கீழைத்தேயத்தின் இயற்கைவழிப்பட்ட மெய்யியல் தேட்டம்: ஒப்பீட்டு நோக்கில் திருக்குறள் தம்மபதம், தாவோதேஜிங்

The Naturalistic Philosophical Quest of Keethathea: A Comparative Perspective on Thirukkural Dhammapada, Tao Tejing

Authors

  • முனைவர் க. ஜவகர் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் Author

DOI:

https://doi.org/10.35444/

Keywords:

Philosophical Quest of Keethathea, மெய்யியல் தேட்டம், திருக்குறள், தம்மபதம், தாவோதேஜிங்

Abstract

Philosophical research is about knowing something that is the unique basis of a society's knowledge tradition. Art, literature, grammar and culture can be seen to manifest this philosophical trait. The world's artistic and intellectual traditions can be classified thus. Comparison between philosophical elements thus becomes important. In that sense, there are various trends in the Indian philosophical traditions. However, the characteristics of the lower theistic culture, art, knowledge and philosophies are based on nature. Chinese (Shish Singh), Japanese (Manyosu); In India, the ancient literature and knowledge of languages ​​such as Tamil (Sanga literature), Sanskrit (Kalithasa's works), Prakrit (Kathasaptasati), Pali (Dhammapadam) are set in the background of nature. It can be seen that the study methodology of archeological material and the theory of theory etc. are the natural primaries for the application and theorization of grammar.

  The Indian philosophical tradition is generally divided into two levels, the Vedic and Avaditika traditions. These establish their knowledge from nature or run through it. In that way, Thirukkural, Dhammapada and Daothejing are among the most important philosophical works. Tiruvalluvar's period was AD. Considered to be the first century. However, people like Marudanayagam compare with Seneca and take it further (Marudanayagam, 2014:74). Studies are carried out. Lao Tzu, who wrote the Tao Tejing in BC. Born in 571, Buddha (Dhammapada) B.C. Also believed to belong to the 5th century. The periodicities, however, converge in their general state. Although Tirukkural is viewed from a general perspective, it is primarily based on the background of Jain philosophy. Dhammapada Buddhism and Daothejing are philosophical works that presuppose Taoism. All three are situated in different philosophical backgrounds but unite as naturalistic philosophical research projects.

மெய்யியல் ஆய்வு என்பது ஒரு சமூகத்தின், அறிவு மரபின் தனித்துவமான அடிப்படையான ஒன்றை அறிவதாக அமைகிறது. கலை, இலக்கியம், இலக்கணம், பண்பாடு என எல்லாவற்றிலும் இந்த  மெய்யியல் பண்பு வெளிப்படுவதைக் காணமுடியும். உலகக் கலை, அறிவு மரபுகளை இவ்வாறு வகைப்படுத்த இயலும். மெய்யியல் கூறுகளுக்கிடையிலான ஒப்பாய்வு இவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் இந்திய, கீழைத்தேய மெய்யியல் மரபுகளில் பல்வேறு போக்குகள் இருக்கின்றன. அப்படி இருப்பினும், கீழைத்தேய பண்பாட்டு, கலை, அறிவுமரபு, மெய்யியல்களின் பண்பு என்பன இயற்கையை அடிப்படையாகக் கொண்டதாக அமைகிறது. சீன (ஷிழ் சிங்), ஜப்பான்(மன்யோசு);  இந்தியாவில் தமிழ்(சங்க இலக்கியம்), சமஸ்கிருதம் (காளிதாசர் படைப்புகள்), பிராகிருதம்(காதாசப்தசதி), பாலி(தம்மபதம்) போன்ற மொழிகளின் பழமையான இலக்கியங்களும் அறிவுமரபுகளும் இயற்கையின் பின்னணியில் அமைவதாக உள்ளன. தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஆய்வு முறையியலும் திணைக்கோட்பாடு முதலிய பார்வைகளும் இலக்கணப்பனுவலாக்கத்திற்கும் கோட்பாட்டாக்கத்துக்கும் இயற்கை முதன்மையாக அமைவதைக் காணமுடியும்.

