KALANJIYAM – International Journal of Tamil Studies
Vol. 10, No. 02 (September 2026)
Special Issue
Published October 8, 2026 · 22 articles
Special Issue Editor: முனைவர் ப.கற்பகராமன்
உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை
சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சேலம் - 05
அலைபேசி எண்: 9894210651
மின்னஞ்சல் முகவரி: dkkaveeswar@gmail.com
ORCID ID: https://orcid.org/0000-0003-1625-7209
Research Article
சங்க இலக்கியங்களில் தோழியின் சமூகப் பங்கு ஓர் ஆய்வு
The Social Role of the Female Companion in Sangam Literature: A Study
சங்க அக இலக்கியங்களில் தலைவி, தலைவன், பாங்கன், பாங்கி, செவிலி, நற்றாய் போன்ற பல்வேறு பாத்திரங்கள் இடம்பெறுகின்றன. இவர்களுள் தலைவி தனித்துவமான சமூகப் பங்கினை வைக்கிறாள். அவள் தலைவியின் நெருங்கிய தோழியாக மட்டுமின்றி தலைவியின் காதல் வாழ்க்கை, குடும்ப உறவு, சமூக ஒழுக்கம், திருமணம், பிரிவு, ஊடல் போன்ற பல்வேறு சூழல்களில் முக்கிய பங்களிப்பை செய்கிறாள். தலைவியின் உள்ளக்கருத்தை தலைவனிடம் எடுத்துரைப்பதும், தலைவனின் செயல்களை சுட்டிக்காட்டி அறிவுறுத்துவதும் தலைவியின் நலனை காப்பதும் தோழியின் முதன்மையான பணிகளாக அமைகின்றன.
தோழி தலைவிக்கும், தலைவனுக்கும் இடையே ஒரு தொடர்பு பாலமாக செயல்படுகிறாள். தலைவியின் சமூக பாதுகாப்பு, குடும்பத்தின் நற்பெயர், திருமணத்தின் அவசியம் ஆகியவற்றை தலைவனுக்கு உணர்த்துகிறாள். இதனால் தோழி ஒரு தனிப்பட்ட நட்புறவின் பாத்திரமாக மட்டுமல்லாமல், சங்ககால சமூக அமைப்பில் பெண்ணின் குரலை வெளிப்படுத்தும் முக்கியமான சமூகப் பிரதிநிதியாகவும் விளங்குகிறாள். அவ்வகையில் சங்க இலக்கியங்களில் தோழியின் சமூக பங்கினை பற்றி கட்டுரையில் விரிவாக காண்போம்.Sangam Akam literature presents various characters such as Thalaivi, Thalaivan, Paangan, Paangi, Sevili, and Nattrai. Among them, Thozhi (the heroine’s companion) plays an important social role. She supports the heroine in love, family relationships, marriage, separation, and conflicts. She communicates the heroine’s feelings to the hero, advises him, and protects the heroine’s dignity and welfare. Thozhi also acts as a bridge between the hero and heroine, emphasizing social values, family honour, and the importance of marriage. Thus, she represents not only friendship but also the voice and social agency of women in Sangam society.
தமிழ் இலக்கியங்களில் அறப்பண்புகளும் மனித நேயமும்
Ethical Values and Humanism in Tamil Literature
அறவழி மனிதன் வாழ வேண்டும், அவன் பிற உயிர்களையும் தன் உயிர்போல நினைத்து நேசிக்க வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் இலக்கியங்கள் வெறும் கற்பனை நயத்திற்காக மட்டும் படைக்கப்படவில்லை. சமுதாயத்தை நெறிப்படுத்தும், பண்படுத்தும் அறப்பணிகளைச் செய்து வந்துள்ளன. மனிதன் தன் வாழ்வில் கடைபிடிக்கவேண்டிய அன்பு, கருணை, ஈகை, இரக்கம், பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமை, பிறருக்கு உதவும் மனப்பான்மை போன்ற உயர்ந்த குணங்களின் தொகுப்பாகும். அறத்தைவிட உயர்ந்த செல்வமும் இல்லை. அதை மறப்பதை விட பெரிய தீங்கும் இல்லை என்பார் வள்ளுவர். அறப்பண்பு மனிதனை உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்கிறது. முதலில் மனிதன் தன்னை நேசிக்கக் கற்கவேண்டும். பின்புதான் அவனால் உலகை நேசிக்க முடியும். செய்யவேண்டியதைச் செய்தலும் செய்யக்கூடாததைத் தவிர்த்தலும் அறத்தின் அடிப்படைக் கூறாகும். சங்ககாலம் முதல் இக்காலம் வரை தமிழ் இலக்கியப்பரப்பில் அறப்பண்பும் மனிதநேயமும் எவ்வாறு போற்றப்பட்டுள்ளது என்பதை இக்கட்டுரை விரிவாக ஆராய்கிறது.
Human beings ought to live a righteous life, cherishing other living beings just as they cherish their own lives. Tamil literature, spanning two millennia, was not created merely for imaginative appeal; it has played a vital role in guiding and refining society. It embodies noble virtues that humans should practice—such as love, compassion, generosity, mercy, non-harming of other beings, and a helpful disposition. Valluvar asserts that there is no wealth greater than virtue, and no greater harm than forsaking it. A virtuous nature elevates a human being to a higher plane. One must first learn to love oneself before one can truly love the world. Performing right actions and abstaining from wrong ones constitute the fundamental elements of virtue. This article examines in detail how the values of virtue and humanism have been cherished in the realm of Tamil literature from the Sangam era to the present day.
