களவழி நாற்பது போர்க்களமும் யானைகளும்

முனைவர் சி. இராமச்சந்திரன், crmithulkiruthik@gmail.com, 8189805095

Authors

  • முனைவர் சி. இராமச்சந்திரன் இளநிலை ஆராய்ச்சி அலுவலர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மொழிச்சாலை பெரும்பாக்கம், சென்னை – 100 Author

DOI:

https://doi.org/10.5281/zenodo.13956412

Keywords:

பதினெண் கீழ்க்கணக்கு, பொய்கையார், களவழி நாற்பது

Abstract

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான களவழி நாற்பதை இயற்றியவர் பொய்கையார் என்னும் புலவராவார். ஒரு தோல்வியின் காரணமாகவும் ஒரு வெற்றியின் விளைவாகவும் இந்நூல் எழுந்தது எனலாம். “சோழன் செங்கணான் சேரமான் கணைக்காலிரும்பொறையோடு போர்ப்புறத்துப் பொருது, அச்சேரமான் உடைந்துழி அவனைப் பற்றிக்கொண்டு சிறைவைத்தானென்பதும் அவனைச் சிறையினின்றும் விடுவித்தற்காகப் பொய்கையார் சோழனதாகிய போர்க்களத்தைச் சிறப்பித்துப் பாடி அவனை மகிழ்வித்து இரும்பொறையை அருஞ்சிறையின் வீடுகொண்டாரென்பதுமாம். இதனானே சோழன் வென்றானென்பதும் சேரன் தோற்றானென்பதும் விளங்கும்” (களவழி நாற்பது மூலம், ப.2) என்று அனந்தராமையர் குறிப்பிடுகின்றார். தன்னுடைய மன்னன் மாற்றானிடம் போரிட்டுத் தோற்று அவன் பிடியில் சிக்குண்டு இருக்கின்றான் என்பதை அறிந்து அவனை மீட்பதற்கு முனையும் புலவர் பொய்கையார், சேரமான் கணைக்கால் இரும்பொறையை எதிர்த்துப் போர் செய்து வென்ற சோழன் செங்கணான் வெற்றியைப் பாடியுள்ளார். இவ்வாறு சோழனின் வெற்றிச் சிறப்புக்களையெல்லாம் களவழிநாற்பதின் வழி எடுத்துரைக்கும் புலவர் பொய்கையார், போர்க்களத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துகின்றார். இவ்வாறு போர்க்கள நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தும் போது பெரும்பான்மையாக அப்போர்க்களத்தில் திரும்பிய திசைகளிலெல்லாம் யானைகளே நடமாடுகின்றன. இவ்வாறு போர்க்களத்தில் நிரம்பியிருக்கும் யானைகளின் செயல்களும் அவை வீழ்ந்துகிடக்கின்ற காட்சிகளும் புலவரால் உவமைத் திறத்தோடு விளக்கப்படுகின்றன. போர்க்களத்தில் வீழ்த்தப்பட்டும் வெற்றிபெற்றும் தோற்றமளிக்கும் யானைகளின் நிலையை எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • முனைவர் சி. இராமச்சந்திரன் இளநிலை ஆராய்ச்சி அலுவலர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் செம்மொழிச்சாலை பெரும்பாக்கம், சென்னை – 100

    முனைவர் சி. இராமச்சந்திரன், இளநிலை ஆராய்ச்சி அலுவலர்

    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

    செம்மொழிச்சாலை, பெரும்பாக்கம், சென்னை – 100

    மின்னஞ்சல்: crmithulkiruthik@gmail.com

References

1. முத்தொள்ளாயிரம், டி.கே. சிதம்பரநாத முதலியார் (ப.ஆ), தமிழ்ப் பண்ணை, சென்னை, 1947

2. களவழி நாற்பது, ந.மு. வேங்கடசாமி நாட்டார், தென்னிந்திய சைவ சித்தாந்த நூபதிப்புக் கழகம், சென்னை, 1924

3. களவழி நாற்பது மூலம், அனந்த ராமையர், நோபில் அச்சுக்கூடம், சென்னை, 1931

4. களவழி நாற்பது மூலமும் உரையும், கா.ர. கோவிந்தராஜ முதலியார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திர சாலை, சென்னை, 1913

Downloads

Published

01-09-2024

How to Cite

சி. இராமச்சந்திரன். (2024). களவழி நாற்பது போர்க்களமும் யானைகளும்: முனைவர் சி. இராமச்சந்திரன், crmithulkiruthik@gmail.com, 8189805095. KALANJIYAM - International Journal of Tamil Studies, 3(04), 42-51. https://doi.org/10.5281/zenodo.13956412

Similar Articles

1-10 of 63

You may also start an advanced similarity search for this article.