Manaimarutchi Poems in Natrinai
- Section
- Articles
- Published
- Pages
- 1-8
Abstract · தமிழ்
சங்க இலக்கியத்தில், தலைவனுடன் உடன்போக்குச் சென்ற தலைவி தன் குடும்பத்தைவிட்டுப் பிரிந்த நிலை, அவளுடைய நற்றாயின் ஆழ்ந்த உணர்வுகளின் வழியாகச் சித்திரிக்கப்படுகிறது. அன்பிலும் அரவணைப்பிலும் வசதியிலும் செல்வச் செழிப்பிலும் வளர்ந்த தலைவி, தன் இல்லத்தைவிட்டுத் தலைவனுடன் கடினமான பாலை நிலத்தின் வழியே செல்கிறாள். மகளின் இளமை, விளையாட்டுத் தன்மை, இல்லத்தில் அவள் வாழ்ந்த வசதியான வாழ்க்கை, பயணத்தில் அவள் எதிர்கொள்ளக்கூடிய துன்பங்கள் ஆகியவற்றை எண்ணி நற்றாய் பெரிதும் கவலையுற்று வருந்துகிறாள். மகளைப் பற்றிய நினைவுகளும் அவளுடைய பாதுகாப்பு, நலன் குறித்த அக்கறையும் தாயன்பின் ஆழத்தையும் பிரிவுத் துயரையும் வெளிப்படுத்துகின்றன. நற்றாயின் இவ்வுணர்வு நிலை ‘மனைமருட்சி’ என்னும் கருத்தாக்கத்தின் வழி வெளிப்படுகிறது. நற்றிணையின் உடன்போக்குப் பாடல்களுள் அமைந்த மனைமருட்சிப் பாடல்களில் சித்திரிக்கப்படும் நற்றாயின் மனநிலையையும் உணர்வு நிலையையும் இவ்வாய்வு ஆராய்கிறது. தாயன்பு, பிரிவு, மகளைப் பற்றிய நினைவுகள், அவளுடைய பயணம் குறித்த பதற்றம், அவளுடைய எதிர்கால நலன் குறித்த அக்கறை ஆகியவற்றை இவ்வாய்வு மையமாகக் கொள்கிறது.
Keywords: அகத்திணை, சங்கக் காதலர், தொல்காப்பியம், நற்றிணை, மனைமருட்சி
Abstract · English
In Sangam literature, the separation of the heroine from her family after she leaves with the hero is portrayed through the deep emotions of Natrai, the heroine’s mother. The heroine, who has grown up with love, care, comfort, and prosperity, leaves her home and travels with the hero through the difficult Palai landscape. Thinking about her daughter’s young age, playful nature, comfortable life at home, and the hardships she may face on the journey, Natrai becomes deeply worried and distressed. Her memories of her daughter and her concern for her safety and well-being reveal the depth of maternal love and the pain of separation. This emotional state of Natrai is expressed through the concept of ‘Manai Marutchi’. The present study examines the mental and emotional state of Natrai as portrayed in the Manaimarutchi poems found among the Udanpokku poems in Natrinai. The study focuses on maternal love, separation, memories of the daughter, anxiety about her journey, and concern for her future well-being.
Keywords: Agathinai, Sangam Lovers, Tholkapiyam, Natrinai, Manaimarutchi
References
- 1. தொல்காப்பியப் பொருளதிகாரம், இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. மே 2005
- 2. நற்றிணை, அ. நாராயணசாமி ஐயர் (உ.ஆ.), தி.தெ.சை.சி.நூ.கழகம், சென்னை. 1956
- 3. கலித்தொகை, நச்சினார்க்கினியர் (உ.ஆ.), தி.தெ.சை.சி.நூ.கழகம், சென்னை. 1958
- 4. குறுந்தொகை, மு. சண்முகம்பிள்ளை (ப.ஆ.), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 1974
- 5. நற்றிணை மூலமும் விளக்கவுரையும், ஔவை. சு. துரைசாமிப்பிள்ளை, அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை - 17. 1968
- 6. சங்க இலக்கியம், எஸ். வையாபுரிப்பிள்ளை, பாரி நிலையம், சென்னை. 1967
- 7. சங்க இலக்கியம் அகநானூறு (3 தொகுதிகள்), அ. மாணிக்கனார், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை. 1999
- 8. சங்க இலக்கியம் ஐங்குறுநூறு (2 தொகுதிகள்), அ. மாணிக்கனார், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை. 1999
- 9. கலித்தொகை, நச்சினார்கினியர், (உ.ஆ.), தி.தெ.சை.சி.நூ.கழகம், சென்னை. 1958
- 10. பரிபாடல், பொ.வே. சோமசுந்தரனார், தி.தெ.சை.சி.நூ.கழகம், சென்னை.
- 11. நற்றிணை நானூறு, பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், தி.தெ.சை.சி.நூ.கழகம், 1956