தேவிபாரதியின் நாவல்களில் காணப்படும் கதைமாந்தர்களின் வாழ்வியல் நெறிகள்
The lifestyles of the protagonists found in Devi Bharathi's novels
படைப்பாளர்கள் சமூகத்திற்கு உணர்த்த முற்படுகின்ற கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு கதாப்பாத்திரங்களே மிகச் சிறந்த கருவியாகத் திகழ்கின்றது. படைப்பாளர்கள் தாங்கள் கூறநினைக்கின்ற கருத்துக்களை வாசகர்களுக்குப் புலப்படுத்துவதற்காக பல புலப்பாட்டு நெறிமுறைகளை மேற்கொள்கின்றனர். படைப்பாளர்கள் கூறக்கூடிய கருத்துக்கள் ஒன்றாக இருப்பினும் அவற்றை வெளிப்படுத்துவதற்கு கையாளுகின்ற நுணுக்கங்கள் வேறுபடுகின்றன. தேவிபாரதி நாவல்களில் காணப்படுகின்ற கதைமாந்தர்களும் கதைக்கருவும் தனது அனுபவ வாழ்வுடன் தொடர்புடையவர்களாகவே காணப்படுகின்றனர். கதைகளில் வருகின்ற பெண் கதைமாந்தர்கள் மற்றும் ஆண் கதைமாந்தர்கள் அவர்களின் இயல்புகள் பற்றி விரிவாக ஆராயப்படுகின்றனர். ஒரு படைப்பாளி தனது படைப்பில் வாழ்க்கையினைப் பதிவு செய்கின்றார். படைப்பில் அவர் முன்வைக்கின்ற வாழ்க்கைக்கும் மனிதர்களுக்கும் உண்மைக் குணங்களைத் தனது அனுபவங்களிலிருந்து வெளிக்கொணர்கிறார்.
படைப்புலகில் வாழ்வு என்பது உலகியல் வாழ்வின் இன்னொரு பக்கமாகச் சித்தரிக்கப்படுகின்றனர். படைப்பாளியின் அனுபவம் மற்றும் கலையியல்பு இவற்றினைப் பொறுத்து தனது படைப்புக்குள் நடமாடச் செய்யும் தன்மையும் மாறுபடுகின்றது. அதேபோன்று கதைமாந்தர்களின் தன்மையினைப் பொறுத்து கதையின் பின்புலமும் கதைக்கருவும் மாற்றம் காண்கின்றது. அவ்வகையில் தேவிபாரதியின் சில முக்கிய கதாப்பாத்திரங்களே ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.Characters are the best tool for expressing the ideas that creators try to convey to the society. Creators adopt many expressive methods to convey the ideas they want to convey to the readers. Although the ideas that creators can express are the same, the subtleties used to express them differ. The narrators and the plot seen in Devi Bharathi's novels are seen as related to their own experiences. The female and male narrators in the stories are examined in detail about their natures. A creator records life in his work. He reveals the true qualities of the life and people he presents in his work from his experiences.
In the world of creation, life is depicted as another side of worldly life. Depending on the experience and artistic style of the creator, the nature of the movement in his work also varies. Similarly, the background and plot of the story changes depending on the nature of the narrators. In this way, this article examines some of the key characters of Devi Bharathi.காலந்தோறும் தமிழும் பல்துறை அறிவும்
Tamil and Multidisciplinary Knowledge Through the Ages
தமிழ்மொழியின் வளர்ச்சியானது இலக்கியப் படைப்புகளின் எண்ணிக்கை பெருகிய வரலாறு மட்டுமல்ல. பல்வேறு அறிவுத் துறைகளுடன் இணைந்து வந்த வரலாறாகவும் அமைகிறது. சங்க இலக்கியங்களில் இயற்கை, நிலவியல், வேளாண்மை, காலநிலை, விலங்கியல், கடல்சார் வாழ்க்கை, வணிகம் போன்றவை மக்களின் வாழ்க்கை முறைகளைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. அற இலக்கியங்களில் மருத்துவம், அரசியல், பொருளாதாரம், ஒழுக்கவியல் போன்ற அறிவுத்துறைகள் முறையான சிந்தனைகளாக அமைகின்றன. காப்பியங்கள் இசை, நடனம், நாடகம், நகர அமைப்பு போன்ற கலை மற்றும் சமூக அறிவுகளைப் பதிவு செய்கின்றன. நவீன காலத்தில் அச்சு, அறிவியல் தமிழ், கலைச்சொல்லாக்கம், ஆகியவற்றின் வழியாக தமிழ் புதிய அறிவுகளை ஏற்றுக்கொள்கிறது. இன்றைய நிலையில் கணினித் தமிழ், இணையத் தமிழ், செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளுடன் தமிழ் இணைந்து வளர்ந்துள்ளது. இவ்வாறு சங்ககாலம் முதல் தமிழின் வளர்ச்சியைப் பல்துறை அறிவின் தொடர்ச்சியான பயணமாக இக்கட்டுரை அமைந்துள்ளது.
The evolution of the Tamil language is not merely a history of the proliferation of literary works; it is also a journey intertwined with various fields of knowledge. Sangam literature documents aspects such as nature, geography, agriculture, climate, zoology, maritime life, and trade through the lens of people's lifestyles. Didactic literature incorporates fields like medicine, politics, economics, and ethics as structured systems of thought. Epic literature records knowledge regarding arts and society, including music, dance, drama, and urban planning. In modern times, Tamil has embraced new knowledge through printing, scientific Tamil, and the coining of technical terminology. Currently, the language has evolved alongside fields such as computer-based Tamil, internet-based Tamil, and artificial intelligence. Thus, this article presents the growth of Tamil from the Sangam era to the present as a continuous journey alongside multidisciplinary knowledge.
ஆண்டாள் திருப்பாவை கூறும் உளவியல் கருத்துக்கள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு சிந்தனைகள் - ஓர் ஆய்வு.
Psychological Insights and Concepts of Social Unity in Andal's *Thiruppavai*: A Study.
பக்தி இலக்கியத்தின் முத்துப் பெட்டகம் ஆண்டாள் அருளிய திருப்பாவை. ஆன்மீக வெளிப்பாட்டைக் கடந்து மனித மனத்தின் ஆழடுக்குகளைச் செம்மைப்படுத்தும் மாபெரும் உளவியல் களமே இத்திருப்பாவை.
திருப்பாவை முப்பது பாசுரங்களும் திருமாலின் பெருமைகளைப் பாடி, அவனுடைய திருவருளைப் பெற்ற வரலாற்றை எடுத்துக் கூறுவது. இப்பிரபந்தத்தின் உட்கருத்து, கண்ணனின் திருவருளைப் பெறுவதை, இறுதி இலட்சியமாகக் கொண்டு ஆண்டாளும், ஆயர்குல சிறுமியும் தங்களுக்கும், உலகத்தார்க்கும் எல்லாவித சிறப்பான நன்மைகள் கிடைக்க மேற்கொண்ட இந்நோன்பைக் குறிக்கும் ஓர் அற்புத இலக்கியம். இந்நூலைப் படிக்கும் போது ஏற்படும் உணர்வு "யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன்" (1-11) கூறுவதை பிரதிபலிக்கும் கீதை.
