்களமாக இக்கட்டுரை இயங்குகிறது.

சிவகாசி வட்டாரத்தில் ஒயிலாட்டக்கலை

By adminJune 19, 2023

நாட்டுப்புற நிகழ்த்துக்கலைகளில் ஒன்றாக ஒயிலாட்டகலைக் குறித்தும் அக்கலை சிவகாசி வட்டாரத்தில் நலிவடைவதை மீட்டுருவாக்கம் செய்யும் பொருட்டு இளையநிலா ஒயிலாட்டக்கலைக்குழு நிகழ்த்தப்பட்டு வருவதை குறித்து ஆய்வதாக இக்கட்டுரை நோக்கமாக அமைகிறது.

சங்கஇலக்கியத்தில் பழந்தமிழர் பண்பாடு ( உணவு , உடை ,பழக்கவழக்கங்கள்)

By adminJune 19, 2023

பழந்தமிழர் வாழ்வு நிலம் சார்ந்து அமைந்தது. ஐந்நில வாழ்வே ஐந்திணைகளாக மலர்ந்து மணம் பரப்பியது. இத்தகைய திணை சார்ந்த வாழ்வியலைத் தான் சங்க இலக்கியம் கட்டமைத்துள்ளது. மனிதன் வாழ்ந்த, வாழும் வாழ்வியலைப் பதிவு செய்யும் மூலங்களுள் இலக்கியம் குறிப்பிடத்தக்க ஒன்று. இலக்கியம் மக்கள் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பார் சான்றோர். இலக்கியம் வாழ்வியலை மட்டுமன்று காலத்தையும் பிரதிபலிக்கும், பதிவு செய்யும் சிறந்த ஆவணமாக விளங்குவதற்குச் சிறந்த சான்று சங்க இலக்கியங்களே. மனிதன் தான் வாழும் புவியியற்ச் சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை முறைகளை வகுத்துக் கொள்கின்றான். “வாழும் நிலத்தின் இயல்புக்கு ஏற்றவாறு மக்களின் வாழ்க்கை முறையும் பண்பாடும் அமையும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் முடிபாகும்”.1 சங்கத் தமிழரின் வாழ்வியலை அறிந்து கொள்ள நமக்குக் கிடைக்கும் ஒரே ஆதாரமாகச் சங்க இலக்கியங்கள் விளங்குகின்றன. எனவே தான் “பண்டைக் காலத்துத் தமிழ் மக்களுடைய தினசரி வாழ்க்கை நெறியை அவர்கள் இயற்றியுள்ள பாடல்களிலிருந்து ஊகிப்பதே தக்கதாகும் என்று வையாபுரிப்பிள்ளையும் பண்டைத் தமிழரின் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதற்கான ஆதாரங்களாகச் சங்க இலக்கியங்களையே குறிப்பிடுகிறார்” 2. மக்கள் வாழ்வியலின் இன்றியமையா கூறுகளான உறைவிடம், உணவு, உடை, தொழில், தெய்வம், மொழி, அரசியலமைப்பு, விருந்தோம்பல், ஒற்றுமை உணர்வு போன்ற பண்பாட்டுக்  கூறுகள்  அமைகின்றன. சங்கத்தமிழரின்  பண்பாட்டுக் கூறுகளுள்  சிலவற்றை மையப்படுத்தியதாக  இவ்வாய்வுரை  அமைகின்றது .

சங்க காலத்தின் எழுதிணை மரபுகள்

By adminJune 19, 2023

ஏழு வகை புறத்திணைகளை தொல்காப்பியர் கூறுகிறார். அவை வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பன. ஐந்திணைக்கு மலர்களின் பெயர்களைச் சூட்டியது போலவே புறத்திணை வகைக்கு மலர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இவற்றுள் பாடாண் திணைக்கு மட்டும் மலரின் பெயர் சூட்டப்படவில்லை. பிற்காலத்து இலக்கணங்களில் புறத்திணை பன்னிரண்டு வகையாக விரித்துக் கூறப்பட்டன.

