Thirugnanasambandar's pilgrimage in the Saiva tradition: A perspective

சைவப்பண்பாட்டு மரபில் திருஞானசம்பந்தரின் தலயாத்திரை: ஓர் நோக்கு

Authors

  • Mr.S.Ramanarajah Author

Keywords:

Sambandar, Pallava society, Saivism, pilgrimage, pathikam, சம்பந்தர், சைவப்பண்பாடு, தலயாத்திரை

Abstract

This study is conducted to examine the impact of Thirugnanasambandar's pilgrimage on the Saiva tradition. The sources for this study are Thirugnanasambandar's thevarams, which are included in the first three of the twelve Thirumurais. The Pallava period is distinguished as a turning point in the social transformation and religious development of Saivaism. The Bhakti movement that emerged during this period had to present new plans and activities for Saiva culture and social development. Due to this, the movement used various strategies. One of them was their pilgrimages centered around temples. Such journeys became pilgrimages. Sambandar undertook pilgrimages as a planned propaganda strategy based on the reality that every profession and action has its goals. As a result of the intelligent implementation of such pilgrimages, it was possible to spread the ideas of Saivism among the self-reliant communities. These activities had a great impact on the society of that time. Therefore, the aim of this study is to identify the importance of Sambandar's pilgrimage in the Saivism tradition and the impact it had on the society.

திருஞானசம்பந்தர் மேற்கொண்ட தலயாத்திரை சைவப்பண்பாட்டு மரபில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பது பற்றியதாக இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது. பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளாக இடம்பெற்றிருக்கும் திருஞானசம்பந்தரின் தேவாரங்களே இந்த ஆய்வுக்கான மூலங்களாகும். சைவசமயத்தின் சமூக மாற்றத்திற்கும் சமய வளர்ச்சிக்குமான திருப்பு முனைக் காலமாக பல்லவர் காலம் சிறப்புப் பெறுகின்றது. இக்காலத்தில் தோன்றிய பக்தி இயக்கத்தினர் சைவப்பண்பாட்டுக்கும் சமூக அபிவிருத்திக்கும் புதிய திட்டங்களையும் செயற்பாடுகளையும் முன்வைக்க வேண்டிய சூழல் உருவாகியிருந்தன. இதன் காரணமாகப் பல்வேறு உத்திகளை இந்த இயக்கம் கையாண்டது. அவற்றில் ஒன்று திருக்கோயில்களை மையமாகக் கொண்ட அவர்களின் புனிதப்பயணங்கள் ஆகும். இத்தகைய பயணங்கள் தலயாத்திரைகளாக அமைந்தன. ஒவ்வொரு தொழிலுக்கும் செயலுக்கும் குறிக்கோள்கள் உள்ளன எனும் யதார்த்த அடிப்படையில் சம்பந்தர் தலயாத்திரைகளை திட்டமிட்ட பிரசார உத்தியாக மேற்கொண்டார். இத்தகைய புனித யாத்திரைகளை புத்திசாலித்தனமாகச் செயல்;படுத்தியதன் விளைவாக தன்சார்புச் சமூகங்களிடையே சைவசமயக் கருத்துக்களைப் பரப்ப முடிந்தது. இச்செயல்கள் அக்காலச் சமூகத்தில் பெருந்தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தன. எனவே, சைவப்பண்பாட்டு மரபில் சம்பந்தர் மேற்கொண்ட தலயாத்திரையின் முக்கியத்தவத்துவம் மற்றும் சமூகத்தில் அது ஏற்படுத்திய தாக்கங்களை இனங்காண்பதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • Mr.S.Ramanarajah

    Mr.S.Ramanarajah,

    Senior Lecturer, Department of Hindu Civilization, Faculty of Hindu Studies, University of Jaffna, Srilanka. sramanaa@univ.jfn.ac.lk

