ஆய்வுச் சுருக்கம் எழுதுவது எப்படி? – தமிழ், ஆங்கிலச் சுருக்கங்களுக்கான வழிகாட்டி
ஒரு கட்டுரையை வாசகர்களும் மதிப்பாய்வாளர்களும் தரவுத்தளங்களும் முதலில் அறிவது அதன் ஆய்வுச் சுருக்கத்தின் (Abstract) வழியாகத்தான். களஞ்சியம் இதழ், ஒவ்வொரு கட்டுரைக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் 150–250 சொற்களில் சுருக்கம் கேட்கிறது. அதை எவ்வாறு எழுதுவது என்பதை இப்பக்கம் விளக்குகிறது. சுருக்கத்தின் நான்கு பகுதிகள் நோக்கம்: இக்கட்டுரை எந்தக் கேள்விக்கு விடை தேடுகிறது? (1–2 வாக்கியங்கள்) மூலங்களும் ஆய்வுமுறையும்: எந்த நூல்கள், எந்தப் பதிப்பு, எந்த அணுகுமுறை – பகுப்பாய்வு, ஒப்பீடு, களஆய்வு? (1–2 வாக்கியங்கள்) முதன்மைக் கண்டறிதல்கள்:…
