- கட்டுரையாளர்களுக்கு For authors
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் Frequently Asked Questions
மொழி, எழுத்துரு, மதிப்பாய்வுக் காலம், கட்டணம், DOI, சான்றிதழ்கள், கட்டுரை நிலை – கட்டுரையாளர்களுக்குச் சுருக்கமான பதில்கள்.
Short answers for authors on languages, fonts, review time, fees, DOIs, certificates and tracking an article.
தயாரித்தலும் சமர்ப்பித்தலும் Preparing and submitting
எந்த மொழிகளில் சமர்ப்பிக்கலாம்? In which languages can I submit?
தமிழிலோ ஆங்கிலத்திலோ சமர்ப்பிக்கலாம். கட்டுரை எந்த மொழியில் இருந்தாலும் தலைப்பு, ஆய்வுச் சுருக்கம், திறவுச்சொற்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தேவை.
In Tamil or English. Whatever the language of the article, the title, abstract and keywords are needed in both Tamil and English.
எந்தத் தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்த வேண்டும்? Which Tamil font should I use?
எந்த ஒருங்குறித் (Unicode) தமிழ் எழுத்துருவும் போதும் – Latha, Vijaya, Noto Sans Tamil, Mukta Malar போன்றவை. பாமினி, TSCII போன்ற பழைய எழுத்துருக்களைச் சமர்ப்பிப்புப் படிவம் மாற்றும்; சமர்ப்பிக்கும் முன் முன்தோற்றத்தைச் சரிபாருங்கள்.
Any Unicode Tamil font – Latha, Vijaya, Noto Sans Tamil, Mukta Malar and so on. Text in legacy fonts such as Bamini or TSCII is converted by the submission form; check the preview before you submit.
எப்படிச் சமர்ப்பிப்பது? How do I submit?
கட்டுரை சமர்ப்பிக்கும் பக்கத்தில் உள்ள படிவம் வழியாக Word (.docx) கோப்பைப் பதிவேற்றுங்கள். கட்டுரை எண்ணும் மதிப்பாய்வைப் பின்தொடர்வதற்கான தனி இணைப்பும் மின்னஞ்சலில் வரும்.
Upload a Word (.docx) file with the form on the Submit Manuscript page. An email follows with your article ID and a private link to follow the review.
கருத்தரங்கில் வாசித்த கட்டுரையைச் சமர்ப்பிக்கலாமா? Can I submit a paper presented at a seminar?
ஆம், அது கருத்தரங்க மலரிலோ வேறு எங்கோ முழுமையாக வெளியாகவில்லை என்றால். முன்பு வாசித்ததை ஆசிரியருக்குத் தெரிவியுங்கள்.
Yes, if it has not been published in full in seminar proceedings or elsewhere. Mention the earlier presentation to the editor.
ஒரே ஆய்வைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடலாமா? Can I publish the same work in Tamil and in English?
இல்லை. ஒரே ஆய்வை இரு மொழிகளில் வெளியிடுவது இருமுறை வெளியீடாகும். உங்கள் முந்தைய ஆய்வை மேற்கோள் காட்டி அதன் மேல் புதிதாக எழுதலாம்.
No. Publishing the same work twice in two languages is duplicate publication. You may cite your earlier work and build on it.
மதிப்பாய்வும் வெளியீடும் Review and publication
மதிப்பாய்வுக்கு எவ்வளவு காலம் ஆகும்? How long does peer review take?
பெரும்பாலானோருக்கு முதல் முடிவு 1–2 வாரங்களில் கிடைக்கிறது; மதிப்பாய்வாளர்கள் கிடைப்பதைப் பொறுத்து மாறலாம். ஒவ்வொரு ஆய்வுக் கட்டுரையையும், கட்டுரையாளர் யார் என்று அறியாத குறைந்தது இரண்டு மதிப்பாய்வாளர்கள் படிக்கின்றனர்.
Most authors receive a first decision within 1–2 weeks, depending on reviewer availability. Each research article is read by at least two reviewers who do not know who the authors are.
என் கட்டுரை எப்போது வெளியாகும்? When will my article be published?
இதழ் காலாண்டுக்கு ஒருமுறை வெளியாகிறது. உரிம ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டு, கட்டணம் செலுத்தி, மெய்ப்பை ஒப்புதல் அளித்ததும் ஏற்கப்பட்ட கட்டுரை அடுத்து வரும் இதழில் வெளியாகும்.
