சுவடித் திரட்டும் சிலப்பதிகாரமும் பதிப்பு முறைகளில் ‘கோவலன் கதைகள்’

ஆய்வுச் சுருக்கம்

மானுடச் சமூகம் வாழ்வில் கருத்துரைகள் ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் கொண்டு செல்வதற்கு வாய்மொழி மரபில் செவிவழியாக வழங்கியிருக்கிறது. சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களில் கருத்தமைவுகள் இடப்பெயர்வு சூழலில் ஓரிடத்தில் வழங்கப்பட்டவைகள் மறைந்து இருக்கிறது. வாய்மொழி கதைகள், பாடல்கள் பதிப்பு செய்யப்படாத கி.மு காலகட்டத்தின் வரலாற்று தகவல்களாக விளங்குகின்றன. வாய்மொழி மரபில் கொண்டு வந்த தகவல்கள் வரிவடிவ அமைப்பில் தொடக்கக் காலத்தில் மண், ஓலை, கல், துணி, தோல் என பயன்படு பொருள்களில் எழுத்து வடிவ அமைப்பில் செய்திகள் பதிவாக்கம் ஆனது.

மானிட வாழ்க்கையில் மக்கள் காலத்திற்கு ஏற்றாற்போல பொருள் பயன்பாட்டையும் குறிப்பிடுகின்றனர்.   எழுத்தறிவு பெறாத பாமரர்கள் மனவறிவை பெற்று கதைகளும் கணக்கியலும் தன் சூழலியல் முறைகளையும் மனக்குவியல்களில் தேர்ந்தவராக வாழ்ந்துள்ளனர். ஒருவர் பகிர்ந்த கருத்துகள் கதை வடிவில் வழங்கியபோது இரண்டாம், மூன்றாம் மனிதர்களிடம் வந்து கதைகள்  திருத்தம் பெற்றுள்ளன என்பதை சுவடித் திரட்டும் பதிப்பு நூலும் கோவலன் கதையை விளக்குவதை பதிப்புமுறை ஆய்வாக நெறிப்படுகிறது.

ஆய்வு செல்கை

தமிழ் நில பரப்புகளான வடவேங்கடம் தென்குமரி ஆயிடை என்னும் வரைக்குள் பூம்பட்டிணம் மற்றும்  வடமதுரை பாண்டியர்களின் ஆளுகை இடம் வகித்தது. பூம்பட்டிண வணிகர்களின் வாழ்வியலும் பாண்டிய அரசியலும் நாட்டுப்புற வாழ்வியலோடு ஒப்புமை செய்து கதைப்போக்கையும் பதிப்பு முறைகளையும் கொண்டு கோவலன், கண்ணகி பாண்டிய மன்னர்களின் பிறப்புவினை அறியும் ஆய்வின் செம்மையாக வளர்ச்சி பெற்றுள்ளது.

பயன்பாட்டு முறைகள்

மானுட ஆய்வில் மக்களின் வாழ்வியல் கூறுகளைக் கண்டறிந்து இனக்குறியியல், மொழி, பண்பாடு, மருத்துவம், பழக்கவழக்கம், என வாய்மொழி மரபு அமைப்புகள் கதைகள் வழி வெளிப்பட்டு வருகிறது. கதைகள்  பல்வேறு இடத்து மக்களிடம் மருங்கொலித்து வாய்மொழியாக வந்துள்ளது. அச்சு வடிவம் வந்த காலத்தில் வரிவடிவ எழுத்து முறைகள் பயன்படுத்தி வரப்படுகிறது. எழுத்து வடிவ முறைகள் நாட்டுப்புற மக்கள் மண் ஓடுகளிலும் ஓலைகளிலும் கல்களிலும் ஆடைகளிலும் பயன்படுத்தியதைக் காணலாம். அச்சு இயந்திரக் கூடங்கள் வருகையினால் மரக்கூழில் செய்யப்பட்ட காகிதங்களில் எழுத்த வடிவ முறைகள் பயன்படுத்த முயன்று வளர்ச்சிப் பெற்றுள்ளன. கதைகள் மக்களின் இடம் பெயர்வு வாழ்வியலின் வாய்மொழியாகவும் பதிப்பின் நூலாக்க வடிவிலும் விளக்கம் பெற்று வருகின்றன.