தேடல் புதினத்தில் மீனவர் வாழ்வைச் சுரண்டும் முதலாளித்துவம்

Unveiling the Struggles: Capitalism's Grip on Fishermen's Lives in the Novel Thedal

Authors

DOI:

https://doi.org/10.63300/kirjts0403202519

Keywords:

Fishing, Fisher men, Fishing association, Capitalism, Catemaron

Abstract

This research paper discusses the unique and ancient livelihood of traditional fishermen who rely on the simple Kattumaram (catamaran) as a foundational symbol of their labor, culture, and economic survival. This community is currently facing a severe crisis driven by modern capitalism, the unchecked intrusion of deep-sea mechanized fishing vessels, and detrimental government policies, which together have resulted in the seizure of their traditional resources and profound socio-economic marginalization. Ponneelan's novel, Thedal (The Search), is highlighted as a significant literary work that meticulously documents the historical moment when this oppressed fishing community awakens, uniting politically to form trade unions and fight for the recovery of their traditional rights and self-respect. This research aims to analyze the structural oppression faced by the Kattumaram fishermen as depicted in Thedal, examining the importance of their collective action through the lens of class struggle. Ultimately, the study seeks to establish, from a sociological perspective, that the Kattumaram is not merely a vessel but a crucial symbol of economic freedom, and its successful reclamation is indispensable for achieving social justice.

            மனித சமுதாயத்தின் தொன்மையான மற்றும் பாரம்பரியத் தொழில்களுள் கடலையே நம்பி வாழும் மீன்பிடித்தொழில் மிகவும் தனித்துவமானது. இயற்கை சார்ந்த இத்தொழில், தலைமுறை தலைமுறையாக மீனவ சமூகத்தின் வாழ்வாதாரமாகவும் கலாச்சார அடையாளமாகவும் திகழ்கிறது. நாள் முழுவதும் கடலின் சீற்றத்தையும் எதிர்பாராத ஆபத்துகளையும் எதிர்த்து, உயிருக்கும் உழைப்பிற்கும் சவால் விடும் இத்தொழிலில், மீனவர்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் தாங்கிப் பிடிக்கும் அடிப்படைச் சக்தியாகவும், நம்பிக்கையின் குறியீடாகவும் ‘கட்டுமரம்’ என்னும் எளிய சாதனம் நிலைபெறுகிறது. ஆனால், சமகாலத்தில் நவீன முதலாளித்துவத்தின் பேராசையினாலும் ஆழக்கடல் மீன்பிடி எந்திரங்களின் ஊடுருவலாலும் மீனவ சமூகம் கடுமையான நெருக்கடியைச் சந்திக்கிறது. பாரம்பரிய உரிமைகளும் வளங்களும் பெரு முதலாளிகளாலும், அரசின் திட்டமிடப்படாத மீன்பிடிக் கொள்கைகளாலும் பறிக்கப்படுகின்றன. இதன் விளைவாக, கட்டுமரத்தை ஆதாரமாகக் கொண்ட உழைக்கும் மீனவர்கள், வளச் சுரண்டலுக்கு உள்ளாகி, பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் புறக்கணிக்கப்படும் அவலம் தீவிரமடைகின்றது. அத்தகு ஒடுக்குமுறைக்கு எதிராக, தமது சுயமரியாதையையும் பாரம்பரிய வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்க விழிப்புறுகின்ற மீனவ சமூகம், அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து, தொழிற்சங்கமாகத் திரண்டு போராடும் வரலாற்றுத் தருணங்களை நுட்பமாகப் பதிவு செய்யும் இலக்கியப் படைப்புகளில் பொன்னீலனின் ‘தேடல்’ புதினம் முதன்மையானதாகும்.

 

இந்த ஆய்வு, கட்டுமர மீனவர்கள் சந்தித்திருக்கும் கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறைகள் எவ்வாறு புதினத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன என்பதையும், சுரண்டலை எதிர்த்து அவர்கள் மேற்கொள்ளும் கூட்டுச் செயல்பாட்டின் முக்கியத்துவத்தையும் வர்க்கப் போராட்டத்தின் பின்னணியிலிருந்து ஆராய்கிறது. குறிப்பாக, கட்டுமரம் என்பது வெறுமனே ஒரு படகல்ல, அது அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்தின் குறியீடு என்பதையும், அது மீட்கப்படுவதே சமூக நீதி என்பதையும் ‘தேடல்’ புதினத்தின் வழியே சமூகவியல் பார்வையில் நிலை நிறுத்துவதே இந்த ஆய்வின் இலக்காகும்.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • Mrs. S. Vinotha, Sona College of Arts and Science

    திருமதி சு.வினோதா, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேலம் – 05

    Mrs. S. Vinotha, Assistant Professor, Department of Tamil at Sona College of Arts and Science, Salem – 05

    Email: srimegha775@gmail.com

References

Ponnilanan. 2010. தேடல் [Thedal]. New century book house.

Downloads

Published

30-10-2025

How to Cite

திருமதி சு.வினோதா. (2025). தேடல் புதினத்தில் மீனவர் வாழ்வைச் சுரண்டும் முதலாளித்துவம்: Unveiling the Struggles: Capitalism’s Grip on Fishermen’s Lives in the Novel Thedal. KALANJIYAM - International Journal of Tamil Studies, 4(03), 307-312. https://doi.org/10.63300/kirjts0403202519

Similar Articles

You may also start an advanced similarity search for this article.