இச்சிறந்த பக்தி இலக்கியத்தில் உளவியல் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு சிந்தனைகள் எங்கெங்கு, எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது என்பதை இவ்வாய்வின் நோக்கமாகும்.Thiruppavai,graced by Andal ,is a treasure chest of devotional literature. Beyond being an expression of spirituality, this text serves as a grand psychological arena that penetrates deep into the recesses of the human mind.
All thirty hymns (Pasurams) of Thiruppavai sing the glories of Lord Vishnu (Thirumal) and narrate the history of obtaining his divine grace. The core concept of this text is that it is a wonderful piece of literature denoting the penance (Nonbu) undertaken by Andal and the young girls of the cowherd community for themselves and for the people of the world to receive all kinds of excellent benefits, keeping the attainment of Lord Krishna’s (kannan) divine grace as their ultimate goal. The feeling that arises while reading this book reflects the Gita, which says, “In whatever way men approach Me, in that same way do I accept them”. The objective of this research is to analyze where and how psychological and aesthetic unification thoughts have been handled in this outstanding devotional literature.சங்கப் பாடல்களில் எச்சரிக்கை நிமித்தங்கள்
Sanga Padalgalil Nannimiththangal
பண்டையத் தமிழர்களின் வாழ்வியல் கருவூலமாகத் திகழும் சங்க இலக்கியங்கள், அவர்களின் பண்பாடு, நம்பிக்கை மற்றும் இயற்கையுடனான பிணைப்பை வெளிப்படுத்துகின்றன. மனிதன் தன் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நன்மைகளையும் தீமைகளையும் இயற்கையின் சில அறிகுறிகள் மூலம் முன்கூட்டியே உணர்ந்து கொண்டான். இவ்வறிகுறிகளே ‘நிமித்தங்கள்’ அல்லது சகுனங்கள் எனப்பட்டன. தொல்காப்பியக் காலம் தொட்டு சங்க காலம் வரை இந்நிமித்தங்கள் தமிழர்களின் அக, புற வாழ்க்கையில் மிக முக்கியப் பங்காற்றியுள்ளன. இவ்வாய்வுக் கட்டுரை, சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்களில் பயின்று வந்துள்ள நிமித்தங்கள் (நன்னிமித்தம்) பற்றிய பதிவுகளைத் தொகுத்துக் காண்பதையும், அவற்றின் பின்னணியில் உள்ள மக்களின் உளவியல் மற்றும் இயற்கை சார்ந்த அறிவை ஆராய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சங்க கால மக்கள் விரிச்சி கேட்டல் (நற்சொல்), புள் (பறவைகளின் ஒலி/செய்கை), பல்லி கத்துதல், காகம் கரைதல், கனவுகள் மற்றும் கோள்களின் நிலை மாறுபடுதல் போன்ற பல்வேறு நிமித்தங்களை நம்பியுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தலைவியின் ஆற்றாமைக்கு மருந்தாக நன்னிமித்தங்களும், இவை வெறும் மூடநம்பிக்கையாக மட்டுமில்லாமல், சங்க கால மக்களின் ஆழ்ந்த இயற்கையறிவையும், அவர்களின் மன உணர்வுகளுக்கு வடிகாலாக அமைந்த உளவியல் தேவையையும் பிரதிபலிக்கின்றன என்பதை இவ்வாய்வுக் கட்டுரை நிறுவுகிறது.Sangam literature, serving as a repository of the ancient Tamils' way of life, reveals their culture, beliefs, and deep-seated bond with nature. Through specific natural signs, humans were able to anticipate in advance the fortunes and misfortunes they would encounter in their daily lives. These very signs came to be known as ‘Nimithangal’ or omens. From the era of ‘Tolkappiyam’ through the Sangam period, these omens played a pivotal role in the domestic (Akam) and public (Puram) lives of the Tamils. This research paper aims to compile and present the references to omens—specifically auspicious (Nannimittam) signs—found within the Sangam literary corpus, comprising the ‘Ettuthogai’ and ‘Pathupattu’ anthologies; furthermore, it seeks to analyze the underlying human psychology and knowledge of the natural world that inform these beliefs.
It has been established that the people of the Sangam era placed their faith in various omens, such as ‘Virichi’ (listening for auspicious words), ‘Pul’ (the sounds or actions of birds), the chirping of lizards, the cawing of crows, dreams, and shifts in planetary positions. While auspicious omens served as a solace for the heroine in her distress, inauspicious omens acted as warnings for kings embarking on war. This research paper establishes that these elements are not merely superstitions, but rather reflect the profound understanding of nature possessed by the people of the Sangam era, as well as the psychological need that served as an outlet for their emotional expressions.தவ்வை: இலக்கியச் சொல்லாடலும் வளமைக் கருத்தாக்கங்களும்
Thavvai: Literary Expressions and Conceptualization of Fertility
தவ்வை என்ற சொல் தமிழில் அன்னையையும் மூத்த சகோதரியையும், இவ்விடத்தில் தமிழர்களின் ஆதித்தெய்வமும் வளமைத்தெய்வமுமாகிய மூத்ததேவியையும் குறிக்கின்றது. தற்காலத்தில் இத்தெய்வ வழிபாடு மறைந்துவரும் நிலையில் மூதேவி என்ற வசைச்சொல்லின் பயன்பாடு மக்களிடையே இருப்பதனைக் காண முடிகின்றது. சங்ககாலத்து இலக்கியங்கள் முதற்கொண்டு தற்கால இலக்கியம் வரை தவ்வையைக் குறித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ வரும் பல்வேறு பெயர்கள் காணக்கிடைக்கின்றன. அப்பெயர்களின் ஆய்வு இத்தெய்வம் வளமைக்கும் செழிப்புக்கும் உரிய தெய்வமாக இருந்தது என்ற கருத்தினை உணர வழிவகுக்கும். இதன் வழி மூதேவி என்ற சொல், வசைச்சொல் அல்ல வளமைச்சொல் என நிரூபிப்பது இவ்வாய்வின் நோக்கமாக அமைகின்றது.
The term 'Thavvai' in Tamil denotes mother and elder sister, and in this context, it refers to the primordial goddess and the goddess of Prosperity or Abundance of the Tamils, known as Moodevi. At present, while the worship of this deity is gradually declining, the use of ‘Moodevi’ as a derogatory term can be observed among the people. From Sangam-period literature through contemporary literature, various names referring to Thavvai, either directly or indirectly, can be found. The study of these names helps establish that this deity was associated with prosperity and abundance. Through this, the objective of this research is to establish that the word 'Moodevi' is not a derogatory term but a term denoting prosperity.
