Abstract
சங்க காலத்தில் மக்கள் இயற்கையை முதன்மையாகக் கொண்டு வாழ்ந்தனர். இக்காலகட்டத்தில் மக்களின் நம்பிக்கைகள் இயற்கை வழிபாடு, சகுனம், நடுகல் மற்றும் தெய்வீக ஆற்றல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு அமைந்திருக்கின்றன. நம்பிக்கை மனித சமுதாயத்தின் ஆணிவேராக உள்ளது. இத்தகைய நம்பிக்கை ஒவ்வொரு காலக்கட்ட மனிதரின் வேறுபட்ட உணர்வாக அமைகின்றது. நம்பிக்கையை சமயநம்பிக்கை, மூட நம்பிக்கை எனப்பகுக்கின்றன. இலக்கியங்கள் அனைத்தும் அவ்வக் காலத்து நம்பிக்கையாகவோ அல்லது வாழ்வியல் நம்பிக்கையாகவோ பெரும்பான்மையாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய பண்டையத் தமிழரின் நம்பிக்கைகள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.