சங்க கால உணவு முறைகள்

By adminJune 19, 2023

உயிர்வாழ உணவு மிக முக்கியமான ஒன்று. ஆரோக்கிய உணவு என்றாலே நாம் அனைவரின் நினைவுக்கு வருவது, வீட்டில் அம்மா சமைத்துக் கொடுக்கும் உணவுகள் தான் நமக்கு தேவையான சத்துக்களைத் தரக்கூடிய உணவுகளை போதுமான அளவிற்கு உண்பது தான் ஆரோக்கிய உணவு என்பதாகும். அப்படிப்பட்ட உணவு வகைகளை நமது சங்க கால மக்கள் சமைத்து உண்டு மகிழ்ந்தனர் என்பததைத்தான் இக்கட்டுரையில் காண போகிறோம்.

சங்க இலக்கியத்தில் தமிழ் எழுத்துருக்கள்

By adminJune 19, 2023

கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ்க் குடியின் தொடர்பாடல்கள் பற்றிய செய்திகள் காலத்திற்கும் அப்பாற்பட்டவையாக அமைந்துள்ளது. எழுத்துருக்கள் பற்றிய செய்திகள் தொல்காப்பியத்தில் விவரமாக எடுத்துரைக்கப் பட்டுள்ளன எனினும் அது குறிப்பிடும் மூல நூல் அகத்தியம் பற்றி நாம் அறியாததால் எழுத்துருக்களின் வளர்ச்சியின் ஆரம்பம் குறித்து நம்மால் தெளிவாக எடுத்துக்கூற இயலவில்லை. இருப்பினும் சங்க காலம் சுட்டும் எழுத்துருக்கள் பற்றிய செய்திகளை இங்கு காண்போம்.

சங்க இலக்கியத்தில் சூழலியல்

By adminJune 19, 2023

இன்றைய காலகட்டத்தில் மனிதர்களிடம் காண்கின்ற சுற்றுச்சூழல் பற்றிய சிந்தனைகள் பழந்தமிழரிடத்தும் இருந்துள்ளமைப் பற்றி இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.
சங்க இலக்கியத்தில் சூழ் என்ற வினை சூழ்ந்திருத்தல், படர்தல், ஆராய்தல், கருதுதல், ஆலோசித்தல் என்று ஒரு சொல் பல பொருளாகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மனித வாழ்வு பிறரையும், பிற பொருள்களையும் சூழ்ந்த வாழ்வாக அமைந்துள்ளது. சூழ்தல் என்பது மனிதன் சுற்றியுள்ள பகுதிகளைக் குறிப்பதாகும்.
பழந்தமிழர்கள் காடுகளை அழித்து நாடாக்கி வாழ்வது நாகரிகமாகக் கருதப்பட்டது. அதன் சமன் நிலையை குளம் போன்று உருவாக்கி பேணிப் பாதுகாத்துள்ளனர். ஐம்பூதங்களின் அவசியத்தை,
“மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல”
என்ற புறநானூற்றுப் பாடல் மானிடத்தின் தேவைக்குப் பயன்பட வேண்டும் என்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் சூழலியல் சார்ந்த சிந்தனை இருந்தமை அறியமுடிகிறது.