தொல்காப்பியத்தில் அறிவியல் சிந்தனைகள்
Scientific Thoughts in Tolkappiyam
சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியின் முதல் நூலான தொல்காப்பியம் மொழி, இலக்கிய இலக்கண வரையறைகளைத் தாண்டி, பழந்தமிழரின் வாழ்வியலையும் அறிவியல் சிந்தனைகளையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் முதன்மை நூலாகும். உலக நாகரிகங்கள் வளரத் தொடங்கிய காலத்திலேயே தமிழர்கள் அறிவு உச்சத்தை எட்டியிருந்தனர் என்பதைத் தொல்காப்பிய நூற்பாக்கள் மற்றும் உரைகளின் அடிப்படையில் வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இக்கட்டுரையில், உலகத் தோற்றம் குறித்த தொல்காப்பியரின் ஐம்பூதக் கொள்கை மேலைநாட்டு அறிஞர்களின் பிரபஞ்சப் பரிணாமக் கொள்கைகளோடு ஒப்பிடப்படுகிறது. மேலும், உடலையும் உள்ளத்தையும் துன்புறுத்தும் பிணி மற்றும் நோய்களைத் தானே கண்டறியும் ஆண், பெண் இருபால் "நோய் மருங்கறிஞர்கள்" பற்றியும், வேம்பு, கடுக்காய் போன்ற மூலிகைகளைப் பயன்படுத்திய "வாயுறை" மருத்துவ முறைகள் குறித்தும் ஆராயப்படுகிறது. அதிர்வும் மனத் தடுமாற்றமும் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி இதய நோய்களுக்கு வழிவகுக்கும் உடலியல் உண்மைகளையும், பெண்களின் கருவுறும் காலத்தைப் பன்னிரண்டு நாட்கள் ("பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்") எனத் துல்லியமாகக் கணக்கிட்ட சான்றோர்களின் கணிதவியல் கண்ணோட்டத்தையும் இக்கட்டுரை தெளிவுபடுத்துகிறது.
முடிவாக, இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு இலக்கியங்கள் அடித்தளம் அமைப்பதற்கு முன்பே, அவற்றுக்கெல்லாம் முற்பட்ட இலக்கண நூலான தொல்காப்பியம் இயற்கையின் இயல்பு மாற்றங்கள், மருத்துவம், கணக்கியல் போன்ற அறிவியல் கூறுகளை அழகுபடப் பதிவு செய்து பழந்தமிழரின் தத்துவார்த்த அறிவியல் அடித்தளமாக விளங்குவதை இக்கட்டுரை உறுதி செய்கிறது.*Tholkappiyam*, the earliest extant text of the distinguished Tamil language, transcends mere linguistic and literary definitions; it is a seminal work that encapsulates the lifestyle and scientific insights of the ancient Tamils. This article aims to demonstrate—based on the *sutras* (aphorisms) and commentaries of *Tholkappiyam*—that Tamils had attained intellectual heights at a time when other world civilizations were merely beginning to develop.
The article compares Tholkappiyar’s theory of the five elements (*pancha-bhuta*) regarding the origin of the universe with the theories of cosmic evolution proposed by Western scholars. Furthermore, it examines the "healers" (both male and female) who diagnosed ailments affecting the body and mind, as well as the "Vayurai" medical practices that utilized medicinal herbs such as neem and *kadukkai* (haritaki). The article also elucidates physiological insights—such as how stress and mental agitation induce high blood pressure and lead to heart disease—and highlights the mathematical precision of ancient scholars who accurately calculated the female fertile period as twelve days.
In conclusion, the article affirms that long before literature laid the foundation for modern scientific advancement, *Tholkappiyam*—a grammatical treatise predating such literature—beautifully documented scientific elements like natural phenomena, medicine, and mathematics, thereby serving as the philosophical and scientific foundation of ancient Tamil civilization.ஆற்றுப்படை நூல்களில் கலைஞர்கள்
Artists in *Aatruppadai* Literature
சங்க இலக்கியம் இலக்கிய வளமும், இலக்கண வளமும் பெற்று தனித்தியங்கவல்ல சிறப்பினை உடையது. தமிழர்களின் மிக நீண்ட பண்பாட்டிற்கும் தனி சிறந்த நாகரிகத்திற்கும், பழம்பெரும் மரபுகளை புரிந்து கொள்வதற்கும் கலைகள் சான்றாக விளங்குகின்றது. சங்ககால வாழ்க்கை முறை இயற்கையமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சங்க இலக்கியத்தை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்று இரண்டாக பகுத்துள்ளனர். இதில் பத்துப்பாட்டில் கலைகளும், கலைஞர்களும் அதிகமாகக் காணப்படுகின்றனர். பத்துப்பாட்டில் ஆடல், பாடல், இசைக் கலையில் சிறந்து விளங்கிய பாணர், விறலியர், கூத்தர், பொருநர் உள்ளிட்ட கலைப்படைப்பாளர்கள் எவ்வாறு கலையில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அறிய முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Sangam literature possesses the unique distinction of being rich in both literary and grammatical excellence. The arts serve as a testament to the Tamils' enduring culture, distinctive civilization, and ancient traditions. The Sangam way of life was deeply rooted in the natural environment. Sangam literature is categorized into two main divisions: *Ettuthogai* and *Pathupattu*. Among these, the *Pathupattu* anthology offers significant insight into the arts and the artists of the era. This article aims to explore how various performing artists—such as *Panar*, *Viraliyar*, *Koothar*, and *Porunar*—engaged in their respective arts of dance, song, and music as depicted in the *Pathupattu*.
சங்க இலக்கியத்தில் அளவீடுகள்
Measurements in Sangam Literature
பண்டைத் தமிழர்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகச் சங்க இலக்கியம் திகழ்கின்றது. ஓர் இனத்தின் நாகரிகப் பரிணாம வளர்ச்சியை மதிப்பிடுவதற்கு அவ்வினம் பயன்படுத்திய அறிவியல் மற்றும் கணிதக் குறியீடுகள் மிக முக்கியச் சான்றுகளாகும். அவ்வகையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்ச் சமூகம், வெறும் கற்பனை வளம் மிக்க இலக்கியச் சமூகம் மட்டுமல்லாமல் துல்லியமான அறிவியல் மற்றும் வணிகக் கோட்பாடுகளைக் கொண்டிருந்த ஓர் அறிவுச் சமூகம் என்பதைச் சங்க இலக்கியம் வழி அறியமுடிகிறது.
