சங்க இலக்கியத்தில் சூழலியல்
இன்றைய காலகட்டத்தில் மனிதர்களிடம் காண்கின்ற சுற்றுச்சூழல் பற்றிய சிந்தனைகள் பழந்தமிழரிடத்தும் இருந்துள்ளமைப் பற்றி இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.
சங்க இலக்கியத்தில் சூழ் என்ற வினை சூழ்ந்திருத்தல், படர்தல், ஆராய்தல், கருதுதல், ஆலோசித்தல் என்று ஒரு சொல் பல பொருளாகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மனித வாழ்வு பிறரையும், பிற பொருள்களையும் சூழ்ந்த வாழ்வாக அமைந்துள்ளது. சூழ்தல் என்பது மனிதன் சுற்றியுள்ள பகுதிகளைக் குறிப்பதாகும்.
பழந்தமிழர்கள் காடுகளை அழித்து நாடாக்கி வாழ்வது நாகரிகமாகக் கருதப்பட்டது. அதன் சமன் நிலையை குளம் போன்று உருவாக்கி பேணிப் பாதுகாத்துள்ளனர். ஐம்பூதங்களின் அவசியத்தை,
“மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல”
என்ற புறநானூற்றுப் பாடல் மானிடத்தின் தேவைக்குப் பயன்பட வேண்டும் என்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் சூழலியல் சார்ந்த சிந்தனை இருந்தமை அறியமுடிகிறது.