
கோயம்புத்தூர் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த் துறையும் களஞ்சியம் – சர்வதேச தமிழ் ஆய்வு இதழும் இணைந்து “பண்டைத் தமிழரின் வாழ்வியல் நெறிமுறைகள்” என்ற பொருண்மையில் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கை 17.06.2026 அன்று நடத்தத் திட்டமிட்டன. கருத்தரங்க அறிவிப்பு, பதிவு, கட்டண விவரங்கள் கருத்தரங்க அறிவிப்புப் பக்கத்தில் உள்ளன.
கருத்தரங்கில் வாசிக்கப்படும் கட்டுரை, ஆய்விதழ்க் கட்டுரையாக வெளியாக என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பக்கம் விளக்குகிறது.
முக்கிய நாள்கள் (அறிவிப்பின்படி)
- கூகுள் படிவப் பதிவுக்குக் கடைசி நாள்: 20.05.2026
- கட்டுரை சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 31.05.2026
- கருத்தரங்கம்: 17.06.2026, டி.கே.பி. கருத்தரங்கக் கூடம், சங்கரா கல்லூரி
கருத்தரங்கக் கட்டுரையும் மதிப்பாய்வும்
கருத்தரங்கில் வாசித்ததாலேயே ஒரு கட்டுரை ஆய்விதழில் ஏற்கப்படுவதில்லை. சிறப்பிதழுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு கட்டுரையும் வழக்கமான இதழ்க் கட்டுரைகளைப் போலவே இரட்டை மறைவு முறையில் குறைந்தது இரண்டு தனித்த மதிப்பாய்வாளர்களால் மதிப்பிடப்படும்; ஒப்புமைச் சோதனையும் உண்டு. இறுதி முடிவு இதழின் ஆசிரியர் குழுவுடையது. விவரம்: சிறப்பிதழ்கள், மதிப்பாய்வு முறை.
கருத்தரங்கக் கட்டுரையை ஆய்விதழ்க் கட்டுரையாக மாற்றுவது
- வாசிப்புக்கான உரைநடையை ஆய்வுக் கட்டுரை அமைப்புக்கு மாற்றுங்கள்: முன்னுரை, எண்ணிட்ட உட்தலைப்புகள், நிறைவுரை.
- தமிழிலும் ஆங்கிலத்திலும் தலைப்பு, 150–250 சொல் ஆய்வுச் சுருக்கம், 3–5 திறவுச் சொற்கள்.
- ஒவ்வொரு மேற்கோள் பாடலுக்கும் பதிப்பும் பாடல் எண்ணும்; MLA 8 துணைநூற்பட்டியல்.
- மேற்கோள்கள் உட்பட 4,000 சொற்களுக்குள்.
- கருத்தரங்கில் பெற்ற கருத்துகளைக் கொண்டு வாதத்தை மேம்படுத்துங்கள்.
சிறப்பிதழ்
இக்கருத்தரங்கின் பொருண்மையில் அமைந்த “The Life Codes of Ancient Tamils” சிறப்பிதழ் வெளியாகியுள்ளது. அதையும் பிற சிறப்பிதழ்களையும் சிறப்பிதழ்கள் பக்கத்தில் காணலாம்.