கலித்தொகை காட்டும் வாழ்வியற் போதனைகள்

By adminJune 19, 2023

மனித நல்வாழ்வுக்கான போதனைகளை கூறுவதில் தமிழ் இலக்கியங்கள் காத்திரமான பங்கு வகிக்கின்றன. தழிழ் இலக்கியங்களுள் ஒன்றானகவும் சங்கத் தொகை நூல்களுள் ஒன்றாகவும் விளங்கும் கலித்தொகையில் மனித வாழ்வை மேம்படுத்தும் வாழ்வியற் போதனைகள் பல காணப்படுகின்றமை குறிப்பிடற்குரியதாகும்.
சங்க இலக்கியங்கள் என்று போற்றப்படும் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் பழந்தமிழரின் நற்பண்புகளையும் சமூக வாழ்வியலையும் எடுத்தியம்புகின்றன. மொழிக்கு இலக்கணம் வகுத்த நம் முன்னோர்கள் மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்ற வாழ்வியல் நெறியை வகுத்துச் செம்மையாக வாழ்ந்துள்ளமையை சங்கத்தமிழ் நூல்கள் முலம் நாம் அறியமுடிகிறது. “கல்வி வல்லார் கண்ட கலி” (கனகசபாபதி, தை.ஆ., 1937, கலித்தொகை மூலமும் விளக்கவுரையும் – பாலைக்கலி, ப.ஒi) என்று சிறப்பித்துக் கூறப்படும் கலித்தொகையிலும் தமிழர்களின் வாழ்வியல் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடற்பாலது. பழந்தமிழரின் வாழ்வியலைப் படம் பிடித்துக்காட்டும் பெட்டகமாகத் திகழும் இந்நூலின்கண் கூறப்படும் வாழ்வியற் போதனைகளை ஆராய்வதாகவே இக்கட்டுரை அமைகிறது.

கரூர் மாவட்ட கும்மிப் பாடல்கள்

By adminJune 19, 2023

வாழையடி வாழையாக மக்கள் வாய்மொழியாகவே போற்றிப் புகழ்ந்து வரும் எண்ணற்ற எழுதாத இலக்கியங்களாக வாழும் இலக்கியமாக திகழ்வது நாட்டுப்புறப் பாடல்கள். மக்கள் தங்களின் வாழ்க்கையில் நிகழும் அனைத்து நிகழ்வுகளுக்கும் (பிறப்பு முதல் இறப்பு வரை) பாடல்கள் பாடி இருந்துள்ளனர். கிராமப்புற மக்களின் வாழ்வியல் சூழ்நிலைகளை உள்ளதை உள்ளவாறு பாடுவது கிராமியப் பாடல்கள் என்று கூறலாம். அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியான கரூர் மாவட்ட மக்களின் கும்மிப் பாடல்கள் பற்றி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

எதிர்காலத் தமிழ் இலக்கியங்கள்- தமிழின் அடுத்த பொற்காலத்தின் அடித்தளம்

By adminJune 19, 2023

இன்றையமாணவர்களின்மொழிஅறிவு, ஒருமொழியின் இலக்கிய எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதைக் கணிக்கும் கருவியாக உள்ளது.   தமிழ்மொழியில் இன்று பலபிரபலஎழுத்தாளர்கள்தமிழ்மொழியில்இருந்தாலும், பல எழுத்தாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் சுயமாக அச்சிலும் மின்னூல்களாகவும் பலவகை இலக்கியங்களை தமிழில் படைத்து இருந்தாலும் மாணவர்களுக்கான தமிழ் இலக்கியங்கள் மிகக்குறைவாகவே உள்ளன. அப்படிக்கிடைக்கும் நூல்கள் பல அவர்களின் பள்ளிப்பாடமாகவோ அல்லது, பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டதாகவோ மட்டுமே அமைந்து உள்ளன.  பள்ளிகல்லூரி அறைகளைத்தாண்டி  மாணவர்கள் தமிழ்மொழியை இலக்கியங்களை அணுகுகின்றனரா என்பதும் சந்தேகமே! தொலைக்காட்சி திரைப்படம் இவற்றைத்தாண்டி சமூகவலைதளங்கள், கணினிவிளையாட்டுக்ள் ஆகியவற்றிலேயே அவர்களின் நேரம் செலவாகின்றது. கணினிச் சூழ்நிலையிலும்மாணவர்களுக்கானதமிழ்என்றசூழ்நிலைஅறவேஇல்லைஎன்றுகூறும்வகையில்மிக் குறைவாகஉள்ளன. இப்படிப்பட்டச்சுழலில்தாய்மொழிஒருஅந்நியமொழியாகமாறிவிடவாய்ப்புக்கள்அதிகம்.

→12→
Copyright © 2023 KALANJIYAM - International Journal of Tamil Studies. All Rights Reserved.

AcadmicPlus.org

Go to Top
ajax-loader