நற்றிணைப் பாடல்களில் தலைவன், தலைவியின் உள்ளப்போராட்டம்

இலக்கியம் என்பது மனித உணர்வுகளின் வெளிப்பாடாகும். உளவியல் மனிதனின் மனத்தைப் பற்றி ஆராய்கின்ற துறையாகும். இவ்வகையில் சங்க அக இலக்கியமான  நற்றிணைப்பாடல்களில் இடம்பெற்றுள்ள மாந்தர்களின் கூற்றில் உளவியல் கூறுகளில் ஒன்றான உள்ளப்போராட்ட நிகழ்வுகள் பொருள்வயிற் பிரிவு, இரவுக்குறி, அல்லக்குறி, வெறியாடல், பரத்தையிற் பிரிவுப் போன்ற பல்வேறு சூழல்களிலும் தலைவன் தலைவியின் உள்ளமானது போராட்டத்தில் ஈடுபடும் நிகழ்வினை நற்றிணைப்பாடல்களின் வழி அறியமுடிகிறது. Literature is the expression of human emotions. Psychology is the field that…

ஔவை துரைசாமிப்பிள்ளையின் சங்க இலக்கிய உரைச்சிறப்புகள்

New Commentaries of Sangam literature came with the print tradition at the end of the 19th century. Although these commentaries seem to come from an older tradition, the contemporary and historical background are different from it.  From this point of view, Avvai Duraisamy Pillai’s commentaries of Sangam literature are very important. In particular, the uniqueness…

பாண்டியர்களின் ஆளுமை

இந்திய தீபகற்பத்தின் தென்பகுதியில் அமையப் பெற்ற தமிழ்நாட்மை ஆண்ட  மூவேவந்தர்களுள் ஒருவர் பாண்டியர்கள்.மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்கள்  தமிழுக்கு அரும் தொண்டு ஆற்றியுள்ளனர். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிமையும் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று அமைத்து தமிழை வளர்த்த பெருமையுடையவர்கள் பாண்டியர்கள். இத்தகு சிறப்பு வாய்ந்த பாண்டியர்களின் ஆளுமையைப் புறப்பாடல் கொண்டு ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது. In the southern region of the Indian Deepakam, there is a Pandiya…

காதாசப்தசதியும் கட்டவிழ்ப்பு நோக்கும்

சமூகம் சரிவர இயங்கிடவும் இயங்காது தன்னையே அழித்திடவும் சமவுரிமை, சமவுரிமை இன்மையே காரணமாய் அமைகிறது, இதில் ஆண் பெண் என்பவர்கள் உறுப்புகளில் வேறுப்பட்டோரே தவிர உணர்வுகளில் ஒன்று பட்டோரே, இதையறியாது கற்பு என்றும் நற்பால் ஒழுக்கம் என்றும் நடுநிலை தன்மை தளர்த்தி ஒருதலையாக கட்டமைத்து உள்ளதை காதாசப்தசதி பாடல் வழியே நாம் அறியலாம்.

Embracing the West in Pearl S. Buck’s East Wind: West Wind

American literature started its journey in a search for ideal light directed by hope and expectation. It has always been a platform to involve the human situation in its established works. Pearl S. Buck is a successful novelist who belongs to two worlds- an American missionary world and a Chinese world. As a novelist, she was encouraged by her parents and society to write about intercultural and social understanding of different people. East Wind: West Wind is a story which depicts the life of the characters bound by the culture and traditions of upper class society. The novel compares the development and structure of two worlds- China and the West. The novel is based on the relationship with Hsu Chih-Mo, Kwei-Lan’s husband in which she finds difficult to accommodate between tradition and modernity. Through the voice of Kwei-Lan, Pearl S. Buck attempts to portray the position of women in Chinese society.

அறம் கூறும் அறநெறிச்சாரம்

மானிடனுக்கு நல்வழியைக் காட்டும் நோக்கில் அறநூல்கள் பல இன்று நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகின்றன. காலம் கடந்தாலும் அற நூல்களும் அவை புகட்டும் விழுமியங்களும் என்றும் அழியாதது. அறங்களை எடுத்துக் கூறுவதில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அவ்வகையில் முனைப்பாடியார் இயற்றிய அறநெறிச்சாரம் என்னும் அறநூல் சாற்றும் அறக்கருத்துகளை இவண் காண்போம்.

