பெண்பாற் புலவர் பாடல்களில் நெய்தல் தலைவியின் இருப்பு

முனைவர் கி. அய்யப்பன் கெளரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, உ. நா. அரசினர் கல்லூரி, பொன்னேரி- 601204

Authors

  • முனைவர் கி. அய்யப்பன் உ. நா. அரசினர் கல்லூரி, பொன்னேரி- 601204 Author

DOI:

https://doi.org/10.35444/

Keywords:

Tamil Language, History, Tamil Literature

Abstract

தமிழக வரலாற்றின் எக்காலத்தைக் காட்டிலும் பெண் கவிதைமொழி தன் தனித்துவத்தோடு செழித்திருந்த காலமாக சங்க காலத்தைக் கூறுவர். சங்கக் கவிதையின் மொத்தப் பரப்பில் பெண் கவிதை ஒரு சிறிய இடத்தையே பெறுகிறது. சங்கக் கவிதைகள் எழுதப்பட்டதும் கோட்பாட்டு மயமாக்கப்பட்டதும் வெவ்வேறு கால கட்டமாக உள்ளது. இச்சூழலில் சங்கப்பெண் கவிதை சுதந்திரமாக இருந்தாலும் அது கோட்பாட்டு மயமாக்கப்பட்டபோது முழுவதிலும் ஆண் மையக் கட்டமைப்புக்குள் வருகிறது. ஐந்திணைக்குரிய உரிப்பொருள் அனைத்தும் ஆண் தன்னிலை சார்ந்த கட்டமைப்பாகவே உள்ளது. சங்கக் கவிதைகள் திணைக் கோட்பாடு என்னும் பெரும் சட்டகத்திற்குள் அமையப் பெற்றுள்ளன. அகம்- புறம் என்ற வாழ்வியலின் இரு எதிர் நிலைகளுக்கிடையில் திணைக் கோட்பாடு சமனிலைப் படுத்தப்பட்டுள்ளது. நிலத்திற்கும் மனிதப் பண்பாட்டிற்குமான உறவு நிலையிலிருந்து அது உருவாக்கப்பட்டுள்ளது.

சமூக வாழ்வின் அனைத்துச் செயல்பாடுகளையும் பாடுகிறவர்களாகப் பெண்கள் வெளிப்படவில்லை என்றாலும் வாழ்க்கையின் நிலையாமை, இயலாத் தன்மை முதலியவற்றை பெண்பாற் புலவர்கள் பாடுபொருளாகக் கொண்டுள்ளனர். பெண்ணியச் சிந்தனைகள் கருத்தியல் கூர்மை பெற்றுள்ள இன்றைய சூழலில் திணைக் கோட்பாடு ஓர் ஆண் மையக் கட்டமைப்பாகக் காணப்படுகிறது. திணைக் கோட்பாட்டில், அகத்தில் பெண்ணுடல் ஆணுக்கான துய்ப்பு நிலையாக நுகர் பொருளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புறத்தில் பெண்ணுடல் என்பது நிலமாகப் பதிலீடுச் செய்யப்பட்டு போரின் வழியான கைப்பற்றலின் வழி ஆணின் அதிகாரத்திற்கும் ஆட்சிக்கும் உட்பட்டதாக நிலம் பொருளைக் கொள்கிறது. இந்த ஆண் மைய சட்டகத்திற்குள் நின்றே சங்கப் பெண் புலவர்கள் இயங்கினர் என்றாலும் சங்கப் பாடல்களின் பொது போக்கிற்குப் புறத்தாக நிற்கும் பால் அடையாளம் சார்ந்த நுட்பமான வேறுபாடுகளையும் தனித்துவங்களையும் கொண்டிருந்தனர்.  திணைக்கோட்பாடு தாண்டி சங்கப் பெண்கவிதை ஆராயப்பட வேண்டிய தேவைகளை இன்றைய பெண்ணிய விமர்சனங்கள் உருவாகியுள்ளன. விமர்சனங்களை முன்னிறுத்தி இக்கட்டுரையானது நெய்தல் திணை பாடிய பெண்பாற் புலவர்களின் பாடல்களில் பொதிந்துள்ள அக உணர்வான காதலையும், தலைவியானவள் பொருள் தேடச்சென்ற தலைவனுக்காகக் காத்திருக்கும் நிலையினையும் ஆராய்ந்து விளக்குவதாக அமைகிறது.

More than any other period in the history of Tamil Nadu, women's poetic language flourished with its uniqueness and the Sangam period is said to be the era. Women's poetry occupies a small place in the total area of ​​Sangam poetry. Sangam poems were written and theorized in different periods. In this context Sanghapene poetry is free but when it is theorized it falls entirely within the male-centric framework. All of the five-part adjectives are masculine constructs. The Sangam poems are situated within the larger framework of the Dhyana theory. The theory balances between the two opposite levels of biology, internal and external. It is created from the relationship between land and human culture.

Although women do not appear to sing all the activities of social life, women poets have sung about the impermanence of life, inability etc. In today's environment where feminist ideas have gained ideological sharpness, the doctrine of the department is seen as a male-centric structure. In sexual theory, the female body is internally designed as a consumable object for the male. In the periphery, the female body is substituted for the land, and the land takes on the meaning of subjection to male power and rule through conquest through war. Although Sangam women poets operated within this male-centric framework, they had subtle differences and idiosyncrasies based on gender identity that stood outside the general trend of Sangam songs. Feminist critiques of today have evolved into the need to examine Sangam women's poetry beyond chauvinism. In view of the criticisms, this article explores and explains the inner feeling of love embedded in the songs of female poets sung by Neythal Thani and the state of the heroine waiting for the leader who has gone in search of meaning.

Downloads

Download data is not yet available.

Author Biography

  • முனைவர் கி. அய்யப்பன், உ. நா. அரசினர் கல்லூரி, பொன்னேரி- 601204

    முனைவர் கி. அய்யப்பன், கெளரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, உ. நா. அரசினர் கல்லூரி, பொன்னேரி- 601204

    பேசி: 9962660279

    மின்னஞ்சல்: agniiyyappan@gmail.com

References

கேசிகன், புலியூர்(உ. ஆ), சங்க இலக்கியம், தொகுதி- 2, சாரதா பதிப்பகம், சென்னை, 2012.

சாமிநாதையர், டாக்டர் உ. வே.(ப. ஆ), குறுந்தொகை, கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1962

சுப்பிரமணியன், ச. வே.(உ. ஆ), சங்க இலக்கியம், தொகுதி- 3, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2010

நாராயணசாமி ஐயர்(உ. வி), நற்றிணை, கழக வெளியீடு, சென்னை, 1962.

பொன்முடி சுடரொளி, முனைவர் ஆ. ஆ., தமிழ்ச் செவ்விலக்கிய மரபில் நெய்தல் நில வாழ்வியல்,

தமிழ்த்துறை, உ. நா. அரசினர் கல்லூரி, பொன்னேரி, 2014.

முருகேசபாண்டியன், ந, சங்கப்பெண் கவிஞர்களின் கவிதைகள், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, 2010

Downloads

Published

01-11-2022

How to Cite

கி. அய்யப்பன். (2022). பெண்பாற் புலவர் பாடல்களில் நெய்தல் தலைவியின் இருப்பு : முனைவர் கி. அய்யப்பன் கெளரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை, உ. நா. அரசினர் கல்லூரி, பொன்னேரி- 601204 . KALANJIYAM - International Journal of Tamil Studies, 1(04), 33-45. https://doi.org/10.35444/

Similar Articles

21-30 of 40

You may also start an advanced similarity search for this article.