குறுந்தொகையில் பல்துறை ஆய்வுகள்

Multidisciplinary Studies on Kuruntokai

  • மாலினி இரா https://orcid.org/0000-0002-5807-0509 உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோயம்புத்தூர் – 14
Section
Articles
Published
Pages
81-91

PDF (தமிழ்)

Abstract · தமிழ்

தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொடர்ச்சியான வரலாற்றுச் சிறப்புடையது. சங்க காலத்தில் தோன்றி, காலம் தோறும் உருவெடுத்த பல்வேறு இலக்கியங்களும் இலக்கணங்களும் தமிழ்மொழியின் ஆழத்தையும் அகலத்தையும் எடுத்தியம்புகின்றன. சங்க இலக்கியத் தொகுப்புகளில் ஒன்றான குறுந்தொகை, அகப்பொருள் சார்ந்த குறுங்கவிதைகளின் தொகுப்பாக அமைந்திருந்தாலும், அது காதல் உணர்வுகளை மட்டும் பதிவு செய்யும் இலக்கியமாக அமையவில்லை. இயற்கை, உயிரினங்கள், தாவரங்கள், நிலவியல், காலநிலை, வேளாண்மை, பொருளாதாரம், சமூக அமைப்பு, குடும்ப உறவுகள், பெண்களின் நிலை, உளவியல், மருத்துவ அறிவு, உணவு, தொழில்கள், மொழியியல், அழகியல் போன்ற பல்வேறு அறிவுத்துறைகளுக்கான தரவுகளையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது.

இவ்வகையில் குறுந்தொகையை ஒரே ஒரு இலக்கியக் கோணத்தில் அணுகாமல், மொழியியல், இலக்கியவியல், வரலாறு, மானிடவியல், சமூகவியல், உளவியல், சூழலியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், நிலவியல், வேளாண்மை, பொருளாதாரம், மருத்துவம், பெண்ணியம், தகவல் தொடர்பியல், அறிவியல், பண்பாட்டியல் போன்ற பல்துறைகளுடன் இணைத்து ஆராய்வது தமிழ் வளர்ச்சிக்குப் புதிய அறிவுப் பரப்பை உருவாக்கும். இத்தகைய பல்துறை ஆய்வு முறையின் வாயிலாகப் பழந்தமிழரின் வாழ்வியல் அறிவை நவீன அறிவியல் மொழியில் மீள்பதிவு செய்யவும், தமிழை அறிவு உருவாக்கும் மொழியாக நிலைநிறுத்தவும் முடியும். சமூகவியல் நோக்கில் அன்றைய மனித உறவுகளையும், தாவரவியல் மற்றும் விலங்கியல் நோக்கில் இயற்கை அறிவையும், உளவியல் நோக்கில் மனித மன உணர்வுகளையும், மொழியியல் நோக்கில் சொற்களின் வரலாற்றுப் பரிணாமத்தையும், ஆராயும்போது தமிழ்மொழி உலகத் தரம் வாய்ந்த உயர் தனிச் செம்மொழி என்பதை மெய்ப்பிக்கின்றது.

Keywords: குறுந்தொகை, பல்துறை ஆய்வு, தமிழ் வளர்ச்சி, சங்க இலக்கியம், சூழலியல், பண்பாடு, மொழியியல், அறிவு மரபு

Abstract · English

The Tamil language boasts a continuous history spanning over two millennia. The diverse literary and grammatical works that emerged from the Sangam era onwards bear witness to the depth and breadth of the language. Although Kuruntokai—one of the Sangam anthologies—consists of short poems centered on Akam (inner life/love), it is not merely a record of romantic emotions. It encapsulates data across a wide spectrum of disciplines, including nature, fauna, flora, geography, climate, agriculture, economics, social structure, family dynamics, the status of women, psychology, medical knowledge, cuisine, occupations, linguistics, and aesthetics.

Approaching Kuruntokai through a multidisciplinary lens—integrating linguistics, literary studies, history, anthropology, sociology, psychology, ecology, biology, botany, zoology, geography, agriculture, economics, medicine, feminism, communication studies, science, and cultural studies—will open up new intellectual horizons for the advancement of Tamil. Such a multidisciplinary research approach enables the re-articulation of the ancient Tamils' knowledge of life in the language of modern science and helps establish Tamil as a language of knowledge creation. Examining human relationships from a sociological perspective, knowledge of nature through botany and zoology, human emotions through psychology, and the historical evolution of words through linguistics serves to demonstrate that Tamil is a unique, classical language of world-class stature.

Keywords: Kuruntokai, multidisciplinary study, Tamil development, Sangam literature, ecology, culture, linguistics, intellectual tradition

References

  1. 1. சங்க இலக்கியம் மூலமும் உரையும், உரையாசிரியர் பேராசிரியர் முனைவர் இரா. பிரேமா, வர்த்தமானன் பதிப்பகம், தி. நகர், சென்னை-600 017 பதிப்பு:1999
  2. 2. தமிழர் பண்பாட்டு வரலாறு , வானமாமலை நா.நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (NCBH), சென்னை.
  3. 3. சங்கத் தமிழரின் வாழ்வியலும் பண்பாடும், டாக்டர் மா. இராசமாணிக்கனார், பூம்புகார் பதிப்பகம், சென்னை.
  4. 4. சங்க இலக்கியத்தில் அறம், முனைவர் க. தணிகாசலம் பெருவெக்டார், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
Scroll to Top