Abstract
பண்பாடு என்பது பண், பாடு ஆகிய இருசொற்களின் சேர்க்கையாகும். உலக நடைமுறையையும் சமுதாய நடைமுறையையும் அறிந்து அதற்கேற்ப வாழ்வதே பண்பெனப்படு என கலித்தொகை கூறுகிறது. பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம் என்றும் நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை எனவும் அழைக்கப்படுகிறது. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளான காதல், வீரம், நட்பு, விருந்தோம்பல், ஈகை, கொடை, கற்புடமை, உலக ஒருமைப்பாடு ஆகியவற்றை விளக்கும் இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடியாக அமைகின்றன. இதனையே முன்னது அகக்கூறு என்றும் பின்னது புறக்கூறு எனவும் பொருள்படுகிறது. தமிழர் வாழ்வை அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டாக இலக்கணம் வகுத்து வாழ்ந்தமை பண்பாட்டின் சிகரமாகக் கருதப்படுகிறது. கல்தோன்றிய காலமக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, அரசு, அமைச்சு, ஆட்சிமுறை, போர், வீரம், காதல் போன்றவற்றை நமக்கு எடுத்துரைக்கின்றன. பொதுவாகவே மக்களுடைய செயற்பாட்டுக் கோலங்களையும், அத்தகைய செயற்பாடுகளுக்கு முக்கியத்துவத்தையும், சிறப்பு தன்மையும் வழங்கக்கூடிய குறியீட்டு அமைப்பையே பண்பாடு என வரையறை செய்யப்படுகிறது. இது ஒரு சமூகத்தின் விழுமியங்கள், நம்பிக்கைகள், கலைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் அறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான வாழ்க்கை முறையாகும். பண்பாடு தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டுச் சமூகத்தின் அடையாளமாக விளங்குகிறது. இவ்வாறான தொன்மையான வரலாறு கொண்ட தமிழர்கள் பண்பாடு கூறுகள் பற்றி ஆய்வு செய்வது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
Keywords
References
7 references- [1]. ஐயனாரிதனார் - புறப்பொருள் வெண்பா மாலை
- [2]. சாரதாபதிப்பகம், சென்னை
- [3]. 2.தேவநேயப் பாவாணர், ஞா. திருக்குறள்
- [4]. தமிழ் மரபுரை ஸ்ரீ இந்து ஆழுளிகேஷன்ஸ், சென்னை.
- [5]. பிரபாகரன் இர. - புறநானூறு மூலமும் எளிய உரையும் (பகுதி - 1), காவ்யா பதிப்பகம் சென்னை.
- [6]. பாலசுப்பிரமணியன். கு.வெ(உ.ஆ) - புறநானூறு (தொகுதி1) நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி)லிட், அம்பத்தூர், சென்னை.
- [7]. முனைவர் வி. நாகராசன் கத்துப்பாட்டு மூலமும உரையும், பதிப்பாசிரியர் - ஆனைவர் ஆ.ம.பரிமணம் நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை