பட்டினப்பாலையில் சங்ககால மக்களின் பண்பாட்டு மரபுகள்
முனைவர் அ. நடராஜன், natarajan.lingu@gmail.com, 8778795448
DOI:
https://doi.org/10.35444/Abstract
இலக்கியங்கள் காலக்கண்ணாடி என்ற கூற்றின் அமைவுடன் நோக்கும்கால், ஓர் இலக்கியம் தான் தோன்றிய காலத்தில் நிலவியப் பொருளாதாரம், சுற்றுசூழல், அரசியல் போன்ற காரணிகளுடன் மக்களின் வாழ்வியலான பண்பாட்டையும் இயம்புவதாக பொறுத்தலாம். “மனிதன் தனது சுற்றுச் சூழலைத் தனக்கேற்ப மாற்றித் திருத்தி தனது புற வாழ்வியலை ஒழுங்குப்படுத்தித் திட்டமிட்டுச் செய்யப்படும் கூறுகள், வாழ்க்கைப் பற்றிய நம்பிக்கைகள், சடங்கு மதிப்புகள், சமூகக் கருத்துக்கள் அடங்கிய கூறுகள் பண்பாடு எனப்படும்.”1 இலக்கியங்களின் தேவையும், தன்மையும் அவ்விலக்கியம் தோன்றிய காலகட்டத்தின் அனைத்து நிலைகளையும் தன்னூள் கட்டமைத்து காட்டுவனவே என கொள்ளலாம். அவ்வகையில் தமிழ் இலக்கிய வரலாற்றில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கியங்களாக வரையறுக்கப்பெறும் சங்க இலக்கியங்களான எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் தமிழர்களின் அரசியல், பொருளாதாரம், சமூக அமைப்பு போன்ற பண்பாட்டு விழுமியங்களை பல நிலைகளில் விளக்கியுள்ளதைக் காணமுடிகிறது. இவற்றில் பத்துப்பாட்டு நூல் வரிசையில் ஒன்றான பட்டினப்பாலை கடியலூர் உருத்திரங்கண்ணனாரால் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் சிறப்பை எடுத்து இயம்பும் வண்ணம் பாடப் பெற்றிருப்பினும், பண்பாட்டுகருத்துக்கள் இலக்கியம் முழுமையும் விளக்கியுள்ளமை புலப்படுகின்றன. இவ்வாறு ஆசிரியரால் பட்டினப்பாலையில் விளக்கப்பட்டுள்ள பண்பாட்டு கருத்துக்கள் உள்ளதன் நுணுக்கமாக ஆராய்ந்து விளக்குவதாக இவ்வாய்வு கட்டுரை அமைகிறது.
Downloads
References
1. சு. அய்யனார், சங்க இலக்கியங்களில் பண்பாட்டு மரபுகள்
International Journal of Tamil Language and Literary Studies, Vol. 1, Issue 1, July – 2018.
2. பக்தவத்சல பாரதி, பண்பாட்டு மானுடவியல், ப.148
3. மேலது ப.148
4. திருமதி. சா. ரிஸ்வானா பர்வீன், பட்டினப்பாலையில் வணிகச்
செய்திகள், தமிழ்மொழி மற்றும் இலக்கிய பன்னாட்டு ஆய்விதழ், Vol.
1, Issue 1, July – 2018, g.61.
5. வி. கார்த்திகாயினி;, சங்க இலக்கியங்களில் விழாக்கள், International
Journal of Tamil Language and Literary Studies, Vol. 2, Issue 4, July – 2019. g. 39.
துணைநூற் பட்டியல்
1. இராசமணிக்கனார். மா. பத்துப்பாட்டு ஆராய்ச்சி. சாகித்திய அகாதமி
புதுதில்லி-001. 2012.
2. கரிகாலன் நை.சி (தொ.ஆ). பத்துப்பாட்டு ஆய்வுகள். நியூ செஞ்சுரி
புக்கவுஸ் (பி) லிட்.சென்னை. 2011.
3. சாமிநாதையர் வே. சா. (ப.ஆ). பத்துபாட்டு மூலமும்
நச்சினார்கினியருரையும். தமிழ்ப்பல்கலைக்கழகம.; தஞ்சாவூர். 1986.
4. நச்சினார்க்கினியர் (உ.ஆ). ஐம்பெரும்காப்பியங்கள் சிவகசிந்தாமணி-1.
இளங்கணி பதிப்பகம். சென்னை. 2006.
5. பரமசிவானந்தம்.அ.மு. சமுதாயமும் பண்பாடும். தமிழ்க்கலைப்
பதிப்பகம்.1972
6. மறைமலையடிகள். பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை. திருநெல்வேலித்
தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். சென்னை. 1966.
7. மாணிக்கவாசகன். ஞா (உ.ஆ). தொல்காப்பியம் மூலமும் உரையும்,
உமா பதிப்பகம். சென்னை.01. 2004.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2023 முனைவர் அ. நடராஜன் (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.