Information For Authors

Interested in submitting to this journal? We recommend that you review the About the Journal page for the journal's section policies, as well as the Author Guidelines. Authors need to register with the journal prior to submitting or, if already registered, can simply log in and begin the five-step process.

மாதிரிக்குப் பின்வரும் கட்டுரையின் அடிப்படை அமைப்பினைப் பாருங்கள்...

அறிவுசார் சொத்துக்களின் பதிப்புரிமையைப் பெறுவதற்கான தேவையும் வழிமுறையும் Requirement and Method of Obtaining Copyright of Intellectual Property 

(தலைப்பின் எழுத்துரு அளவு 14 இருத்தல் வேண்டும்)

ந.இராஜேந்திரன் | N.Rajendran2 ORCID , பா.கவிதா | P.Kavitha2 ORCID

(ஆசிரியர் பெயரின் எழுத்துரு அளவு 12 இருத்தல் வேண்டும்)

1 Assistant Professor, Department of Tamil, PSG College of Arts and Science, Coimbatore – 641 014. nrajendran@psgcas.ac.in  Ph.No - 9597536324. 

2 Assitant Professor Of Tamil, PSGR Krishnammal College for Women, Coimbatore. pkavitha@psgrkcw.ac.in.

DOI: 10.5281/zenodo.13294453 

(ஆசிரியரின் குறிப்புகள் எழுத்துரு அளவு 11 இருத்தல் வேண்டும்)

ஆய்வுச்சுருக்கம் (Abstract)

அறிவுசார் சொத்துக்களைப் பயன்படுத்த அப்படைப்பாளரின் அனுமதியைப் பெறுவது அவசியமாகும். அப்படைப்பாளரின் அனுமதியைப் பெறாமல் கருத்தையோ, ஆய்வையோ அல்லது எழுத்தையோ நகலெடுத்துத் தன்னுடைய சொந்த முயற்சியில் உருவானதுபோல் திருட்டுத்தனமாகப் பயன்படுத்தினால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். பணம், பொன், பொருள்களைத் திருடுவது மட்டும்தான் திருட்டு என்பது அல்ல. பிறருடைய கருத்துக்களைத் திருடுவதும் திருட்டுதான். அவ்வகையில் தற்காலத்தில் கல்வி சார்ந்த எழுத்துத் துறைகளில் கருத்துத்திருட்டு பரவலாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இத்திருட்டைத் தவிர்ப்பதற்குப் படைப்பாளர்கள் தமது படைப்புகளைப் பதிப்புரிமை (Copyright) செய்து கொள்ள வேண்டும். ஒருவரது எண்ணத்தில் உருவாகும் அறிவுசார் சொத்துக்களைப் பிறர் எளிமையாகத் திருடி அவருடைய கருத்தைப் போல் பதிவுசெய்துவிடுகிறார்கள் என்பதை அறிந்துகொண்ட இந்திய அரசு இக்குற்றத்தைக் களைவதற்காகவே தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையை (Copyright Division, Department For Promotion of Industry and Internal Trade) உருவாக்கியுள்ளது. இத்துறை 19 வகையான பிரிவுகளைக் கொண்டுள்ளது. 

It is necessary to obtain the permission of the Creator to use the intellectual property. It is a punishable offense to copy an opinion, study, or writing without obtaining the author's permission and using it as if it were one's initiative. Theft is not only about stealing money, gold, and things. Stealing other people's ideas is also plagiarism. In this way, there is widespread disinformation in the field of academic, writing these days. To avoid this mistake, creators should copyright their works. The Government of India has created the Department for Promotion of Industry and Internal Trade (Copyright Division, Department for Promotion of Industry and Internal Trade) to eliminate this crime after knowing that others simply steal the intellectual property created in one's mind and register it as his idea. The department consists of 19 different divisions.

திறவுச்சொற்கள் (Keywords): ந.இராஜேந்திரன், பா.கவிதா, அறிவுசார் சொத்து, பதிப்புரிமை, அறிவுத் திருட்டு, ஒழுக்க மீறல்.

(ஆய்வுச்சுருக்கத்தின் எழுத்துரு அளவு 9 இருத்தல் வேண்டும்)

முன்னுரை 

பதிப்புரிமை (Copyright) என்பது ஒரு தனிநபரின் இலக்கியம், கலை, இசை, நாடகம், கணினி மென்பொருள், வடிவமைப்புகள், வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் சின்னங்கள், பெயர்கள், படங்கள் ஒலிப்பதிவு மற்றும் திரைப்படம் உள்ளிட்ட படைப்புகளின் எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ மற்றும் உரிமையாளருக்கோ அவர்களது தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்கும் அங்கீகரிக்கப்பட்ட சட்டமாகும். பதிப்புரிமையில் மேற்குறிப்பிட்ட பல பிரிவுகள் இருப்பினும், எழுத்துத்துறையில் அறிவுசார் சொத்துக்களை ஏன் பதிப்புரிமை செய்ய வேண்டும்? செய்வதற்கான தேவை என்ன? பதிப்புரிமை செய்வதற்கான வழிமுறை என்ன? என்பது பற்றி ஆராய்ந்து விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

(கட்டுரைப் பகுதியின் எழுத்துரு அளவு 10 இருத்தல் வேண்டும்)

துணைநூற்பட்டியல்

(துணைநூற்பட்டியலின்  எழுத்துரு அளவு 9 இருத்தல் வேண்டும்)

தமிழ் ஆய்வுகளை உலகத்தரத்திற்கு எடுத்துச்செல்ல முன்வருவீர்களாக....