A Comparative Study: Existential Elements in J. J. Sila Kurippugal and Samskara
- Section
- Articles
- Published
- Pages
- 413-423
Abstract · தமிழ்
நவீனத்துவத்தின் தத்துவப் பின்னணியாக இருத்தலியம் விளங்குகிறது. தமிழ் மற்றும் கன்னட நவீனத்துவ நாவல்களான ஜே.ஜே: சில குறிப்புகள் மற்றும் சம்ஸ்காராவில் இருத்தலியல் கூறுகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. இவ்விரண்டு நாவல்களிலும் தனிமனித முக்கியத்துவம், தேர்ந்தெடுத்தலில் சுதந்திரம், பொறுப்புணர்வு, முடிவெடுத்தலில் சிரமம், போலிச் சுதந்திரம், மற்றவர்கள்தான் நரகம், கடவுள் மறுப்பு, எல்லைக்கோட்டுநிலை ஆகிய இருத்தலியல் கூறுகள் ஒத்துக்காணப்படுகின்றன. இந்த இருத்தலியத்தின் கூறுகள், எவ்வளவில் பொருந்துகின்றன என்பதையும், இவ்விரு நாவல்கள் எவ்வாறு நவீனத்துவ நாவல்களாக நிலைபெற்றிருக்கின்றன என்பதையும், நவீனத்துவ நாவல்களிலுள்ள இருத்தலியல் கூறுகளின் இன்றியமையாமையையும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
Keywords: ஒப்பியல், இருத்தலியம், நவீனத்துவம், ழான் – பவுல் சார்த்தர், சுந்தர ராமசாமி, யு.ஆர். அனந்தமூர்த்தி