References

1. Somasundaram, P.S., (2006), Sambandar's Views of the Temple, Chennai, R.K.M. Publication.

2. Velupillai.Dr.A., (1985), Time and Concept in Tamil Literature, Third Edition, Chennai, Pari Book Farm.

3. Subramanian.N., (2002), The Life and Voice of Four, Chennai, Kalaignan Publishing House.

4. Gnanasambandhan.A.S., (1999), A Study of the Great Purana, Chennai, Gangai Book Store.

5. Wilkins.J.W., S. Saravanan in Tamil, (2009), Modern Hinduism, Chennai, Sandhya Publishing House,

6. Venkatraman.S.,(2007), Indian Literary Sculptors Thirugnanasambandar, Sahitya Academy,

7. Ratnasabapathi.V., (1982) Thirugnanasambandar A Study - Volume One, Dr.S., Radhakrishnan Institute of Higher Education, University of Madras.

8. Social Sciences, (April - May - June 2012) Quarterly Review, Issue - 35, Chennai, Johnny John Khan Road, Royapettah.

9. Singaravelan, S., (1969) Thirugnanasambandar Historical Research and Thevaram Criticism, Chennai, Society Publication.

10. Duraisamy Pillai, Olavai.S., (2011), History of Saiva Literature. Chennai, Poompuhar Publishing House.

1. சோமசுந்தரம், பி.எஸ்., (2006), சம்பந்தர் காட்டும் திருத்தலக் காட்சிகள், சென்னை, எர்.கே.எம்.பப்ளிகேஷன்.

2. வேலுப்பிள்ளை.டாக்டர்.ஆ., (1985), தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும், மூன்றாம் பதிப்பு, சென்னை, பாரிபுத்தகப் பண்ணை.

3. சுப்பிரமணியன்.நா., (2002), நால்வர் வாழ்வும் வாக்கும், சென்னை, கலைஞன் பதிப்பகம்.

4. ஞானசம்பந்தன்.அ.ச., (1999), பெரியபுராணம் ஓர் ஆய்வு, சென்னை, கங்கை புத்தக நிலையம்.

5. வில்கின்ஸ்.ஜே.டபிள்யூ., தமிழில் ச.சரவணன், (2009), நவீன இந்துத்துவம், சென்னை, சந்தியா பதிப்பகம்,

6. வேங்கட்ராமன்.சு.,(2007), இந்திய இலக்கியச் சிற்பிகள் திருஞானசம்பந்தர், சாகித்ய அகாதெமி,

7. இரத்தினசபாபதி.வை., (1982) திருஞானசம்பந்தர் ஓர் ஆய்வு - முதற்தொகுதி, டாக்டர்.எஸ்., இராதாகிருஷ்ணன் மெய்யுணர்வு மேல்நிலைக்கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம்.

8. சமூக விஞ்ஞானம், (ஏப்ரல் - மே - ஜூன் 2012) காலாண்டு ஆய்விதழ், இதழ் - 35, சென்னை, ஜானி ஜான் கான் சாலை இராயப் பேட்டை.

9. சிங்காரவேலன், சொ., (1969) திருஞானசம்பந்தர் வரலாற்றாராய்ச்சியும் தேவாரத் திறனாய்வும், சென்னை, கழக வெளியீடு.

10. துரைசாமிப்பிள்ளை, ஒளவை.சு., (2011), சைவ இலக்கிய வரலாறு. சென்னை, பூம்புகார் பதிப்பகம்.

Downloads

Published

01-12-2024

How to Cite

Mr.S.Ramanarajah. (2024). Thirugnanasambandar’s pilgrimage in the Saiva tradition: A perspective: சைவப்பண்பாட்டு மரபில் திருஞானசம்பந்தரின் தலயாத்திரை: ஓர் நோக்கு. KALANJIYAM - International Journal of Tamil Studies, 5(01), 6-25. https://ngmtamil.in/kalanjiyam-tamil/index.php/kalanjiyam/article/view/96

Similar Articles

41-50 of 69

You may also start an advanced similarity search for this article.