பழமொழி நானூற்றில் அரசுசார் நிர்வாகத்திறனும் தற்காலப்பயன்பாடும்

Pazhamozhi Nanootril arasusaar niravakathiranum tharkkala payanpadum

Authors

  • முனைவர் இரா.விஷ்ணுப்பிரியா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி.1 Nallamuthu Gounder Mahalingam College, Pollachi,Dept of Tamil

Keywords:

முறைமை, நேர்மை, ஆற்றல், சொல்வன்மை

Abstract

சங்ககாலத்தில் தோன்றிய எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்கள் காதலையும், வீரத்தையும் இரண்டு கண்களாகப் போற்றின.அதற்குப் பின் தோன்றிய சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்  நீதியையும், அறத்தையும் போற்றி வலியுறுத்தின.அப்பதினெட்டு நூல்களில் அறம் சார்ந்த நூல்களின் வரிசையில் ஒன்றாகப் பழமொழி நானூறு விளங்குகின்றது.அறத்தை வலியுறுத்துவதோடு இந்நூல் நிற்காது அவற்றின் உள்ளீடாக பல்வேறு கருத்துக்களையும் உணர்த்துகின்றது.அவற்றில் ஒன்றாக நிர்வாகம் அமைகின்றது. ஓன்றை முறைப்படுத்தி,திட்டமிட்டு, பொறுப்புடன் தலைமை ஏற்று வழி நடத்துவது நிர்வாகத்தின் வேலையாகும். இதை அரசுசார்  நிர்வாகத்தில் பழமொழிநானூறு எவ்வாறு கையாண்டுள்ளது என ஆராயும்பொழுது ஒரு அரசன் தன் நாட்டில் எவ்வாறு வரி வாங்க வேண்டும், ,தனது ஆற்றலை எவ்வாறு வளர்த்துக்கொள்ள வேண்டும், தம்மவராயினும், பிறர் ஆயினும் ஒருவா் பொறுப்பில் இருக்கும்போது, எவ்வாறு நடந்துகொள்வது, எந்த ஒரு செயலிலும் பொறுப்பின்மையும், செயல்பின்னடைவும், இருக்கக்கூடாது,மக்கள் அரசு கட்டளையையும், பிற கட்டளையையும் ஏற்று எவ்வாறு நடக்க வேண்டும், ஒருவனுக்கு வீரம் வாய் அளவில் மட்டும் இன்றி செயலிலும் எவ்வாறு வெளிப்பட்டு நிற்க வேண்டும் என்ற  பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கியதாக இக்கட்டுரை அமைகின்றது.

Author Biography

முனைவர் இரா.விஷ்ணுப்பிரியா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி.1, Nallamuthu Gounder Mahalingam College, Pollachi,Dept of Tamil

முனைவர் இரா.விஷ்ணுப்பிரியா,

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி,

பொள்ளாச்சி.1.

References

இராசமாணிக்கம்பிள்ளை.ம.(உ.ஆ)பழமொழிநானூறு, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை.முதற்பதிப்பு,நவம்பர்,1948.

இராசாராம்.துரை.(உஆ)சிறுபஞ்சமூலம்,முல்லைநிலையம், சென்னை-17.முதற்பதிப்பு.1995.

இராசாராம்.துரை.((உ.ஆ)முதுமொழிக்காஞ்சி,முல்லைநிலையம்,

சென்னை-17,முதற்பதிப்பு.1995.

பரிமணம்,அ.மா (ப.ஆ) புறநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்.சென்னை-98.முதல்பதிப்பு ஏப்ரல, 2004.

வரதராசனார்,மு.(உ.ஆ) திருக்குறள், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,சென்னை-18, முதற்பதிப்பு,மே,1959

ஸ்வாமி, மகாபாரதத்தில் நிர்வாகக்கலை, அநுராகம் வெளியீடு, சென்னை-17, முதற்பதிப்பு.2005.

Downloads

Published

01-08-2022

How to Cite

[1]
இரா வ. 2022. பழமொழி நானூற்றில் அரசுசார் நிர்வாகத்திறனும் தற்காலப்பயன்பாடும்: Pazhamozhi Nanootril arasusaar niravakathiranum tharkkala payanpadum. Kalanjiyam - International Journal of Tamil Studies. 2, 2 (Aug. 2022), 11.