- நெறிமுறைகள் Policies
வெளியீட்டு அறநெறி Publication Ethics and Malpractice Statement
வெளியீட்டு அறநெறிக் குழுவின் (COPE) வழிகாட்டுதல்களையும் அடிப்படை நடைமுறைகளையும் களஞ்சியம் பின்பற்றுகிறது. இதழாசிரியர், மதிப்பாய்வாளர், கட்டுரையாளர், வெளியீட்டாளர் ஆகியோரின் கடமைகளை இந்த அறிக்கை விளக்குகிறது.
Kalanjiyam follows the guidelines and Core Practices of the Committee on Publication Ethics (COPE). This statement sets out the duties of editors, reviewers, authors and the publisher.
ஒரு பார்வையில் At a glance
- நெறி FrameworkCOPE Core Practices
- முறைகேடு MisconductCOPE வரைபடங்களின்படி handled with the COPE flowcharts
- செயற்கை நுண்ணறிவு AIகட்டுரையாளராக முடியாது; பயன்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் not an author; use must be disclosed
- இருமுறை வெளியீடு Duplicate publicationஎந்த மொழியிலும் அனுமதி இல்லை not allowed in any language
எங்கள் உறுதிப்பாடு Our commitment
COPE அடிப்படை நடைமுறைகளையும், அறிவியல் வெளியீட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் சிறந்த நடைமுறைக்கான கொள்கைகளையும் இதழ் பின்பற்றுகிறது; வெளியீட்டில் பங்குபெறும் ஒவ்வொருவரின் கடமைகளையும் கீழே காணலாம்.
The journal follows the COPE Core Practices and the Principles of Transparency and Best Practice in Scholarly Publishing; the duties of everyone involved in publishing are set out below.
இதழாசிரியர்களின் கடமைகள் Duties of editors
- கட்டுரையாளரின் அடையாளம், நிறுவனம், நாடு, பாலினம், சமயம், நம்பிக்கை எதையும் பொருட்படுத்தாமல், கல்வித் தகுதியை மட்டும் கொண்டு கட்டுரைகளை மதிப்பிடுதல். Judge manuscripts on academic merit alone, regardless of the authors’ identity, institution, nationality, gender, religion or beliefs.
- சமர்ப்பிப்புகளை இரகசியமாக வைத்து, தொடர்புடைய மதிப்பாய்வாளர்களுடனும் ஆசிரியர்களுடனும் மட்டும் பகிர்தல். Keep submissions confidential and share them only with the reviewers and editors involved.
- முரண்படும் நலன்களைத் தெரிவித்து, தங்கள் சொந்தக் கட்டுரைகள் உட்படத் தொடர்புடைய கட்டுரைகளிலிருந்து விலகியிருத்தல். Declare conflicts of interest and step aside from the papers concerned, including their own submissions.
- முறைகேடு ஐயம் எழும்போது COPE செயல்வழி வரைபடங்களின்படி நடவடிக்கை எடுத்தல்; தேவைப்படின் திருத்தம், கவலை அறிவிப்பு, திரும்பப் பெறுதல் ஆகியவற்றை வெளியிடுதல். Act on suspected misconduct following the COPE flowcharts, and publish corrections, expressions of concern or retractions when needed.
மதிப்பாய்வாளர்களின் கடமைகள் Duties of reviewers
- நடுநிலையான, ஆக்கபூர்வமான அறிக்கையை உரிய காலத்தில் – பொதுவாக 10 நாள்களுக்குள் – அளித்தல். Give objective, constructive reports on time – normally within 10 days.
- கட்டுரையாளர் குறிப்பிடாத தொடர்புடைய ஆய்வுகளையும், பிற வெளியீடுகளோடு ஒப்புமை இருப்பின் அதையும் சுட்டிக்காட்டுதல். Point out relevant published work the authors have not cited, and any suspected overlap with other publications.
- கட்டுரைகளை இரகசியமாக வைத்தல்; வெளியாகாத உள்ளடக்கத்தைத் தம் பணிக்குப் பயன்படுத்தாமலும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளில் பதிவேற்றாமலும் இருத்தல். Keep manuscripts confidential; never use unpublished material in their own work or upload it to AI tools.
- முரண்படும் நலன்களைத் தெரிவித்தல்; நடுநிலை இயலாதபோது மதிப்பாய்வை மறுத்தல். Declare conflicts of interest, and decline when they cannot stay impartial.
கட்டுரையாளர்களின் கடமைகள் Duties of authors
- எந்த மொழியிலும் வெளியாகாத, வேறு எங்கும் பரிசீலனையில் இல்லாத அசல் ஆய்வைச் சமர்ப்பித்தல். Submit original work that has not been published in any language and is not under consideration elsewhere.