      இந்திய மெய்யியல் மரபில் வைதீக, அவைதீக மரபு என்று இரு நிலைகளில் பொதுவாகப் பகுப்பர். இவைகள் இயற்கையிலிருந்து தனது அறிவுமரபை நிறுவுகின்றன அல்லது இவற்றைக் கடந்தும் இயங்குகின்றன. அந்தவகையில் கீழைத்தேய மெய்யியல் பனுவல்களுள் முக்கியமானவைகளுள் திருக்குறளும் தம்மபதமும் தாவோதேஜிங்கும் அமைகின்றன. திருவள்ளுவரின்  காலம் கி.பி. முதல்நூற்றாண்டாகக் கருதப்படுகிறது. ஆயினும் மருதநாயகம் போன்றோர் செனகாவுடன் ஒப்பிட்டு இன்னும் முன்னுக்குக்கொண்டு செல்கின்றனர்(மருதநாயகம், 2014:74). ஆய்வுகள் கொண்டுசெல்கின்றன. தாவோதேஜிங்கை எழுதிய லாவோட்சு கிமு. 571 பிறந்தவராகவும், புத்தர் (தம்மபதம்) கி.மு. 5ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவராகவும் கருதப்படுகின்றனர்.  காலவேறுபாடுகள் இருப்பினும் இல்லையென்றாலும் இவற்றின் பொதுக்கூறு நிலையில் ஒன்றிணைகின்றன.  திருக்குறள் பொதுநிலையில் இருந்து பார்க்கப்பட்டாலும் அது சமண மெய்யியல் பின்னணியில் இருந்து அமைகிறது என்பது முதன்மையானது. தம்மபதம் பௌத்தத்தையும் தாவோதேஜிங் தாவோயிசத்தையும் முன்மொழியும்  மெய்யியல் பனுவல்களாக அமைகின்றன. இவை மூன்றும் வெவ்வேறு மெய்யியல் பின்னணியில் அமைந்தவைகளாயினும் இயற்கைவழிப்பட்ட மெய்யியல் தேட்டப் பனுவல்களாக ஒன்றுபடுகின்றன. 

Downloads

Download data is not yet available.

Author Biography

  • முனைவர் க. ஜவகர், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர்

    முனைவர் க. ஜவகர், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் E-Mail : 53 kajawahar@gmail.com

    Dr. K. Jawahar, Assistant Professor, Department of Tamil Nadu, Central University of Tamil Nadu, Tiruvarur E-Mail : kajawahar@gmail.com

References

1. தம்மபதம், பிக்கு சோமானந்தா (மொழிபெயர்ப்பாளர்), மஹா போதி சங்கம், எழும்பூர், சென்னை.

2. தம்மபதம் அல்லது அறவழி, வ.உ.சி. நூலகம், சென்னை, 2005.

3. தாவோதேஜிங், லாவோட்சு, சி.மணி (மொழிபெயர்ப்பாளர்), க்ரியா வெளியீடு, சென்னை. மே 2016 (மறுபதிப்பு).

4. திருக்குறள் உரைக்கொத்து அறத்துப்பால், வெள்ளைவாரணம், தா.ம., (பதிப்பாசிரியர்), காசிமடம் வெளியீடு, திருப்பனந்தாள்.1993.

5. திருக்குறள் உரைக்கொத்து பொருட்பால், சிவப்பிரகாசம். அர., (பதிப்பாசிரியர்), திருப்பனந்தாள் காசிமடம் வெளியீடு, 2002

6. மருதநாயகம், பெ.,பிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்களின் தாக்கம், தமிழ்ப்பேராயம், இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம், சென்னை: 2014.

1. Dhammapadam, Bhikku Somananda (Translator), Maha Bodhi Sangam, Egmore, Chennai.

2. Dhammapadam or Charisma, V.U.C. Library, Chennai, 2005.

3. Tao Tejing, Lao Tzu, C. Mani (Translator), Kriya Publications, Chennai. May 2016 (Reprint).

4. Tirukkural text collection Arathuppal, Vallivaranam, T.M., (Editor), Kasimadam Publication, Tiruppanandal.1993.

5. For the sake of Tirukkural Textbook, Sivaprakasam. Ar., (Editor), Tiruppanandal Kasimadam Publication, 2002

6. Maruthanayakam, P., Influence of Tamil Literature on Foreign Language Literature, Tamilperayam, Ramasamy Memorial University, Chennai: 2014.

Downloads

Published

01-11-2024

How to Cite

க. ஜவகர். (2024). கீழைத்தேயத்தின் இயற்கைவழிப்பட்ட மெய்யியல் தேட்டம்: ஒப்பீட்டு நோக்கில் திருக்குறள் தம்மபதம், தாவோதேஜிங்: The Naturalistic Philosophical Quest of Keethathea: A Comparative Perspective on Thirukkural Dhammapada, Tao Tejing. KALANJIYAM - International Journal of Tamil Studies, 3(04), 146-160. https://doi.org/10.35444/

Similar Articles

1-10 of 63

You may also start an advanced similarity search for this article.