திணைசார் வாழ்க்கையையும், உள்நாட்டு, வெளிநாட்டு வாணிகத்தையும் அடித்தளமாகக் கொண்ட சங்க காலத்தில் பண்டமாற்று முறைக்கும் அரசு நிர்வாகத்திற்கும் அளவீடுகள் இன்றியமையாத தேவையாக இருந்தன. பண்டமாற்று முறையில் பொருட்களின் அளவீட்டு முறைகள் பொருட்களின் நிலை மற்றும் அவற்றின் மதிப்புக் கருதியே அமைந்தது எனலாம். சங்க இலக்கியக் கோட்பாடுகளின் துணைகொண்டு பண்டைத் தமிழர்கள் பயன்படுத்திய நீட்டல், முகத்தல், நிறுத்தல் அளவைகளின் அமைப்பையும் அவற்றின் பின்னால் உள்ள சமூகப் பொருளாதார அறிவியல் பின்னணியையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.Sangam literature serves as a mirror reflecting the lifestyle of the ancient Tamils. The scientific and mathematical notations employed by a people constitute vital evidence for assessing the civilizational evolution of that community. In this context, Sangam literature reveals that the Tamil society of two millennia ago was not merely a community rich in imaginative literature, but also an intellectual society grounded in precise scientific and commercial principles.
During the Sangam era—a period defined by landscape-based lifestyles (*Tinai*) and both domestic and foreign trade—systems of measurement were indispensable for the barter system and state administration. It can be observed that the methods used to measure goods in the barter system were determined by the nature and value of the commodities themselves. This article aims to examine—drawing upon the principles found in Sangam literature—the systems of linear, volumetric, and weight measurements used by the ancient Tamils, as well as the underlying socio-economic and scientific contexts.பிற்கால அறஇலக்கியங்களில் குற்றவியல் சிந்தனைகளும் சமூக நீதி நிர்வாகமும்
Concepts of Criminal Justice and the Administration of Social Justice in Later Didactic Literature
மனிதன் வாழக்கூடிய சமுதாயத்தின் ஒழுங்கிற்கும் அமைதியான வாழ்வியல் சூழலுக்கும் அடிப்படையாக விளங்குபவை அறச் சிந்தனைகளே. தமிழ் இலக்கியப் பரப்பில் சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலத்தைத் தொடர்ந்து, பிற்காலத்திலும் குறிப்பாக 14-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் பல நீதி நூல்கள் தோன்றின. அவை சமூகத்தின் ஒழுங்கிற்கும் அமைதியான வாழ்வியலுக்கும் தேவையான நெறிமுறைகளை வழங்கின. பிற்கால அற இலக்கியங்களான நீதிநெறி விளக்கம், நன்னெறி, அறநெறிச்சாரம், மாயூரம் வேதநாயக பிள்ளையின் நீதிநூல் போன்றவை தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவதோடு, சமூகம் என்ற அமைப்பில் குற்றத் தடுப்பு, குற்றங்களுக்கான தண்டனைக் கோட்பாடுகள், நீதி நிர்வாகம் ஆகியவற்றையும் நுட்பமாக விளக்குகின்றன. பிற்கால அறஇலக்கியங்களில் பொதிந்துள்ள குற்றவியல் சிந்தனைகளையும் சமூக நீதி நிர்வாக முறைகளையும் பன்முகப் பார்வையில் ஆய்வதே இக்கட்டுரையின் முதன்மை நோக்கமாகிறது..
Ethical thought forms the foundation for social order and a peaceful way of life. Following the Sangam and post-Sangam eras, a significant number of didactic works emerged in Tamil literature during the later period—specifically between the 14th and 19th centuries. These texts provided the necessary guidelines for maintaining social order and ensuring a harmonious existence. Later ethical works—such as *Neethineri Vilakkam*, *Nanneri*, *Aranericharam*, and Mayuram Vedanayagam Pillai’s *Neethinool*—not only emphasize individual morality but also offer nuanced insights into crime prevention, theories of punishment, and the administration of justice within the social framework. The primary objective of this article is to examine, from a multifaceted perspective, the concepts of criminology and the systems of social justice administration embedded in these later ethical literary works.
மனித வாழ்வியலில் நாக வழிபாடு Naga Worship in Human life
Naga Worship in Human life
புராணகாலம்தொட்டு இன்று வரையிலும் உலகில் பல்வேறு இன மக்களிடையே நாக வழிபாடானது இருந்து வருகின்றது. ஒவ்வொரு நாட்டினரும் ஒவ்வொரு பெயர் வைத்து வெவ்வேறு முறையில் நாகவழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வெப்பமண்டல பகுதியான தென்னிந்தியாவில் பல இடங்களில் நாகத்திற்கான கோவில்களும் அவற்றிற்கான வழிபாடுகளும் நேர்த்திக்கடன்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் குறிப்பாக குறிஞ்சி, முல்லை நிலங்களைப் பெறுமளவில் கொண்டிருக்கும் கொங்கு நாட்டில் நாகவழிபாடு பெற்றுள்ள முக்கியத்துவத்தினை இக்கட்டுரை முன்வைக்கிறது. சிறுதெய்வ வழிபாடு நிறைந்துள்ள கொங்குநாட்டில் பல இடங்களில் நாகத்;திற்கான கோவில்களும், நாக சிற்பங்களும் அமைந்து இன்றளவும் பெருவாரியான மக்களால் வழிபடப்பட்டு வருகின்றன. கொங்குநாட்டில் நாகவழிபாடு பெற்றுள்ள முக்கியத்துவத்தினையும் உட்பொருளையும் ஆராயும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது
From ancient times to the present day, Naga worship has existed among various ethnic groups around the world. People of each nation have adopted different names and practiced Naga worship in diverse ways. Particularly in South India, a tropical region, temples dedicated to Nagas, along with rituals and votive offerings, continue to be observed in many places. This article highlights the significance of Naga worship in Tamil Nadu, especially in the Kongu region, which largely comprises Kurinji and Mullai landscapes. In the Kongu region, which is abundant with folk deity worship, Naga temples and Naga sculptures are found in many places and are still worshipped by a large number of people today. This article is structured to explore the importance and underlying significance of Naga worship in the Kongu region.