- எல்லா மூலங்களையும் குறிப்பிடுதல்; கணிசமான பங்களிப்புச் செய்தவர்களை மட்டுமே இணை ஆசிரியர்களாகச் சேர்த்தல். Acknowledge all sources, and list as co-authors only those who made a substantial contribution.
- மனிதர்களை உள்ளடக்கிய ஆய்வுக்கு அறநெறிக் குழு ஒப்புதலும் தகவலறிந்த இசைவும் பெற்று, அதைக் கட்டுரையில் குறிப்பிடுதல். Obtain ethics approval and informed consent for research with human participants, and say so in the paper.
- நிதியுதவி, முரண்படும் நலன்கள், செயற்கை நுண்ணறிவுக் கருவிப் பயன்பாடு ஆகியவற்றைத் தெரிவித்தல். Disclose funding and conflicts of interest, and describe any use of AI tools.
- வெளியான கட்டுரையில் பிழை கண்டால் உடனே ஆசிரியருக்குத் தெரிவித்துத் திருத்தத்துக்கு ஒத்துழைத்தல். Report errors found in published work to the editor promptly and help correct them.
வெளியீட்டாளரின் கடமைகள் Duties of the publisher
- என்.ஜி.எம். கல்லூரியின் நூலக மற்றும் தகவல் அறிவியல் துறையும் தமிழ்த் துறையும் ஆசிரியர் குழுவின் சுதந்திரத்தைக் காக்கின்றன. The Department of Library and Information Science and Department of Tamil, Nallamuthu Gounder Mahalingam College (Autonomous), Pollachi, support editorial independence.
- கட்டுரை வெளியீட்டுக் கட்டணத்துடன் இதழின் செலவுகளை ஏற்கின்றன; கட்டணங்கள் ஆசிரியர் முடிவுகளிலிருந்து தனித்து வைக்கப்படுகின்றன. They fund the journal together with the article processing charges, and keep payments separate from editorial decisions.
- இதழின் தளங்களையும் பதிவுகளையும் பராமரிக்கின்றன. They maintain the journal’s platforms and records.
- வெளியான உள்ளடக்கம் நிலையாகப் பாதுகாக்கப்படுவதையும், திருத்தங்களும் திரும்பப் பெறுதல்களும் மூலக் கட்டுரையுடன் இணைக்கப்படுவதையும் உறுதிசெய்கின்றன. They ensure published content is preserved, and that corrections and retractions link to the original article.
முறைகேடுகளைக் கையாளுதல் Handling misconduct
கருத்துத் திருட்டு, தரவுப் புனைவு அல்லது திரிபு, இருமுறை வெளியீடு, மேற்கோள் கையாடல், ஆசிரியர் உரிமைத் தவறு ஆகியவை ஐயப்படும்போது COPE செயல்வழி வரைபடங்களின்படி விசாரிக்கப்படும். கட்டுரையாளருக்குப் பதிலளிக்க எப்போதும் வாய்ப்பளிக்கப்படும்.
Suspected plagiarism, fabrication or falsification of data, duplicate publication, citation manipulation or authorship abuse is investigated following the COPE flowcharts. Authors are always given a chance to respond.
விளைவுகள்: நிராகரிப்பு, திருத்தம், கவலை அறிவிப்பு அல்லது திரும்பப் பெறுதல்; கட்டுரையாளரின் நிறுவனத்துக்கும் தெரிவிக்கப்படலாம்.
Possible outcomes are rejection, correction, an expression of concern or retraction; the journal may also inform the author’s institution.
தொடர்புடைய நெறிமுறைகள் Related policies
- மதிப்பாய்வு முறை Peer Review Process
- கருத்துத் திருட்டுத் தடுப்புக் கொள்கை Plagiarism Policy
- ஆசிரியர் தகுதியும் செயற்கை நுண்ணறிவும் Authorship, Contributorship and AI
- முரண்படும் நலன்கள் Conflicts of Interest
- ஆய்வு அறநெறியும் இசைவும் Research Ethics and Consent
- மூலங்களும் தரவுப் பகிர்வும் Sources and Data Availability
- திருத்தமும் திரும்பப் பெறுதலும் Corrections, Retractions and Withdrawals
- புகார்களும் மேல்முறையீடுகளும் Complaints and Appeals
- COPE Committee on Publication Ethics
- எல்லா நெறிமுறைகளும் All policies
எங்கள் நெறிமுறைகள் பற்றிய கேள்விகளை ஆசிரியர் அலுவலகத்துக்கு editorial.kalanjiyam@ngmc.org முகவரியில் எழுதுங்கள்.
Questions about our policies? Write to the editorial office at editorial.kalanjiyam@ngmc.org.