திருக்குறளில் அளபெடை
கா.தசரதன், முனைவர் பட்ட ஆய்வாளர் (முழு நேரம்), தமிழ் உயராய்வுத் துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) கோயம்புத்தூர் - 641 018. dhasaradhan9751@gmail.com 8190015088 முனைவர். இரா. செல்வராஜ் இணைப்பேராசிரியர், தமிழ் உயராய்வுத் துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் - 641 018. selvarajarts1979@gmail.com 9788557488
DOI:
https://doi.org/10.35444/Abstract
தமிழ்மொழியானது நீண்ட, நெடிய இலக்கண, இலக்கிய வரலாற்றைக் கொண்ட மொழியாகத் திகழ்கின்றது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து வகையான இலக்கணங்களைத் தமிழ்மொழி கொண்டுள்ளது. எழுத்திலக்கணத்தில் எழுத்துகளின் ஒலி அளவுகள் பற்றி இலக்கண நூலோர் விளக்கியுள்ளனர். இனிய ஓசைக்காகவும், செய்யுளில் சீர், தளை போன்ற காரணங்களுக்காகவும் நெடில் எழுத்துக்கள் தமக்கு இனமான குறில் எழுத்துக்களோடு சேர்ந்து, தமக்குறிய மாத்திரை அளவிலிருந்து நீண்டு ஒலிப்பது அளபெடை ஆகும். அளபெடைகள் இன்னிசை, செய்யுளிசை, சொல்லிசை என மூவகைப்படும். அவற்றுள் சொல்லிசை அளபெடையில் பொருள் மாற்றம் செய்ய எழுத்துகள் அளபெடுக்கின்றன. ஆனால் அளபெடை பொருள் மாற்றம் செய்யும் என்று இலக்கண நூல்கள் யாங்கணுமே குறிப்பிடவில்லை. ஆகவே இக்கட்டுரையில் பொருள் மாற்றம் செய்யும் எழுத்து அளபெடை ஆகாது என்று இலக்கண நூல்கள் மற்றும் அறிஞர்களின் கருத்துகளின் மூலம் மறுக்கப்படுகிறது. அறநூலான திருக்குறளில் அளபெடைகள் 80 இடங்களில் பயின்று வந்துள்ளன. அவ்வளபெடைகள் திருக்குறளில் இன்னிசை மற்றும் செய்யுளிசை அளபெடைகளாகப் பயின்று வந்துள்ள விதத்தை இக்கட்டுரை ஆராய்கிறது.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 KALANJIYAM - International Journal of Tamil Studies!
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
KALANJIYAM articles are published open access under a CC BY license (Creative Commons Attribution 4.0 International License). The CC BY license allows for maximum dissemination and re-use of open access materials and is preferred by many research funding bodies. Under this license users are free to share (copy, distribute and transmit) and remix (adapt) the contribution including for commercial purposes, providing they attribute the contribution in the manner specified by the author or licensor (read full legal code).
Under Creative Commons, authors retain copyright in their articles.
Visit our open research site for more information about Creative Commons licensing.