சங்க இலக்கியப் புறநானூற்றில் வெளிப்படும் தலைமைத்துவப் பண்புகளும் இன்றைய கல்வித் தலைமைத்துவத்திற்கான அவற்றின் பொருத்தமும்
இவ்வாய்வுக் கட்டுரை சங்க இலக்கியமான புறநானூற்றில் வெளிப்படும் தலைமைத்துவப் பண்புகளை அடையாளம் கண்டு, அவை இன்றைய கல்வித் தலைமைத்துவத்துடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன என்பதை ஆராய்கிறது. அரசரின் அறநெறி, நீதி, பொதுநலப் பொறுப்பு, கொடை, ஆலோசனையை மதித்தல், துணிவு மற்றும் மக்களுடன் கொண்ட உறவு ஆகியவை முக்கிய கருப்பொருள்களாகக் கொள்ளப்பட்டன. தரமான விளக்கவியல் அணுகுமுறையின் கீழ் புறநானூற்றில் தலைமை சார்ந்த கருத்துகள் உள்ள தெரிவுசெய்யப்பட்ட பாடல்களும், அவற்றைப் பற்றிய ஆய்வுகளும் நோக்கமுடைய மாதிரியாகப் பயன்படுத்தப்பட்டன. கருப்பொருள் உள்ளடக்கப் பகுப்பாய்வு மூலம் கிடைத்த கருத்துகள் சேவகர் தலைமைத்துவம், மாற்றுத் தலைமைத்துவம் மற்றும் மதிப்புசார் கல்வித் தலைமைத்துவக் கோட்பாடுகளுடன் ஒப்பிடப்பட்டன. புறநானூற்றின் தலைமைச் சிந்தனைகள் நவீன கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகப் பிரதியிடப்பட வேண்டியவை அல்லாதபோதிலும், நீதி, சேவை, பொறுப்புணர்வு மற்றும் பொதுநல நோக்கு போன்ற பண்புகள் கல்வித் தலைவர்களின் ஒழுக்கநெறி நடைமுறைக்கு பயனுள்ள பண்பாட்டு அடித்தளமாக அமையக்கூடும் என ஆய்வு முடிவுறுகிறது.
தமிழ் திறவுச்சொற்கள்: புறநானூறு, தலைமைத்துவம், கல்வித் தலைமைத்துவம், அறநெறித் தலைமை, சேவகர் தலைமைத்துவம்.This research article examines leadership qualities represented in Purananuru, a major work of Sangam literature, and considers their relevance to contemporary educational leadership. The study focuses on ethical responsibility, justice, public welfare, generosity, consultation, courage, and relationships between leaders and communities. A qualitative interpretive design is adopted, using purposively selected leadership-related Purananuru texts together with relevant scholarly literature. Thematic content analysis is used to identify recurring leadership themes and compare them with servant, transformational, and values-based educational leadership. The analysis suggests that Purananuru should not be transferred uncritically into modern institutions; however, its emphasis on fairness, service, responsibility, and collective welfare offers a culturally grounded perspective for reflecting on ethical leadership practice.
புறநானூற்றில் அரசியல் கோட்பாடுகளும் செங்கோன்மை நெறிகளும்
Political Theories and Principles of Righteous Rule in Purananuru
பண்டைய தமிழ்ச் சமூகத்தின் அகம், புற வாழ்க்கைப் பதிவுகளுள் புறநானூறு ஒப்பற்ற வரலாற்றுப் பேழையாகும். சங்க கால அரசியலமைப்பு, மன்னர்களின் கடமைகள், ஆட்சி நெறிமுறைகள், வரி வசூல் கோட்பாடுகள் மற்றும் அறமன்றங்களின் செயல்பாடுகள் குறித்துப் புறநானூற்றுப் பாடல்கள் விரிவாகப் பேசுகின்றன. இக்கட்டுரை, புறநானூற்றில் இடம்பெற்றுள்ள அரசியல் கோட்பாடுகளையும், "செங்கோன்மை" எனப்படும் நீதி தவறா ஆட்சிமுறையையும், அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான உறவையும் விரிவாக ஆராய்கிறது. நவீன அரசியல் அறிவியல் சிந்தனைகளுக்கு இணையான கோட்பாடுகள் சங்க காலத்திலேயே நடைமுறையில் இருந்ததை இக்கட்டுரை நிறுவுகிறது.
Among the records of internal and external lives of the ancient Tamil society, Purananuru is an incomparable historical treasure. The poems of Purananuru discuss in detail the political structure, duties of kings, principles of governance, taxation theories, and the functioning of courts of justice during the Sangam era. This paper comprehensively examines the political concepts featured in Purananuru, the system of righteous governance known as "Sengonmai" (unwavering justice), and the relationship between the state and its citizens. This paper establishes that concepts equivalent to modern political science thoughts were in practice as early as the Sangam period.
வள்ளுவர் கூறும் இல்வாழ்க்கை
The Domestic Life Described by Valluvar
To guide one's way of life, Thiruvalluvar delineates the principles of domestic life across twenty chapters under the section titled *Illaraviyal* (The Ethics of Domestic Life). Valluvar systematically outlines the essential attributes of domestic life and the ideal partner; the blessing of having children; the possession of love; hospitality; the habit of speaking pleasantly; gratitude; impartiality and adherence to virtue; self-restraint; moral conduct; fidelity (not coveting another's spouse); patience; freedom from envy; refraining from coveting others' wealth; avoiding backbiting; abstaining from idle speech; the fear of committing evil acts; living in harmony with the ways of the world; generosity; and attaining undying fame through these virtues. It is Valluvar’s view—and indeed the truth—that all these qualities are essential for both the man and the woman leading a domestic life. Let us now examine what Valluvar has to say about each of these aspects.
