இலங்கையிலுள்ள மட்டக்களப்பு பிரதேசத்தில் நாகதம்பிரான் வழிபாடு - ஓர் ஆய்வு.
அசோகராசா தனுஸ்கா, கலாநிதி. (திருமதி) எஸ்.கேசவன், ஆய்வாளர; சிரேஸ்ட விரிவுரையாளர்- (டு-1), மட்டக்களப்பு, இலங்கை. இந்துநாகரிகத்துறை, கிழக்குப் பல்ககலைக்கழகம், இலங்கை.
DOI:
https://doi.org/10.35444/Keywords:
நாகதம்பிரான் வழிபாடு, Tamil Literature, பண்டாரியாவெளி, நாகதம்பிரான, நாககட்டு, கிராமியமுறைAbstract
உலகில் பல்வேறு பகுதிகளில் புராதன நதிக்கரை நாகரிங்கள் தோன்றிய காலத்திலிருந்து நாகவழிபாடு சிறப்புற்று காணப்பட்டதை அறிய முடிகின்றது. இந்து சமய மரபில் தொன்மைக்கால முதலாக நிலவி வருகின்ற வழிபாடுகளில் நாகவழிபாடு ஒன்றாகக் காணப்படுகின்றது. ஆரம்பகாலத்தில் நாகவழிபாடு உலகின் நாகர் என்னும் இனத்தவர்களினால் தோற்றுவிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளிலும் பரவிக்காணப்பட்டுள்ளது. இதனைப் பல சான்றாதாரங்கள் மூலம் அறியலாம்.
அந்தவகையில் “மட்டக்களப்பில் நாகதம்பிரான் வழிபாடு பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலயத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு” என்னும் தலைப்பில் இவ்வாய்வு கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பண்டாரியாவெளி பிரதேசத்தை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது. இக்கிராமத்தில் களஆய்வுகளையும் வரலாற்று ஆய்வுஇ விபரணஆய்வுஇ பகுப்பாய்வு போன்ற ஆய்வு முறையியல் பயன்படுத்தப்பட்டு நாகதம்பிரான் ஆலயத்தின் தனித்துவத்தையும் மாற்றத்தினையும் அதன் சிறப்பினையும் வெளிக்கொணரும் வகையில் இவ்வாய்வு அமையப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றும் பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுகின்ற கிராமமாகப் பண்டாரியாவெளி காணப்படுகிறது. இக்கிராமத்தில் மேற்கொள்ளப்படும் நாகதம்பிரான் வழிபாட்டு முறைமைபற்றிய வரிவான ஆய்வுகள் இதுவரை வெளிவரவில்லை இந்த நிலையில் இதுபற்றிய ஜதீக கதைகளைச் சமூகத்திற்கு வழங்குதல் மற்றும் நாகதம்பிரான் ஆலயத்தின் பூசை முறைகள் மற்றும் வருடார்ந்த உற்சவங்களில் இடம்பெறும் விழாக்கள்பற்றிய தகவல்களைச் சமூகத்திற்கு வெளிப்படுத்தல்.
ஆலயத்தின் தனித்துவம் மற்றும் அதன் சிறப்புகள்பற்றிய தகவல்களை வெளியுலகிற்கு கொண்டு வருதல். ஆய்வின் பிரதான நோக்கமாகும்.ஆரம்ப காலத்தில் கலிங்கப் பெண் ஒருத்தியான நாகம்மை உடன் வருகை தந்த நாகமானது பண்டாரிவெளியில்; அமைந்துள்ள இத்தி மரத்தில் உள்ள புற்று ஒன்றினுள் புகுந்தது. இப்புற்றிற்கு நாகம்மா பால் முட்டை என்பன வைத்து வழிபட்டு வந்தாள். அதன் பின்னர் மக்களால் இப் புற்றினை வழிபடனர். ஆரம்பகால மக்கள் மத்தியில் புற்றினை அடிப்படையாக வைத்து வழிபாடு இயற்றப்பட்ட வேளையில் பிற்பட்ட காலங்களில் ஒரு சிறிய ஆலயமாக அமைக்கப்பட்டு மரபுவழி மாறாத கிராமிய முறையிலமைந்த இவ்வாலயம.; காலத்தின் தேவையின் பொருட்டு ஆலய அமைப்பானது சமஸ்கிருத மயமாக்கலுகுட்பட்டுச் சென்றுள்ளது.
ஆரம்ப காலத்தில் இவ்வாலயத்தின் நித்திய பூசைகளும் விசேட நாளில் விசேட பூஜைகளும் இடம்பெறுகின்றது. வருடாந்த உற்சவ காலங்களில் ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து பத்து நாட்கள் திருவிழாக்களைக் கொண்டாடுகின்றனர். உற்சவ காலத்தில் இங்குச் சிறப்பான பல கிராமிய வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுகின்றனர.; அவை தேசத்து பொங்கல்இ பால் பழம் வைத்தல் முட்டை வைத்தல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றது. இவ்வாலயமானது தனக்கென்றுதனித்துவமான விடயங்களைக் கொண்டு காணப்படுகின்ற அதேவேளை மக்கள் மத்தியில் அதிக நம்பிக்கையும் கொண்டு சமூக மக்களுக்கிடையே நெருங்கிய தொடர்பு நிலை கொண்டமைந்துள்ளது. நாகதம்பிரான் ஆலயத்தின் வரலாறு ஆலயத்தின் தனித்துவம் வழிபாட்டு அம்சங்கள் அவற்றின் சிறப்புகள்இ மரபுவழி மாறாத பல தனித்துவமான வழிபாட்டு முறைகள் போன்ற பல்வேறு அம்சங்களைச் சமூகத்திற்கு கொண்டு சென்று சமூக மக்கள் மத்தியிலும் ஆலயத்தின் சிறப்பம்சங்களையும் அவற்றின் தனித்துவத்தையும் வெளிக்கொணரும் வகையிலும் எதிர்கால சந்ததியினருக்கு இது போன்ற ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இவ்வாய்வு ஓர்வழிகாட்டியாக அமையும்.
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2022 அசோகராசா தனுஸ்கா, கலாநிதி. (திருமதி) எஸ்.கேசவன், ஆய்வாளர (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.