இந்து சமயம் சார் தொல்லியல் சின்னங்களும் அழிந்த நகரங்களும்” – பூம்புகார் நகரத்தை அடிப்படையாக கொண்ட ஆய்வு.
பா.ஜேசினி மதுஷிகா, கலாநிதி (திருமதி) எஸ்.கேசவன், இந்துநாகரிகத்துறை, சிரேஸ்ட விரிவுரையாளர் (G -1), கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை. இந்துநாகரிகத்துறை, bjmadushika@gmail.com, கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை.kesavans@esn.ac.lk
DOI:
https://doi.org/10.35444/Keywords:
இந்துசமயம், தொல்லியல் சின்னங்கள், பூம்புகார்Abstract
தென்னாசியாவில் இந்தியா நீண்டதொடர்ச்சியாக வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட நாடாக விளங்குகின்றது. அந்தவகையில் இந்தியாவின் ஏராளமான இந்துசமயம் சார் தொல்லியல் சின்னங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் பூம்புகார் நகரத்தின் தொன்மையையும் தொடர்ச்சியான வரலாற்றை நிரூபிக்கும் வகையில் ஏராளமான தொல்லியல் சின்னங்கள் காணப்படுகின்றன. இவ்விடத்தில் ஆராய்ச்சிகள் பல மேற்கொண்டு இருந்தாலும் இந்நகரங்களைப் பற்றி முழுமையான விபரங்கள் வெளிக்கொணரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந் நகரை மேலும் அகழ்வாய்விற்கு உட்படுத்தும் போது தமிழரின் பெருமை உலகு அரங்கில் பேசப்படும். இவ்விடகளை அகழ்வாய்வு செய்யும் பொழுது பானை ஓடுகள், தெய்வச் சிலை உருவங்கள், செங்கற்கள், கருங்கல் சிற்பங்கள், மரச்சிற்பங்கள் எனப்பல பொருட்கள் கண்டறியப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது. இச் சின்னங்கள் பூம்புகார் நகரத்தின் வரலாற்றுத் தொன்மையை எடுத்துக்காட்டுபவையாக அமைகின்றன. இந் நகரங்களில் வாழ்ந்தவர்களது வாழ்க்கை முறை என்பவற்றை கூறுவதோடு இந் நகரங்கள் என்ன காரணத்தினால் அழிந்துத என்பது பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. ஆரம்பகாலத்தில் இந்நகரின் விஸ்தரிப்பு ஏனைய நாடுகளுடன் இருந்தாலும் இன்று இந்நகரின் நிலை என்னவென்பதும் இந்நகரம் தமிழரின் பிறப்பிடமாக இருந்துள்ளது என்பதனை நிரூபிக்கவும், ஆய்வாளர்கள் தொழில்நுட்ப உதவிகொண்டும் கடலாய்வுகள் மேற்கொண்டும் அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் முறையும் கூறப்பட்டுள்ளது. அழிவடைந்து செல்லும் இந்துசமயம்சார் தொல்லியல் சின்னங்களின் மூலம் இவ்வழிந்த நகரின் வரலாற்றுத் தொன்மையினை வெளிக்கொணர்வதால் உலக வரலாற்றில் தமிழர்களிற்கான மதிப்பு உயரும்.
Downloads
References
1. அறுவர், (1973), தமிழ் நாடு அரசு, தொல்பொருள் ஆய்வுத்துறை.
2. அப்பாத்துரைப்பிள்ளை,கே., (1941), திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
3. அன்புதேவா,கொ.அ, (1987), இந்தியாவின் போன்கார்-லேவின்,கி.ம, வரலாறு.
4. அருள்மொழி.ஈ.க.ஈ, (2008), பூம்புகார், ஆழ்கடல் அகழ்வைப்பகக் கையேடு
5. இராசமாணிக்கம்.மா, (1907), திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
6. இராஜவேலு.சு, திருமூர்த்தி.கே, (1995), தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை.
7. சொக்கலிங்கம்.கு, (2009), இந்து நாகரிகம்இ குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
8. தங்கமணி.கெ.டி.கே, (1988), “மணிமேகலை பற்றி”, நியு செஞ்சரி புக் ஹவுஸ், சென்னை.
9. திருகூடசுந்தரம்.பொ, (1967), “சிலப்பதிகாரம்”, அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.
10. நந்திவர்மன், (2010), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
11. பசாம்.A.L, (1963), “வியத்தகு இந்தியா, அரச கரும மொழி திணைக்களம் கொழும்பு.
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2023 பா.ஜேசினி மதுஷிகா, கலாநிதி (திருமதி) எஸ்.கேசவன் (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.