ஐங்குறுநூறு பகரும் குறிஞ்சி The Kurinji Landscape as Depicted in Ainkurunuru
The Kurinji Landscape as Depicted in Ainkurunuru
சங்க இலக்கியப் பெட்டகத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள எட்டுத்தொகை நூல்களில் ‘ஐங்குறுநூறு’ சிறப்பான இடத்தைப் பெறுகின்றது. இந்நூல் ஐந்திணைகளுக்கும் தனித்தனியே நூறு பாடல்கள் வீதம் ஐந்நூறு பாடல்களைக் கொண்டுள்ளது. புலவர் கபிலரால் பாடப்பட்ட குறிஞ்சித் திணைப் பாடல்களை மையமாகக் கொண்டு, குறிஞ்சி நில மக்களின் வாழ்வியல் முறைகளையும், அகத்திணைக் கோட்பாடுகளையும் இக்கட்டுரை ஆராய்கிறது. குறிஞ்சி நிலத்தின் புவியியல் சூழல், முதற் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் மற்றும் மக்களின் பொருளாதார, காதல் வாழ்க்கையை இந்நூலின் சான்றுகளாக அமைகின்றன. மேலும், பழந்தமிழ் இலக்கிய நூல்களின் சான்றுகளுடன் ஒப்பிடப்பட்டு, குறிஞ்சி நிலத்தின் பண்பாட்டுச் செழுமையை எடுத்துரைக்கின்றது.
Among the Ettuthogai (The Eight Anthologies)—which hold a unique place in the corpus of Sangam literature—the Ainkurunuru occupies a distinguished position. This work comprises five hundred poems, with one hundred dedicated to each of the five Thinai (landscape-based poetic modes). Focusing on the poems of the Kurinji landscape composed by the poet Kapilar, this article examines the lifestyles of the Kurinji people and the principles of Akathinai (the poetics of inner life). It draws upon evidence from the text regarding the geographical setting of the Kurinji region—including its Muthal-porul (primary elements of time and space), Karu-porul (characteristic features of the landscape), and Uri-porul (the specific emotional theme)—as well as the economic and romantic lives of its inhabitants. Furthermore, by drawing comparisons with other ancient Tamil literary works, the article highlights the cultural richness of the Kurinji landscape.
அறநூல்களில் (நட்பு) – ஓர் ஆய்வு ( பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்)
Friendship in Didactic Literature – A Study (The Eighteen Minor Works)
இவ்வாய்வு தமிழ் அறநூல்களில் இடம்பெறும் நட்புக் கருத்துகளை ஆய்வு செய்கிறது. குறிப்பாக திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி போன்ற நூல்களில் கூறப்படும் நட்பின் சிறப்புகள் இவ்வாய்வில் எடுத்துரைக்கப்படுகின்றன. உண்மையான நட்பிற்கு அன்பு, நம்பிக்கை, நேர்மை, உதவி, நன்றியுணர்வு மற்றும் நல்லறிவுரை ஆகியவை அடிப்படையாக இருப்பது விளக்கப்படுகிறது. நல்ல நட்பையும் தீய நட்பையும் வேறுபடுத்திப் பார்ப்பதுடன், ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வதற்கு முன்பு அவருடைய பண்புகளையும் செயல்களையும் ஆராய வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது. மேலும் துன்பக் காலத்தில் நட்பு, மாணவர் வாழ்க்கையில் நட்பு மற்றும் இன்றைய தொழில்நுட்ப உலகில் நட்பின் மாற்றங்கள் பற்றியும் இவ்வாய்வு குறிப்பிடுகிறது. காலம் மாறினாலும் உண்மையான நட்பின் அடிப்படை மதிப்புகளான அன்பு, நம்பிக்கை, நேர்மை, உதவி, நன்றியுணர்வு ஆகியவை மாறுவதில்லை என்பதே இவ்வாய்வின் முடிவாகும்.
This study examines the concept of friendship as presented in Tamil ethical literature, with particular reference to works such as the Thirukkural, Naladiyar, Pazhamozhi Nanuru, Iniyavai Narpathu, Sirupanchamoolam and Elathi. The study explains the importance of love, trust, honesty, mutual help, gratitude and moral guidance in true friendship. It also distinguishes genuine friendship from harmful friendship and highlights the need to examine a person's character before accepting them as a friend. The study further discusses friendship in times of difficulty, student life and the modern digital world. It concludes that although the forms of friendship may change with time, its basic values remain constant and continue to guide individuals towards good conduct and social harmony.
சிலப்பதிகாரம் உணர்த்தும் வாழ்வியல் முறைகள்
Ways of Life Conveyed by Silappathikaram
இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம் தமிழரின் பழந்தமிழ் வாழ்வியலை எடுத்துரைக்கும் சிறந்த காப்பியமாகும். இக்காப்பியத்தில் இடம்பெறும் கண்ணகி கோவலன் வாழ்க்கை, புகார், மதுரை, வஞ்சி ஆகிய நகரங்களின் சமூகச் சூழல் வழியாக அக்கால மக்களின் வாழ்க்கை முறைகள் வெளிப்படுத்தப்படுகின்றன. விருந்தோம்பல், கற்பு, அறம், நீதி, ஈகை, குடும்ப உறவு, தொழில், வணிகம், கலை, சமயம், அரசாட்சி போன்ற பல்வேறு வாழ்வியல் கூறுகளைச் சிலப்பதிகாரம் எடுத்துக்காட்டுகிறது. இவ்வாய்வு, காப்பியத்தில் இடம்பெறும் நிகழ்வுகளின் அடிப்படையில் தமிழர்களின் வாழ்வியல் நெறிகளை ஆராய்ந்து, அவை இன்றைய சமூகத்திற்கும் வழங்கும்
அறக்கருத்துகளை எடுத்துரைக்கிறதுSilappathikaram*, authored by Ilango Adigal, is a magnificent epic that portrays the traditional way of life of the Tamil people. The lifestyles of the people of that era are revealed through the lives of the protagonists, Kannagi and Kovalan, and the social environments of the cities of Puhar, Madurai, and Vanchi. The epic highlights various aspects of life, such as hospitality, chastity, righteousness, justice, generosity, family relationships, occupations, trade, arts, religion, and governance. This study examines the Tamil way of life based on the events depicted in the epic and articulates the ethical values it offers to contemporary society
எனது பார்வையில் அக்கால மருத்துவமும் இக்கால மருத்துவமும்
Medicine of the Past and Present: My Perspective
மனித வாழ்வில் உடல்நலம் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. நோய்களைத் தடுத்து உடல் நலத்தைப் பாதுகாப்பதற்காக மனிதன் காலங்காலமாகப் பல்வேறு மருத்துவ முறைகளைக் கடைப்பிடித்து வந்துள்ளான். தமிழர்களின் தொன்மையான மருத்துவ மரபுகளில் சிறப்பிடம் பெறுவது சித்த மருத்துவம் ஆகும். இயற்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான சித்த மருத்துவம், உடல், மனம், உணவு, வாழ்க்கை முறை ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்கிறது. இதற்கு மாறாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் வளர்ச்சி பெற்றது தற்கால நவீன மருத்துவம் ஆகும். இவ்விரு மருத்துவ முறைகளுக்கும் சில ஒற்றுமைகளும் பல வேற்றுமைகளும் காணப்படுகின்றன.