The journal is published quarterly. An accepted article appears in the next available issue once the licence agreement is signed, the APC is paid and the proof is approved.
என் கட்டுரைக்கு DOI கிடைக்குமா? Will my article get a DOI?
ஆம். வெளியாகும் ஒவ்வொரு கட்டுரைக்கும் 10.63300 என்ற முன்னொட்டுடன் Crossref DOI-யும் இதழ்த் தளத்தில் நிலையான பக்கமும் உண்டு.
Yes. Each published article receives a Crossref DOI with the prefix 10.63300 and a permanent page on the journal platform.
என் கட்டுரையின் நிலையை எப்படி அறிவது? How do I follow my article?
மின்னஞ்சலில் வந்த தனி இணைப்பைத் திறவுங்கள்; அல்லது கட்டுரை நிலை அறியும் பக்கத்தில் கட்டுரை எண்ணையும் ஓர் ஆசிரியரின் மின்னஞ்சலையும் உள்ளிடுங்கள்.
Open the private link in your email, or enter the article ID and an author’s email address on the Track Article page.
பதிப்புரிமை யாருக்கு? Who owns the copyright?
கட்டுரையாளர்களுக்கே. கட்டுரைகள் CC BY 4.0 உரிமத்தில் வெளியாகின்றன.
The authors keep the copyright. Articles are published under CC BY 4.0.
கட்டணமும் சான்றிதழும் Fees and certificates
களஞ்சியம் ஏதேனும் கட்டணம் வசூலிக்கிறதா? Does KALANJIYAM charge any fee?
சமர்ப்பிப்பு, ஆசிரியர் குழு ஆய்வு, மதிப்பாய்வு இலவசம். ஏற்கப்பட்டதும் ₹1,000 கட்டுரை வெளியீட்டுக் கட்டணம்; அதில் இணைய வெளியீடு, DOI பதிவு, எல்லாக் கட்டுரையாளர்களுக்கும் மின் சான்றிதழ்கள் அடங்கும். படிப்பதும் பதிவிறக்குவதும் இலவசம்.
Submission, editorial processing and peer review are free. On acceptance an article processing charge (APC) of ₹1,000 applies, covering online publication, DOI registration and e-certificates for all authors. Reading and downloading are free.
வெளியீட்டுக் கட்டணத்தை எப்படிச் செலுத்துவது? How do I pay the APC?
ஏற்கப்பட்டதும் கட்டுரை நிலை அறியும் பக்கத்தில் கட்டணத் தொகை, UPI QR குறியீடு, வங்கி விவரங்கள் தோன்றும். UPI அல்லது வங்கிப் பரிமாற்றம் மூலம் செலுத்தி, பரிவர்த்தனை எண்ணையும் (UTR) திரைப்பிடிப்பையும் அதே பக்கத்தில் அனுப்புங்கள்.
After acceptance the tracking page shows the amount, a UPI QR code and the bank details. Pay by UPI or bank transfer, then submit the transaction reference (UTR) and a screenshot on the same page.
வெளியீட்டுச் சான்றிதழ் கிடைக்குமா? Will I get a certificate of publication?
ஆம். இதழ் வெளியானதும் எல்லாக் கட்டுரையாளர்களுக்குமான மின் சான்றிதழ்கள் தொடர்பு ஆசிரியருக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படும். ஒவ்வொன்றுக்கும் எண்ணும் QR குறியீடும் உண்டு; சான்றிதழ் பதிவிறக்கப் பக்கத்தில் சரிபார்க்கலாம்.
Yes. When the issue is published, e-certificates for all authors are emailed to the corresponding author. Each has a number and a QR code that can be verified on the Download Certificate page.
இன்னும் கேள்வி உள்ளதா? Still have a question?
கட்டுரை எண் இருப்பின் அதைக் குறிப்பிட்டு editorial.kalanjiyam@ngmc.org முகவரிக்கு எழுதுங்கள்.
Write to editorial.kalanjiyam@ngmc.org, quoting your manuscript ID if you have one.
உதவி தேவையா? Need help?
- editorial.kalanjiyam@ngmc.org
- +91 97881 75456
- கட்டுரை எண்ணைக் குறிப்பிடுங்கள் Quote your manuscript ID