சங்க இலக்கியங்களில் நடுகல் பற்றிய வகைப்பாடு
DOI:
https://doi.org/10.35444/Keywords:
நடுகல் வழிபாடு, பழந்தமிழர்களின் வழிபாட்டு முறை, நடுகல்Abstract
பழங்காலத்தில் தோன்றிய நடுகல் வழிபாடு இன்று தமிழ்நாட்டில் வணங்கப் பெறும் வீரத்தெய்வ வழிபாடாக மாறியுள்ளது என்பதில் ஐயமில்லை எனலாம். மனித இறப்போடு தொடர்புடையது பதுக்கைகள் நடுகற்களாக இவை பழந்தமிழ் மக்களின் வாழ்வியலையும் வழிபாட்டு முறையை வெளிப்படுத்தும் ஆவணங்களாக உள்ளன. புறநானூற்றுப் பாடல்களில் வெட்சி, கரந்தை வீரர்களுக்கும், யானைப்போரில் உயிரிழந்த வீரர்களுக்கும், அரசர்களுக்கும் மக்கள் நடுகலெடுத்து வழிபாடு நடத்தி வந்த பண்பாட்டுச் செய்தியை அறியமுடிகிறது. பழந்தமிழர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்ய ஆரம்ப நிலையில் பதுக்கைகள், திட்டைகள், கற்குவியல்கள், பதுக்கைகளுடன் கூடிய நடுகற்கள், நடுகற்களில் பெயர் பொறித்தல் என்ற நிலையில் வளர்ந்துள்ளதையும் இறந்தப் பிறகும் முன்னோரை வணங்கும் பண்பாட்டு மரபையும் புறநானூற்றுப் பாடல்களின் மூலம் அறியமுடிகிறது.
பழந்தமிழர்களின் வழிபாட்டு முறைகளுள் நடுகல் வழிபாடும் ஒன்றாக இருந்துள்ளது. பிற நாட்டவருடனும், பகைவருடனும் சண்டையிட்டு அப்போரிலே விழுப்புண் பட்டு வீழ்ந்து இறந்து போன வீரர்களைத் தெய்வமாகப் போற்றினர். விழுப்புண் பட்டுப் போர்க்களத்தில் மடிவதை வீரர்கள் பெருமையாகவும் கருதினர். அத்தகைய வீரர்களுக்கு கல் அமைத்து "நடுகல்"; என சிறப்பு செய்து தெய்வமாக வழிபட்டனர். அத்தகைய நடுகல் மற்றும் நடுகல் வழிபாடு குறித்த செய்திகளை சங்க இலக்கியத்தின் வழி ஆராய்வது இவ்வாய்வின் நோக்கமாக அமைகின்றது.
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2023 Brindhadevi D (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.