வித்தகர் இயற்றிய வினைமாண் பாவை விளக்கு
பேராசிரியர் பா. ஷீலா, பதிவாளர், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல் 624 101
DOI:
https://doi.org/10.35444/Keywords:
பாவை விளக்கு, வித்தகர்Abstract
இரு கரங்களால் விளக்கேந்திய அழகிய பெண் உருவத்தினை பாவை விளக்கு என்று அழைப்பர். மண் மற்றும் உலோகத்தினாலான பாவை விளக்குகள் கண்கவர் வனப்புடன் நுண்ணிய வேலைப்பாடுகளுடன் திறமையான கைவினைஞர்களால் செய்யப்படும். பாவை விளக்கின் வரலாறு சுமார் ஐயாயிரம் ஆண்டு காலமாகும். தொல் அகழாய்வுப் பொருள்கள், இலக்கியங்கள், கல்வெட்டுகள், கோயில் சிற்பங்கள் வாயிலாக பாவை விளக்கின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை அறியலாம். பெருமையின் அடையாளமாகக் கருதப்படும் பெண் கையில் விளக்கேந்துதல் இல்வாழ்க்கை சிறப்புற அமைவதைக் குறிப்பதாகும். சங்க கால வேந்தர்களின் அரண்மனைகளில் வெளிநாட்டினரான யவனர்கள் (கிரேக்கர்கள்) தங்களது கைத்திறன் மிகுந்த அழகிய பாவை விளக்குகளை செய்தளித்துள்ளனர். சைவ, வைணவ கோயில்களில் பல்வேறு ஆடை அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட பெண் உருவங்கள் தீபவிளக்கை ஏந்தி எழிலுடன் காட்சியளிக்கின்றன. அவற்றின் தோள்களில் கிளிகள் பாங்குற அமைந்துள்ளன. பெண் உருவங்கள் மட்டுமின்றி ஆணுருவங்களும் காணப்படுகின்றன. மக்கள் அவரவர் உருவங்களிலும் பாவை விளக்குகளைத் தங்களது வேண்டுதல் பொருட்டு செய்தளித்துள்ளனர். இவ்வுருவங்கள் மக்களின் சமுதாய, பண்பாட்டினை எடுத்தியம்பும் காலக்கண்ணாடியாகும். ஆகையால் வித்தகர் இயற்றிய வினைமாண் பாவை விளக்கைப் பற்றி அறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Downloads
References
சான்றெண் விளக்கம்
1. சிங்காரவேலு முதலியார், அபிதான சிந்தாமணி, ஏஷியன் எஜுகேஷனல் சர்வீசஸ், நியூடெல்லி, 1982, ப. 861.
2. பெரும்பாணாற்றுப்படை, 191; நெடுநல்வாடை, ப. 441.
3. திருமந்திரம், ப. 703.
4. திருவருட்பா, முதல் திருமுறை, ப. X.
5. மகாவித்துவான் கே. ஆறுமுக நாவலர், இந்து மத இணைப்பு விளக்கம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி, 2007, ப. 118.
6. ஸ்ரீ சிவஞான சுவாமிகள், சிவஞான சித்தியார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், திருநெல்வேலி, 1956, சிவஞானசித்தியார் சுபக்கம், சாதனவியல், சூத். 8, பா. 18, வரி – 3, ப. 300.
7. திருநாவுக்கரசர் அருளிய தேவாரம், நான்காம் திருமுறை, 4 : 77 : 3 – 3.
8. நற்றிணை, 201 : 5 – 11.
9. மேலது.
10. புறநானூறு, 11 : 3, திருக்குறள், 407.
11. அகநானூறு, 269 : 13, ஐங்குறுநூறு, 124 : 2.
12. நெடுநல்வாடை, 115 – 123.
13. மதுரைக்காஞ்சி, 410.
14. Indian Archaeology – A Review, 1964 – 65, pp. 20 & 25; 1970 – 71, pp. 32 – 35.
15. குறுந்தொகை, 292 : 3 – 4.
16. ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை, B. இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ், சென்னை, 1979, பா. 2.
17. சி. பாலசுப்பிரமணியன், திருவெம்பாவை, பாரி நிலையம், சென்னை, 1987, பக். 5 – 6.
18. Early Indus Civilizations, 2nd Edition, p. 54.
19. திருக்குறள், அதிகாரம் 6, குறள் 54.
20. உபநிடதம், 1.3.28.
21. அகநானூறு, 11, 141, 185 & 202
22. A.R.E. 1110 of 1944.
23. சிலப்பதிகாரம், 28 : 222 – 25.
24. மணிமேகலை, புலியூர்க்கேசிகன் தெளிவுரை, பாரி நிலையம், சென்னை, 2017, கந்திற்பாவை வருவதுரைத்த காதை, பதிகம் 21, பாடல் 17, கந்திற் பாவையின் வரலாறு, வரிகள் 130 – 144, பக். 239 – 240.
25. குறுந்தொகை, 100 : 5 – 6.
26. அகநானூறு, 98 : 19 – 21.
27. திருக்குறள், 1020 & 1057.
28. நெடுநல்வாடை, 101 – 107.
29. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பாவை விளக்கு, காஞ்சிபுரம்.
30. குடவாயில் பாலசுப்பிரமணியன், சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1987, பக். 347 – 349.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2023 பேராசிரியர் பா. ஷீலா (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.