A Study on Challenges of Agricultural Labourers in India

Agriculture has always been the backbone of the Indian economy supported by the fact that nearly 67 per cent of our population and 55 per cent of the total work force depending on agriculture and other allied activities. In India a very high proportion of working population engaged in agriculture, which helps to eradicate poverty in rural area. Thus by providing employment to agricultural labourers, agriculture sector play an important role in rural development. Agricultural labourers work on the land of others on wages for the major part of the year and earn a major portion of their income as a payment in the form of wages for works performed on the agricultural farms owned by others. They will perform simple and routine tasks as part of agriculture, forestry and fishery production process. They depend on agriculture sector for their livelihood. The demand for workers in Agriculture sector is growing fast which increase their status in the society and agricultural workers play a multi-dimensional role in agriculture and in allied fields and also contribute more for the development of rural economy. Though, they are facing lot of issues such as low wages, hard work, long hours of work, seasonal unemployment, low standard of living, traditional bounded, etc.,. Hence this paper explains the problems of agricultural labourers and different programmes introduced by the Government to solve their problems in India.

வேளாண்மையின் வரலாறும் போக்கும்

வேளாண்மைத்தொழில் உலகில் தனிப்பெரும் தொழிலாக, உயிர்காக்கும் ஒப்புயர்வற்றதாகத் திகழ்கிறது. வேளாண்மை ஒரு வாழ்க்கைமுறையாக ஆரம்பித்து இன்று ஒரு வணிகரீதியான தொழிலாக வளர்ந்துள்ளது. நம் நாட்டில் பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப நாம் உணவு உற்பத்தியை அதிகரிக்கவேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம். மாறிவரும் தட்பவெப்பநிலை, நிலவளக்குறைவு, நீர்வளக்குறைவு, தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரம் போன்ற காரணங்களை உற்றுப்பார்த்தால் நம்முடைய பொறுப்பு முக்கியமாக உள்ளது. வேளாண்மையில் விதைத்தேர்வு, உழவுக்கருவிகள், பருவத்தே விதைப்பு, களைக்கட்டுப்பாடு, நீர் ப்பராமரிப்பு மற்றும் அறுவடைக்குப்பின் தானியசேமிப்பு ஆகிய உத்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தத் தீநுண்மிக் (கொரோனா) காலக்கட்டத்தில் செயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் ஏற்பட்ட விளைவுகளை உணர்ந்து மீண்டும் இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. எனவே இயற்கை வேளாண்மையின் இன்றியமையாமையை அனைவரும் அறிந்திருப்பது அவசியமாகும். அவ்வகையில் இயற்கை வேளாண்மை பற்றிச் சுட்டுவது இவண் நோக்கமாக அமைகின்றது.

தமிழ்மொழிச் சிக்கல்கள்

உலகில் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் உள்ளன. அவற்றில் சில கருத்தைத் தம் இனத்திற்குத் தெரிவித்துக் கொள்ளும் தன்மை பெற்றுள்ளன. கோழி ஒருவித ஒலியை எழுப்பிக் குஞ்சுகளை உணவுண்ண அழைக்கின்றது. பருந்து தன் குஞ்சுகளைத் தாக்கவரும் போது, வேறுவிதமான ஒலியை வெளிப்படுத்தி அவற்றைப் புலப்படுத்துகின்றது. இவை எண்ணத்தை வெளிப்படுத்தும் முறையில், இவ்வகை ஒலிகளைப் பயன்படுத்துகின்றன. ஆயினும் இவற்றை மொழி என்று கூறுவதற்கில்லை. மொழி வளர்ச்சிக்குரியது. புதிய சிந்தனைகளை அறிவிக்கும் தன்மையுடையது. படைப்பாற்றலுக்கு இடம் தருவது. இலக்கியம் தோன்றும் சிறப்புடையது. பறவை, பாலூட்டி ஆகியவற்றின் ஒலிக்குறிகள் இத்தகைய சிறப்புகளைப் பெறவில்லை. உள்ளம், உடல் என்ற இவற்றின் துணையால் மொழி பிறக்கிறது. உள்ளத்தின் போக்கும் உடற்கூறும் எல்லா மனிதருக்கும் ஒத்திருப்பதில்லை. எனவே அவர்கள் பேசும் மொழியில் வேறுபாடு தோன்றும். எனவே மொழியின் சிக்கல் எவ்வாறு தோன்றுகின்றன என்பது பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.