கொங்கு வட்டார நாவலாசிரியர் மு.பழனிசாமியின் இலக்கியப்பணிகள்
இரா.குமரவேல், முனைவர்பட்ட ஆய்வாளர் டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி, காளப்பட்டி சாலை, கோயம்புத்தூர்-48.
DOI:
https://doi.org/10.5281/zenodo.13828528Keywords:
Kongu Cultre, Ilakkiyangal, Mu Palanisamy, நாவலாசிரியர் மு.பழனிசாமி, Kongu HistoryAbstract
மக்களின் வாழ்க்கையைப் பண்படுத்தும் திறவுகோலாக இலக்கியங்கள் திகழ்கின்றன. இலக்கியத்தில் உயிரோட்டமான கருத்தாக்கங்களைப் படைப்பாளர்கள் படைப்பதனால் அவ்விலக்கியம் காலந்தோறும் நிலைத்திருந்து சமூகத்திற்குப் பயனளிக்கிறது. இலக்கியப் படைப்பாளர்களால் படைக்கப்பெறும் அனைத்து இலக்கியங்களும் கால வெள்ளத்தில் நிலைத்திருப்பதில்லை எனலாம். விழுமிய உணர்ச்சியுடன் புதுமையான கண்ணோட்டத்தில் சமூகத்தின் மாற்றத்திற்குரிய நிலையில் படைக்கப்பெறும் இலக்கியங்கள் மட்டுமே நிலைத்திருக்கின்றன. சமூகத்தின் மறுமலர்ச்சிக்குரிய விழுமியப்பதிவுகளைக் கொங்கு வட்டார வழக்குடன் படைக்கும் படைப்பாளராக மு.பழனிசாமி அவர்கள் விளங்குகிறார்.
கொங்கு வட்டாரத்தின் உறவுநிலை மரபுகள், சடங்கியல்கள், கலாச்சாரப் பின்புலங்கள், இயற்கைச்சூழல், நகரமைப்பு முதலியவற்றை வெளிப்படுத்தும் நோக்கில் மு.பழனிசாமியின் படைப்புகள் அமைந்திருக்கின்றன. அப்படைப்புகளில் சமூக மாற்றத்திற்குரிய கல்வி மேம்பாடு, பெண்ணியச்சிந்தனை, நவீனத்துவக் கொள்கை, விவசாயப் பெருங்குடிகளின் தற்கால வாழ்வியல் நிலை, சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு உண்டான வழிவகைகள் ஆகியனவும் இடம்பெற்றுள்ளன. இலக்கிய உலகில் தனித்துவமான படைப்புகளின் மூலம் தன் ஆளுமையை வெளிப்படுத்தி வரும் மு.பழனிசாமி அவர்கள் பல இலக்கிய நூல்களைப் படைத்துச் சமூக வளர்ச்சிக்குத் துணைநிற்கும் பேராளுமையாகத் திகழ்கிறார். அவர்தம் இலக்கியப்பணியின் சிறப்பினை ஆராய்ந்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.
Literature is the key to enrich people's lives. Authors create vivid ideas in literature, which helps society through time. All the literature created by literary creators may not stand the test of time. Only those literatures that are created in the changing state of society with innovative perspective with noble emotion survive. M. Palaniswami is known as the creator of social renaissance records with the case of Kongu district. M. Palaniswami's works are aimed at revealing the relationship traditions, rituals, cultural backgrounds, natural environment, urban structure, etc. of the Kongu area. The works also include educational development for social change, feminism, modernism policy, contemporary living conditions of agricultural families, and methods for environmental development. M. Palaniswami, who is expressing his personality through unique works in the world of literature, is a great person who supports social development by creating many literary books. This article explores the merits of his literary work.
Downloads
Downloads
Published
Issue
Section
License
Copyright (c) 2024 இரா.குமரவேல், முனைவர்பட்ட ஆய்வாளர் (Author)

This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.