Health holds a vital place in human life. Throughout history, humans have adopted various medical practices to prevent disease and maintain physical well-being. Siddha medicine occupies a distinguished position among the ancient medical traditions of the Tamils. Rooted in nature, Siddha medicine takes a holistic approach, integrating the body, mind, diet, and lifestyle. In contrast, contemporary modern medicine has evolved based on advancements in science and technology. These two medical systems share certain similarities while also exhibiting numerous differences.
நாலடியாரில் புல்லினங்கள்
Bird Species in Naladiyar
அறநூல்கள் எனப் பகுக்கப்பெற்ற நாலடியார் காலத்தால் அழியாத ஆவணங்களாகும். அரிய அறச்சிந்தனைகள் அறிவியல் கூறும் அறுதியிடப்பட்ட இலக்கிய வடிவமாக மதிக்கப்படுகின்றன. அறமும், அறிவியலும் இழைந்து செல்லும் இயல்பினைக் கொண்டதாக நாலடியார் திகழ்கின்றது. பண்டைத் தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழும் தன்மையினை உடையவர்கள். இலக்கியங்களில் புலவர்கள் தங்கள் கருத்தினை புலப்படுத்தும் வண்ணம் தாம் காணும் தாவரங்களை உவமையாகவும் உள்ளுறையாகவும் சுட்டுகின்றனர். புலவர்களின் இத்தகைய உத்திமுறைகளே பண்டைத்தமிழர்களின் தாவரவியலறிவுக்குத் தக்கச் சான்றாகும். தாவரங்களை வளரியல்பின் அடிப்படையில் தாவரவியலாளர் புல், செடி, கொடி, மரம், மலர் என்று பாகுபடுத்துகின்றனர். வளரியல்பில் முதன்மை இடத்தைப் பெறுகின்ற புல்லினங்களின் தன்மை மற்றும் வாழிடங்கள் அறிவியல் காரணத்தோடு நாலடியார் வழி எடுத்தியம்பப்படுகின்றது. மேலும் புல்லினங்களின் அறிவியல் பெயர், வகைபாடு மற்றும் மருத்துவ பயன்களையும் நாலடியார் வழி ஆய்வதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.
Naladiyar*, classified among the texts on ethics (*Aranoolgal*), stands as a timeless document. It is revered for its profound ethical insights, which are presented through a well-defined literary structure that aligns with scientific principles. The text exemplifies an intrinsic blend of ethics and science. Ancient Tamils lived in harmony with nature; in their literature, poets frequently employed the flora they observed as similes and metaphors to convey their ideas. These poetic techniques serve as compelling evidence of the ancient Tamils' botanical knowledge. Botanists classify plants based on their growth habits—categorizing them as grasses, shrubs, creepers, trees, or flowering plants. *Naladiyar* elucidates the characteristics and habitats of grass species—which hold a primary place among these growth forms—offering explanations grounded in scientific reasoning. Furthermore, this research paper examines the scientific names, classifications, and medicinal uses of these grass species as presented in *Naladiyar*.
தமிழ் இலக்கியங்களில் வாழ்வியலும் பண்பாட்டுக் கூறுகளும்
Elements of Lifestyle and Culture in Tamil Literature
இலக்கியம் என்பது நுண்கலை. அதற்கெனத் தனித் தன்மையும் வளர்ச்சியுண்டு. காலத்தின் மாற்றத்திற்கேற்பத் தமிழ் இலக்கியங்களும் புதுப்பொலிவுடன் வளர்ச்சி நிலையை அடைந்து நம் மண்ணின் பழம்பெருமைகளையும், மானுட வாழ்வின் மகத்துவங்களையும் எதிர்வரும் தலைமுறையினருக்கு எடுத்துக் காட்டுகின்றன. மனிதனைப் பண்படுத்தும் மதிப்புகளை இலக்கியங்கள் பெற்றுத் திகழ்வதோடு வாழ்வின் வழிகாட்டியாகவும், சமுதாயத்தோடு மனிதனை ஒன்றிணையச் செய்யும் பாலமாகவும் திகழ்கின்றன. இலக்கிய வரலாற்றை ஒரு தேசத்தின் வாழ்க்கை வரலாறு எனச் சிறப்பித்து உரைப்பாரும் உளர். "அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்றார் ஔவையார். பெறற்கரிய மானிடப் பிறப்பைப் பெற்ற மனிதன் நன்முறையில் வாழ்வதற்குச் சில நெறிமுறைகளைப் பின்பற்றி இப்பிறப்பின் பொருளைச் சிறக்கச் செய்ய வேண்டும். அதற்கு நம் தமிழ் இலக்கியங்கள் வழிகாட்டியாக அமைகின்றன என்பதை வெளிக்கொணர்வதே இவ்வாய்வுக்களமாகும்.
Literature is a fine art, possessing its own unique character and trajectory of evolution. Adapting to the changing times, Tamil literature has flourished with renewed vitality, showcasing the ancient glories of our land and the magnificence of human existence to future generations. Beyond embodying values that refine human character, literature serves as a guide for life and a bridge connecting the individual with society. Some even characterize the history of literature as the biography of a nation. The poet Avvaiyar famously remarked, "Rare, indeed, is birth as a human being." Having attained this precious human life, one must adhere to certain principles to live meaningfully and nobly; this study aims to highlight how Tamil literature serves as a guiding light in that endeavor.
தமிழ் மொழி வளர்ச்சியில் அருளாளர்களும் புலவர்களும்
Benefactors and Poets in the Development of the Tamil Language
தமிழ் மொழி வளர்ச்சிக்குச் சைவ சமய அருளாளர்களும் புலவர்களும் தம் படைப்புக்கள் வழி துணை நின்றமையைத் தக்கச் சான்றுகள் வழி ஆய்வுக் கட்டுரை கண்டு காட்டுகிறது.
This research paper demonstrates, through appropriate evidence, how Saivite saints and poets contributed to the development of the Tamil language through their literary works.
